விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனா, சுகன்யா தான் கல்லூரிக்கு குமாரை வர வைத்தார். இதற்கு முன்பே குமாரை திருமணம் செய்து கொள் என்றெல்லாம் அரசிடம் பேசி இருந்தார். அரசிக்கு தேவையில்லாமல் சுகன்யா சொல்லி கொடுத்தார். இதனால் பழனிக்கு பயங்கர கோபம் வருகிறது. பின் இதைப்பற்றி அவர் சுகன்யாவிடம் பேசுகிறார். உடனே சுகன்யா, இப்போதுதான் உனக்கு ஞானம் பிறந்ததா? யார் சொல்லி இப்படியெல்லாம் பேசுகிறார்? என்று மீனாவையும் பழனியையும் சேர்த்து வைத்து ரொம்ப மோசமாக பேசி இருந்தார். இதனால் கோபப்பட்ட பழனி, சுகன்யா கன்னத்தில் அடித்து கழுத்தை பிடிக்கப் போனார். கோபத்தில் சுகன்யா அழுது டிராமா செய்தார். பாண்டியன்- கோமதி இருவருமே பதறி இருந்தார்கள்.

சுகன்யா, பயங்கரமாக கத்தி ஆர்ப்பாட்டம் செய்து கொண்டிருந்தார். பாண்டியன் குடும்பம் எல்லோருமே கதவை தட்டி இருந்தார்கள். பின் கதவை திறந்த பழனி, ஒன்னும் இல்லை. சும்மா பேசிக்கொண்டிருந்தோம் என்றார். உடனே சுகன்யா, ஒரு பெண்ணிடம் எப்படி நடந்து கொள்வது என்று சொல்லக்கூடாதா? நான் அவர் பொண்டாட்டி தான். இருந்தாலும் என் இடம் தவறாக நடந்து கொள்வதா? என்று மோசமான பழியை பழனி மீது போட்டார். இதைக் கேட்டவுடன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆனார்கள். பின் பாண்டியன், பழனியை திட்டிவிட்டு சென்றார். பழனிக்கு என்ன சொல்வதென்று தெரியாமல் அந்த இடத்தில் இருந்து வெளியே சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் சரவணன், பழனிக்கு ஆறுதல் சொன்னார். ஆனால், பழனியால் எதுவுமே பேச முடியவில்லை. வழக்கம் போல சுகன்யா எல்லோரிடமும் நடித்து நாடகம் போட்டுக் கொண்டிருந்தார். இதையெல்லாம் பார்த்து மீனாவிற்கு இன்னும் சந்தேகம் தான் அதிகமாகின்றது. பின் ராஜியிடம் இதைப் பற்றி பேசி இருந்தார். அப்போது மீனா, அரசி விஷயத்திலும் தேவையில்லாமல் பிரச்சனை செய்தது சுகன்யா தான். இப்போது சித்தப்பா விஷயத்திலும் வீண்பழி போடுகிறார் என்றார். பின் வீட்டிற்கு வந்த பழனியிடம் கோமதி அறிவுரை சொன்னார். ஆனால், அவர் வேதனையில் அமைதியாக நின்றார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் தங்கமயில் வேலை செய்யும் ஹோட்டலுக்கு சக்தி, குமார் இருவருமே சாப்பிட வந்தார்கள். அவர்களை பார்த்தவுடன் தங்கமயில் ஒளிந்து கொண்டார். இதையெல்லாம் கவனித்த ஓனர், தங்கமயில் இடம் விசாரித்தார். அதற்கு தங்கமயில், ஏதேதோ காரணங்களை சொல்லி அழுதார். இன்னொரு பக்கம் பழனி பஸ் ஸ்டாண்டில் இருந்தார். அப்போது போன் செய்த சுகன்யா, வீட்டுக்கு வாருங்கள் என்று கூப்பிட, பழனி முடியாது என்று போனை வைத்து விட்டார். அந்த சமயம் பார்த்து பஸ் ஸ்டாண்டுக்கு தங்கமயில் வந்தவுடன் இருவரும் வீட்டிற்கு வந்தார்கள்.
சீரியல் ட்ராக்:
மேலும், இருவரும் ஒன்றாக வருவதைப் பார்த்த சுகன்யாவிற்கு பயங்கர கோபம் வந்தது. அதற்குப் பின்பு சென்ற பழனியிடம் சண்டை வாங்கி இருந்தார். பழனியும் பேசாமல் கோபத்தில் அமைதியாக இருந்தார். உடனே சுகன்யா, நான் கூப்பிடும் போது வரவில்லை. தங்கமயில் உடன் ஊர் சுற்றுவதற்கு உங்களுக்கு நேரம் இருக்கிறதா? என்று மோசமாக இருவரையும் சேர்த்து வைத்து பேசி இருந்தார். இதனால் ஆத்திரம் தாங்க முடியாமல் பழனி, சுகன்யாவை திட்டி விட்டார். பழனி வெளியே வர, சுகன்யா தடுத்து நிறுத்தி இருந்தார். கோபத்தில் பழனி, சுகன்யாவை தள்ளிவிட்டு வெளியே வந்து விட்டார்.
https://www.youtube.com/watch?v=3p4p0A71sls
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் அரசியை பெண் பார்க்க பாண்டியனின் அக்கா வீட்டிலிருந்து வருகிறார்கள். மாப்பிள்ளைக்கு அரசியை பிடித்து விடுகிறது. அரசியும் மாப்பிள்ளையை பிடித்து விடுகிறது என்று சொல்கிறார். உடனே நிச்சயதார்த்தம் செய்துவிடலாம் என்று சொன்னவுடன் வீட்டில் எல்லோருமே ஷாக் ஆகிறார்கள். அப்போது பாண்டியனின் அக்கா, ஏற்கனவே நிச்சயதார்த்தம், கல்யாண தேதி எல்லாம் குறித்து விட்டோம். உங்களுக்கு திருமணத்திற்கு சம்மதமா? என்று கேட்கிறார். அதற்கு பாண்டியன், எல்லோருக்கும் சம்மதம் என்கிறார். வீட்டில் உள்ள எல்லோரும் ஷாக் ஆகிறார்கள்.






