விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில், சரவணன் வீட்டில் நடந்ததை நினைத்து தூங்க முடியாமல் தவித்துக் கொண்டிருந்தார். பின் வீட்டில் சொல்லாமல் பாண்டியன் வீட்டிற்கு வந்து வாசலிலே உட்கார்ந்து விட்டார். பின் மீனா- ராஜி இருவரும் வெளியே வரும்போது தங்கமயில் இருப்பதை பார்த்து ஷாக்கானார்கள். பின் தங்கமயில், என்னால் அங்கு இருக்க முடியவில்லை. இதுதான் என்னுடைய வீடு. நான் இங்கு தான் இருப்பேன் என்று ஆர்ப்பாட்டம் செய்தார். இதை அறிந்த கோமதி கோபத்தில் தங்க மயிலை திட்டி வெளியே தள்ளுகிறார்.

கோமதி ரொம்ப மோசமாக தங்கமயிலை திட்டினார். இருந்தாலும் தங்கமயில், இங்கே தான் இருப்பேன் என்றார். பின் கதவை மூடிவிட்டு கோமதி உள்ளே வந்து விட்டார். இதையெல்லாம் கவனித்த சரவணன், தங்கமயில் இடம் சண்டை போட வெளியே வந்தார். பின் கோமதி, சரவணனை ரூமிற்குள் செல்ல சொன்னார். இன்னொரு பக்கம் இதுதான் சந்தர்ப்பம் என்று சக்திவேல் தேவையில்லாமல் பாண்டியன் குடும்பத்தை அவமானமாக பேசிக் கொண்டிருந்தார். பின் கோமதி, தங்கமயில் அம்மாவிற்கு ஃபோன் செய்து நடந்ததை எல்லாம் சொல்லி தங்கமயிலை அழைத்து செல்ல சொன்னார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தங்கமயிலின் அம்மா, அப்பா இவருமே பாண்டியன் வீட்டிற்கு வந்து விட்டார்கள். தங்கமயில் அம்மா எவ்வளவு கதவு தட்டியுமே கோமதி கதவை திறக்கவில்லை. உடனே பாக்கியா ரொம்ப மோசமாக பாண்டியன் குடும்பத்தை வெளியில் இருந்து எல்லோரிடமும் கதை சொல்லிக் கொண்டிருந்தார். இதனால் கோபப்பட்ட சரவணன், வெளியே வந்து ஒழுங்கு மரியாதையாக இங்கு இருந்து கிளம்புங்கள். இன்னும் எவ்வளவு பொய் சொல்ல முடியுமோ உங்கள் மகளை உங்களுடன் வைத்துக்கொண்டு சொல்லுங்கள் என்றெல்லாம் திட்டி இருந்தார். பதிலுக்கு பதில் பாக்யாவும் சரவணனுக்கு பதில் கொடுத்தார்.

சீரியல் ட்ராக்:
கொந்தளித்த கோமதி, பாக்கியாவிடம் சண்டைக்கு சென்றார். ஒரு கட்டத்தில் சரவணன் என்னுடைய சாவிற்கு காரணம் நீங்கள் தான் எழுதி வைத்து செத்து விடுவேன் என்றார். இதைக் கேட்ட பாண்டியன் திட்டுகிறார். பின் சரவணன், என்னால் இவளுடன் சேர்ந்து வாழ முடியாது. விவாகரத்து வாங்கி கொடுங்கள் என்றார். இதை கேட்டு தங்கமயில் ஷாக் ஆனார். பாக்கியா, நீங்கள் உங்கள் முடிவை சொல்லிவிட்டீர்கள். நானும் உங்களை சும்மா விடமாட்டேன். கோர்ட்டு கேஸ் என்று உங்கள் குடும்பத்தைச் சந்தி சிரிக்க வைப்பேன் என்று சவால் விட்டு சென்றார்.
https://www.youtube.com/watch?v=8ehdw3-FG34
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் சரவணன் விவாகரத்து நோட்டிஸை தயார் செய்து தங்கமயில் வீட்டிற்கு அனுப்புகிறார். இதை பார்த்து தங்கமயில் ரொம்பவே உடைந்து போகிறார். பின் பாக்கியா- மாணிக்கம் இருவருமே சேர்ந்து போலீஸ் ஸ்டேஷனில் வரதட்சனை கேட்டு கொடுமை செய்கிறார்கள் என்று பாண்டியன் குடும்பத்தின் மீது புகார் கொடுக்கிறார். பின் போலீஸ், பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரையும் அதிரடியாக கைது செய்கிறார்கள்.






