விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோர்ட்டில் முத்துவேல்- சக்திவேல் இருவரும் பாண்டியன் குடும்பத்திற்கு ஆதரவாக தான் பேசி இருந்தார்கள். இதனால் பாண்டியன் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைத்து விட்டது. ராஜி, அரசி, மீனா மூவருமே தங்கமயில் குடும்பம் நடந்து கொண்டதை நினைத்து கோபப்பட்டார்கள். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் கோமதி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே கையெழுத்து போட்டு வெளியே வந்தார்கள். அப்போது கோமதி எமோஷனலாக தன் அண்ணனை பார்த்து அழுதார்.

பாண்டியன், முத்துவேல் கையை பிடித்து எமோஷனலாக அழுது நன்றி சொன்னார். பின் கோமதியும் தன் அண்ணன் தோளில் சாய்ந்து கதறி அழுது நன்றி சொன்னார். முத்துவேல், எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நீ என்னுடைய ரத்தம் என்றார். எல்லோருமே வீட்டிற்கு வந்தார்கள். காந்திமதி, தன் மகளை பார்த்து ரொம்பவே கதறி அழுதார். பின் பாண்டியன் குடும்பத்திற்கு ஆர்த்தி எடுத்து அவர்களை உள்ளே போக சொன்னார்கள். பாண்டியன்- கோமதி இருவருமே முத்துவேல், சக்திவேல் குடும்பத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு உள்ளே சென்றார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி நடந்ததை நினைத்து அழுது கொண்டிருந்தார். பாண்டியன், கோமதிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு சமாதனம் செய்தார். பின் சரவணன், நான் விவாகரத்து முடிவில் இப்போது ரொம்ப உறுதியாக இருக்கிறேன். என்னால் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்றார். கோமதி, நீ இனிமேல் அவளுடன் வாழ தேவையில்லை. நானே உனக்கு துணையாக நிற்கிறேன் என்றார். பாண்டியன், இதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். எல்லோரும் அவர்கள் வேலையை பாருங்கள் என்று அறிவுரை சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயில், நீங்கள் சொன்ன பொய்யால் என் வாழ்க்கை இன்னும் பிரச்சனையில் மாட்டிக் கொண்டது. அவர்களுக்கு என் மீது வெறுப்பு இன்னும் அதிகமாகிவிட்டது என்று சொல்லி அழுது கொண்டிருக்கிறார். பாக்கியா, இப்படியெல்லாம் நடக்கும் என்று எனக்கு தெரியாது. உன்னுடைய வாழ்க்கையை நான் காப்பாற்றுவேன். கவலைப்படாதே. அம்மாவை நம்பு என்று மீண்டும் சதி திட்டம் போடுகிறார். இன்னொரு பக்கம் கோமதி கவலையில் அழுது கொண்டிருக்கிறார். அந்த சமயம் வந்த பழனி, கோமதிக்கு ஆறுதல் சொல்கிறார். பின் பாண்டியன்- கோமதி இருவருமே சேர்ந்து பழனியிடம் மன்னிப்பு கேட்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் காந்திமதி ரொம்ப சந்தோசமாக இருக்கிறார். அதை பார்த்து குமார், பாட்டி முகத்தில் ஒரே பூரிப்பு என்று சொல்கிறார். உடனே காந்திமதி, எவ்வளவு பகை இருந்தாலும் கோமதி, ராஜிக்கு பிரச்சனை என்றவுடன் நீங்கள் இருவரும் நின்றது எனக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. இதுவே எனக்கு போதும்
என்று சொல்கிறார். அதற்கு முத்துவேல், இதற்காக நாங்கள் சேர்ந்து விட்டோம் என்று அர்த்தம் கிடையாது என்கிறார். மச்சான் என்றெல்லாம் கூப்பிட முடியாது என்று சக்திவேல் சொல்கிறார். காந்திமதி, நான் அதையெல்லாம் எதிர்பார்க்கவில்லை. இதுவே எனக்கு போதும் என்று எமோஷனாக அழுகிறார். இன்னொரு பக்கம் மீனா- செந்தில் இருவரும் தங்கமயில் குடும்பம் செய்த துரோகத்தை நினைத்து வருத்தப்படுகிறார்கள்.






