வீட்டுக்கு தெரியாமல் டியூசன் எடுக்கும் ராஜி, பாண்டியன் எடுத்த முடிவு, அதிர்ச்சியில் தங்கமயில் – விறுவிறுப்பில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2

0
491
- Advertisement -

விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2”. அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை மையமாக வைத்து ஒளிபரப்பாகி வருகிறது. சீரியலில் பாண்டியன் தன் பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியனின் இரண்டாவது மற்றும் மூன்றாவது மகன்களுக்கு எதிர்பாராத விதமாக காதல் திருமணம் நடந்து விடுகிறது. இதனால் பாண்டியன் ரொம்பவே மனம் உடைந்து விடுகிறார். பின் மூத்த மகன் சரவணனுக்கு எப்படியோ போராடி தங்கமயிலை திருமணம் செய்து வைத்து விடுகிறார்.

-விளம்பரம்-

தங்கமயில் வீட்டுக்கு வந்ததிலிருந்து எல்லா வேலைகளையும் இழுத்துப் போட்டுக் கொண்டு செய்கிறார். இதனால் பாண்டியன் வீட்டில் கலாட்டா கலவரங்களாக இருக்கிறது. ஆனால், தங்கமயில் செய்யும் வேலைகள் மற்ற மருமகளுக்கும், மாமியாருக்குமே பிடிக்கவில்லை. அது மட்டும் இல்லாமல் இவர் மாமனாரிடம் நல்ல பெயர் வாங்க வேண்டும் என்று வீட்டில் உள்ள மற்றவர்களை போட்டுக் கொடுத்துக் கொண்டு தேவையில்லாத வேலைகளை செய்கிறார். மேலும், கடந்த வாரம், ஹனிமூன் போக தங்கமயில் போட்ட திட்டம் கைக்கூடியது. ஒருவழியாக ஹனிமூன் போக பாண்டியன் ஒத்து கொள்கிறார்.

- Advertisement -

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:

இன்னொரு பக்கம், செந்தில் தன்னுடைய மனைவிக்காக மாமனார் நினைத்த கனவை நிறைவேற்ற போராடுகிறார். இதை பார்த்து மீனா சந்தோஷப்படுகிறார். கதிர் எப்படியாவது வீட்டில் சொன்ன பணத்தை கொடுக்க வேண்டும் என்று இரவும் பகலும் பார்க்காமல் விடுமுறை நாட்களில் கூட கார் ஓட்ட செல்கிறார். இதை அறிந்த ராஜு ரொம்பவே வருத்தப்படுகிறார். இதை எல்லாம் பார்த்த கோமதி, ஹனிமூனுக்கு மூன்று ஜோடியையும் அனுப்பி வைக்க வேண்டும் என்று சொல்ல பாண்டியன் மறுக்கிறார். இதனால் கோமதி பயங்கரமாக சண்டை போடுகிறார். இறுதியில் பாண்டியன் குழம்பி போய் இருக்கிறார்.

சீரியல் கதை:

இப்படி இருக்கும் நிலையில் நேற்று எபிசோடில் கதிர் தூங்காமல் இரவில் கண் விழித்து கார் ஓட்டுவதை நினைத்து கோமதி ரொம்பவே வருத்தப்பட்டு பேசுகிறார். இதை அவர், பாண்டியன் இடம் சொல்ல வீட்டில் கலவரம் வெடித்தது. வழக்கம்போல் பாண்டியன், கதிரை தீட்டி இருந்தார். கடைசியில் பாண்டியன், என்னோட கடைக்கு வந்து கதிரை வேலை செய்ய சொல்லு. அதற்கான சம்பளத்தை தருகிறேன் என்று சொல்கிறார். இதனால் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால், கதிர் வர முடியாது என்று சொல்லிவிடுகிறார். இதை எல்லாம் எதிர் வீட்டில் இருக்கும் கோமதியின் அம்மா கேட்டு அழுகிறார். நான் சாவதற்குள் என் மகளிடம் பேச வேண்டும். அதற்கு முடியாதா? என்று புலம்பி அழுகிறார்.

-விளம்பரம்-

நேற்று எபிசோட்:

அந்த சமயத்தில் வந்த அவருடைய மற்ற இரண்டு மகன்கள், திட்டி அவரை இழுத்து வெளியே தள்ளி விடுகிறார்கள். இதையெல்லாம் பாண்டியன், கோமதி பார்த்து கவலைப்படுகிறார்கள். கடைசியில் பஞ்சாயத்து முடிந்து அவருடைய அம்மாவை அவர்களுடைய மகன்கள் கூட்டிக் கொண்டு போகிறார்கள். உண்மையை அறிந்த கோமதி தன்னுடைய அம்மாவை நினைத்து அழுகிறார். எல்லோரும் அவருக்கு ஆறுதல் சொல்கிறார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன், கோமதியை அவர் அம்மாவிடம் சேர்த்து வைக்க வேண்டும் என்று நினைக்கிறார்.

இன்றைய எபிசோட்:

இந்நிலையில் இன்றைய எபிசோட்டில், ராஜி டியூஷன் எடுப்பதற்கு வீட்டில் அரசாங்க வேலைக்கு படிக்க போகிறேன் என்று பொய் சொல்லி கிளம்புகிறார். இதைப்பற்றி பாண்டியனிடம் ராஜி சொல்கிறார். வீட்டில் எல்லோரும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டும் சமாளித்து விடுகிறார்கள் மீனா-ராஜி. கடைசியில் பாண்டியனிடம் சம்மதம் தெரிவிக்கிறார். பின் பாண்டியன், நீங்கள் மூணு பேருமே லீவு கேட்க முடியுமா? சரவணனுடன் ஹனிமூனுக்கு அனுப்பி வைக்கிறேன் என்று சொன்னவுடன் எல்லோருமே சந்தோஷப்படுகிறார்கள். ஆனால் தங்கமயில் மட்டும் அதிர்ச்சியாகி கோவப்பட்டு நிற்கிறார். இனிவரும் நாட்களில் மூன்று ஜோடியும் ஹனிமூன் செல்வார்களா? தங்கமயில் வேறு திட்டம் போடுவாரா? ராஜி டியூஷன் எடுக்கும் விஷயம் வெளிவருமா? போன்ற விறுவிறுப்பில் சீரியல் சென்று கொண்டிருக்கின்றது.

Advertisement