விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. இந்த சீரியல் கடந்த ஐந்து ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி இருந்தது. கடந்த ஆண்டு தான் பாண்டியன் ஸ்டோர்ஸ் முதல் பாகம் நிறைவடைந்தது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது.

இரண்டாவது சீசன் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை வைத்து இருக்கிறது மேலும், முதல் சீசனில் அண்ணனாக நடித்த ஸ்டாலின் தற்போது அப்பாவாக நடிக்கிறார். ஸ்டாலினுக்கு மனைவியாக நிரோஷா நடிக்கிறார். மேலும், இவர்களுடைய மகன்களாக விஜே கதிர், வெங்கட், ஆகாஷ் ஆகியோர் நடிக்கிறார்கள்.
இந்த சீரியலில் புது முகங்கள் சில பேர் இருந்தாலும், பழைய முகங்களும் இருக்கிறார்கள். சீரியலில் தந்தை பாண்டியனுக்கு மூன்று மகன்கள், இரண்டு மகள்கள். பாண்டியனுக்கு பிள்ளைகளை தன்னுடைய கட்டுக்கோப்பில் வளர்த்து வருகிறார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தற்போது சீரியலில் பாண்டியன் குடும்பத்தை பழி வாங்க குமார், அரசி கடத்தி சென்று விடுகிறார். ஆனால், அரசி தன் குடும்பத்தின் மானத்தை காப்பாற்றுவதற்காக குமாரை திருமணம் செய்ததாக பொய் சொல்லி குமார் வீட்டிற்கு சென்று விடுகிறார். இதனால் பாண்டியனின் குடும்பம் உடைந்து விடுகிறது. அரசியை நினைத்து எல்லோருமே வேதனையில் இருக்கிறார்கள். இன்னொரு பக்கம் குமார் எப்படியாவது அரசியை பழிவாங்க வேண்டும் என்று தினம் தினம் ஏதாவது ஒரு டார்ச்சர் செய்து கொண்டிருக்கிறார். ஆனால், அரசி அதற்கெல்லாம் பதிலடி கொடுத்துக் கொண்டுதான் வருகிறார்.

ரிஹானா குறித்த தகவல்:
மேலும், இந்த சீரியலில் மாரி என்ற கதாபாத்திரத்தில் நடித்திருந்தவர் ரிஹானா. இவர் இதற்கு முன்பே சின்னத்திரை தொடர்களில் நடித்திருக்கிறார். அதன் மூலம் தான் இவருக்கு பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிக்கும் வாய்ப்பு கிடைத்தது. ஆனால், திடீரென்று இவர் சீரியலை விட்டு விலகிவிட்டார். தற்போது இவர் சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் ஆனந்த ராகம் சீரியலில் நடித்துக் கொண்டிருக்கிறார். இப்படி இருக்கும் நிலையில் ரிஹானா மீது மோசடி புகார் கொடுக்கப்பட்டிருக்கும் தகவல் தான் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

ரிஹானா மீது புகார்:
அதாவது, சென்னை பூந்தமல்லி காவல் நிலையத்தில் ராஜ் கண்ணப்பன் என்ற தொழிலதிபர் தான் இந்த புகாரை கொடுத்திருக்கிறார். அதில் அவர், ரிஹானாவிற்கு ஏற்கனவே ஹபிபுல்லா என்பவரை திருமணம் செய்திருக்கிறார். ஆனால், அவரை விவகாரத்தை செய்யாமலே என்னை திருமணம் செய்து கொண்டார். இது எனக்கு லேட்டாக தான் தெரிந்தது. ரிஹானாவிற்கு நான் ஒன்பது லட்சம், அதற்குப் பின்னர் சிறுக சிறுக 9.5 லட்சமும் பணத்தை ஆன்லைன் மூலம் கொடுத்து இருக்கிறேன். திருமணத்திற்கு பிறகு ரிஹானாவை பூந்தமல்லியில் உள்ள வீட்டில் வசிப்பதற்கு அழைத்து போனேன். அப்போது ரிஹானா, சின்னத்திரையில் நடிக்க வேண்டும் என்பதால் பலருடன் பழக வேண்டும்.
https://www.youtube.com/watch?v=3z6xNMD-ork
போலீஸ் விசாரணை:
இது எல்லாம் கண்டும் காணாமல் இருக்க வேண்டும் என்று சொன்னார். பின் கொஞ்சம் கொஞ்சமாக என்னிடம் இருந்து 18.5 லட்சத்தை ரிஹானா ஏமாற்றி இருக்கிறார். ரிஹானாவின் தாய் மும்தாஜ், அவருடைய முதல் கணவர் மீது நடவடிக்கை எடுத்து என்னுடைய பணத்தை மீட்டு தர வேண்டும் என்று கூறியிருக்கிறார். இதை அடுத்து ராஜ் கண்ணப்பன் அளித்த புகாரை போலீசார் விசாரித்து வருகிறார்கள். மேலும், ரிஹானா, அவருடைய தாய் மற்றும் முதல் கணவன் ஆகியோரை விசாரித்து வருகிறார்கள். தற்போது இந்த விவகாரம் சின்னத்திரை வட்டாரத்தில் அதிர்ச்சி ஏற்படுத்தி இருக்கிறது.






