விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார். அஞ்சலிக்கு ஒன்றுமே புரியவில்லை. சரவணன், என்ன நடந்தாலும் நான் உன்னை கைவிடமாட்டேன். நம்பிக்கையோடு இரு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருந்தார். இதையெல்லாம் கவனித்த ராஜிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பின் இதைப்பற்றி ராஜி, கதிரிடம் சொன்னார். பின் கதிர், யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று விசாரித்தார். சரவணன், அஞ்சலிடம் தான் என்றார். கதிர், நீங்கள் இன்னும் அவர்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறீர்களா? என்றார்.

பின் சரவணன், அஞ்சலியின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொன்னார். பாண்டியன், தங்கமயிலின் வீட்டிற்கு சென்று பேச வேண்டும் என்றார். கோமதியும் சரி என்றார். பின் இதைப்பற்றி ராஜி, மீனாவுக்கு போன் செய்து சொன்னார். உடனே தங்கமயிலுக்கு, போன் செய்த மீனா வீட்டில் நடந்ததை எல்லாம் சொல்லி தாங்கள் பார்க்க வரும் விஷயத்தையும் சொன்னார். தங்க மயிலுக்கு என்ன செய்வது என்று புரியவில்லை. பின் தங்கமயில் தன்னுடைய அப்பா, அம்மாவிடம் இதைப் பற்றி சொன்னார். பாக்கியம், வரட்டும் பார்த்துக் கொள்கிறேன் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உடனே தங்கமயில், எந்த பிரச்சினையும் வேண்டாம். தயவு செய்து அமைதியாக இருங்கள் என்று சொன்னார். இன்னொரு பக்கம் கோவிலில் சரவணன், தங்கமயில் கர்ப்பம் விஷயத்தைப் பற்றி பேசிக்கொண்டிருந்தார். அஞ்சலி, ரொம்பவே வருத்தமாக என்னை விட்டு மீண்டும் பிரிந்து விடுவீர்களா என்று கேட்டார். சரவணன், அஞ்சலியின் கையை பிடித்து நான் உன்னை தான் திருமணம் செய்து கொள்வேன். யார் பேச்சையும் நான் கேட்க மாட்டேன் என்று வாக்குறுதி சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, மீனா, ராஜி எல்லோரும் தங்கமயில் வீட்டிற்கு கிளம்பி போகிறார்கள். கோமதி, என்ன பேசுவது என்று தெரியாமல் மௌனமாகவே இருக்கிறார். கோமதி பார்த்தவுடன் பாக்கியத்திற்கு பயங்கர கோபம் வருகிறது .இருந்தாலும் அமைதியாக இருக்கிறார். பின் கோமதி, இவ்ளோ பெரிய உண்மையை எதற்காக மறைத்தாய்? ஏன் இப்படி செய்தாய்? நீ ஒழுங்காக எங்களிடம் எல்லா உண்மையும் சொல்லி இருந்தால் இந்த நிலைமை இல்லை என்று சொல்லிக் கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
உடனே பாக்கியம், வேண்டும் என்று கோமதியையும் அவருடைய குடும்பத்தையும் தரகுறைவாக பேசுகிறார்.
மீனா, ராஜி தடுத்தும் பாக்கியம் கேட்கவில்லை. கோமதி, பேசுவதற்கெல்லாம் பதிலுக்கு பதில் பாக்கியம்
கொடுத்துக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த தங்கமயில், நீ எதுவும் பேச வேண்டாம். அம்மா அமைதியாக இரு. அம்மா நீ எனக்கு செய்த வரையும் போதும் என்று சொல்லி கோமதி, மீனா, ராஜி மூவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் செல்கிறார். பாக்கியம் எவ்வளவு சொல்லியுமே தங்கமயில் கேட்கவில்லை.






