விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், கோமதியை பார்த்து பேசி இருந்தார். ஆனால், கோமதி சுயநினைவுக்கு வரவே இல்லை. இதனால் பாண்டியன் அழுதார். அதற்குப்பின் பாண்டியனை, சரவணன் வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார். பாண்டியனிடம் வீட்டில் உள்ள எல்லோருமே விசாரித்தார்கள். ஆனால், அவரால் எந்த பதிலும் பேச முடியவில்லை. அதற்கு பின்பு ரூமுக்கு சென்ற பாண்டியன், கோமதி உடனான நினைவுகளை நினைத்து பார்த்து அழுது கொண்டிருந்தார். சரவணன் தன் அப்பாவிற்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார்.

பாண்டியன், கோமதியை நினைத்து எமோஷனலாக அழுது கொண்டிருந்தார். பின் பாண்டியன், சாமியின் முன்பு நின்று கோமதி குணமடைந்து வர வேண்டும் என்று மனமுருகி வேண்டுகிறார். இதையெல்லாம் பார்த்து பாண்டியன் மகன்கள் ஆச்சரியப்பட்டார்கள். பின் பாண்டியன் ஹாஸ்பிடலுக்கு செல்கிறேன் என்றார். அந்த சமயம் பார்த்து ஹாஸ்பிடலில் இருந்து போன் வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது கோமதி கண் விழித்து விட்டதாக சொன்னார்கள். உடனே பாண்டியன், கோமதியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனார். அங்கு கோமதியை பார்த்து தான் எமோஷனலாக வருத்தப்பட்டு பாண்டியன் பேசி இருந்தார். கோமதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் கோமதியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதியின் உடல்நலத்தில் அக்கரையாக நடந்து கொண்டார்கள்.பாண்டியனும் கோமதிக்காக பார்த்து பார்த்து செய்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, நான் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு கோமாதியின் பிள்ளைகள், சாப்பிட கஷ்டமாக இருக்கும். துணி துவைக்க கஷ்டமாக இருக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் எங்கு இருக்கும் என்று தெரியாது என்றெல்லாம் சொல்கிறார்கள். இதைக் கேட்டு கோமதிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தன்னை நினைத்து கவலைப்படாமல் தங்களுக்கான தேவையை செய்ய ஆளிலேயே நினைத்து எனது வருத்தப்படுகிறார்கள் என்று மீனாவிடம் சொல்லி கோமதி புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
பாண்டியன் வேலைக்கு கிளம்பும்போது கோமதி வீட்டில் உள்ள எல்லா டாக்குமெண்ட், பீரோ சாவி, நகைகள், பணம் எல்லாவற்றையும் எடுத்து வந்து வைக்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அப்போது கோமதி, எல்லாருடைய பொறுப்பையும் கொடுத்துவிட்டு நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்கிறார். எல்லோருமே, என்னாச்சு? எங்கம்மா போவ? எங்கள விட்டா உனக்கு என்ன வழி? என்று பேசுகிறார்கள். இதனால் கோமதி, என்னுடைய மரியாதைக்காக நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்கிறார். பாண்டியன், திருப்பியும் ஒரு நாடகம் போடுகிறாயா என்று கிண்டல் அடிக்கிறார்.






