விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் போன் செய்து குழந்தை விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அப்போது தங்கமயிலின் அம்மா, மாப்பிளை உன்னிடம் எப்படி நடந்து கொள்கிறார்? உன்னுடைய கைக்குள் வைக்க பாரு என்று தேவையில்லாததெல்லாம் சொல்லிக் கொடுத்தார். ஆனால், தங்கமயில் தன்னுடைய அம்மாவை திட்டி விட்டார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே ஒன்றாக அமர்ந்து சாப்பிட்டு கொண்டு இருந்தார்கள். செந்தில்-கதிர் மட்டும் வரவே இல்லை. இதனால் பாண்டியன், சாப்பிட கூட வர முடியாதா? என்று திட்டினார்.

அந்த சமயம் பார்த்து கதிர்- செந்தில் இருவருமே வந்து விட்டார்கள். அப்போது பாண்டியன், இனி லேட்டாக வந்தால் சோற்றில் கை வைக்கக்கூடாது. பட்டினியாக இருக்கட்டும் என்று சொன்னார். இதனால் கோபப்பட்டு செந்தில்- கதிர் இருவருமே திட்டு வாங்கன மானங்கெட்ட சோறு சாப்பிட வேண்டிய அவசியம் இல்லை என்று உள்ளே சென்று விட்டார்கள். பாண்டியன் சென்ற பிறகு கோமதி செந்தில்- கதிர் இருவரையும் அழைத்து சாப்பாடு போட்டார். அந்த சமயத்தில் மீண்டும் பாண்டியன் உள்ளே வருவதால் கோமதிக்கு என்ன செய்வது என்றே புரியவில்லை. பாண்டியன் ஏதாவது சொல்லிவிடுவார் கோமதி அவரை அழைத்து சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் குமாரும் சக்தி வேலும் சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது குமார், அரசியை சாப்பாட்டை பரிமாற சொன்னார் . வேண்டுமென்றே குமார், அரசி சாப்பாடு போடும் போது தட்டை நகர்த்தி விட்டார். இதனால் கோபப்பட்டு குமார், அரசியை மோசமாக திட்டி இருந்தார். அதோடு அரசியும், பாண்டியன் குடும்பத்தையும் திட்டிக் கொண்டிருந்தார். இதனால் சக்திவேல் சந்தோஷப்பட்டார். அப்போது வந்த அப்பத்தா, குமாரை திட்டி இருந்தார். பின் ரூமிற்கு வந்த குமார், அரசியிடம் மீண்டும் வம்பு இழுத்துக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட அரசி, குமாரை அடித்து கீழே தள்ளி கழுத்தை கயிறு வைத்து நெருக்கினார்.

நேற்று எபிசோட்:
மூச்சு விட முடியாமல் குமார் திணறினார். அதற்குப்பின் அரசி, குமாரை மிரட்டி வெளியே போய் தூங்க சொன்னார். இன்னொரு பக்கம் செந்திலுக்கு போன் செய்த மீனாவின் அப்பா வீட்டிற்கு வர சொன்னார். செந்தில் ரொம்பவே பதறினார். பின் மீனா- செந்தில் இருவருமே கிளம்பும்போது பாண்டியன், செந்திலுக்கு வேலை வைத்தார். உடனே மீனா ஏதோ காரணம் சொல்லி செந்திலை அழைத்து கொண்டு தன் அப்பா வீட்டிற்கு போனார்கள். அப்போது செந்தில், வேலை விஷயத்தில் ஏதாவது பிரச்சனையா? என்று கேட்டார் உடனே மீனாவின் அப்பா, பதற வேண்டாம். ஆர்டர் போட்டு இருக்கிறார்கள். இன்னும் கொஞ்ச நேரத்தில் தெரிந்துவிடும் என்று சொன்னார்கள். இதை கேட்டவுடன் செந்தில் சந்தோஷப்படுகிறார்.
இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனாவின் அப்பா, நாம் ஒரு இடத்திற்கு போக வேண்டும். கிளம்புங்கள் என்று சொல்கிறார். மீனா, கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் தானே? பணம் ஏமாத்திட மாட்டார்களே? என்று பயப்படுகிறார். அதற்கு அவருடைய அப்பாவும் ஆறுதல் சொல்லி அவர்களை அழைத்து வருகிறார்.
இன்னொரு பக்கம் பாண்டியன், செந்திலுக்கு போன் மேல் போன் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், செந்தில் போன் எடுக்கவே இல்லை. பின் மீனாவிற்கு ஃபோன் செய்ய, அவருமே போன் எடுக்கவில்லை. இதனால் பாண்டியன் கோபப்படுகிறார்.

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் அலுவலகத்திற்கு சென்ற செந்தில், மீனா, மீனாவின் அப்பா மூவருமே ஒரு அதிகாரியை சந்தித்து பேசுகிறார்கள். அப்போது அவர், செந்தில் வேலைக்கான ஆர்டரை கையில் கொடுக்கிறார். அதை பார்த்தவுடன் செந்திலுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை ஷாக்கில் உறைந்து போய் இருக்கிறார். அதை நம்புவதா? நம்ப வேண்டாமா? என்று கூட புரியாத அளவிற்கு செந்தில் இருக்கிறார். அப்போது மீனாவின் அப்பா, இது உங்களுடைய வேலை சீக்கிரத்திலேயே உங்களுக்கு பெர்மனென்ட் ஆகிவிடும் தைரியமாக இருங்கள் என்று சொல்கிறார். உடனே செந்தில் தன்னுடைய மாமனாருக்கும் மீனாவிற்கும் எமோஷனலாக நன்றி சொல்லி சொல்கிறார். சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் செந்தில் குதித்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






