விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனி, முதலில் தயங்கினாலும் பதில் சொல்வதை ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் பாண்டியன், வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய அம்மாவிடம் பழனி, நீ என்னுடன் வந்துவிடுமா? சுகன்யாவிற்கு ஒத்தாசையாக இருக்கும் என்றார். உடனே கோபத்தில் காந்திமதி, என்னை அவமானப்படுத்திய உன் அண்ணன்கள் வந்து கூப்பிடட்டும் நான் வருகிறேன். அதுவரைக்கும் நான் அந்த வீட்டு பக்கம் வரமாட்டேன் என்றார். பழனி, எவ்வளவு சொல்லியுமே காந்திமதி கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் பாண்டியன் - கோமதி இருவரும் பழனியை திட்டி காந்திமதியை அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

பாண்டியன் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருந்தார்கள். அப்போது காந்திமதி, ரொம்ப வெட்கையாக இருக்கிறது. அங்கு ஏசியிலே இருந்து பழகிவிட்டேன் என்றார். இதுதான் சந்தர்ப்பம் என்று கதிர், உங்களுக்கு இங்கு உங்களுக்கு வசதி பத்தவில்லை என்றால் உங்கள் வீட்டிற்க்கே போங்க என்றார். இதைக் கேட்டு பாண்டியன்-கோமதி இருவரும் ஷாக் ஆனார்கள். ராஜி, கதிரை திட்டுகிறார். இருந்தாலும் விடாமல் கதிர், காந்திமதியை வீட்டை விட்டுப் போக சொன்னார். காந்திமதியுமே கதிர் சொன்ன வார்த்தையால் ரொம்பவே மனமுடைந்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கதிர், காந்திமதி இடம் பிரச்சனை செய்வது போலவே பேசிக் கொண்டிருந்தார். கதிரின் குரலை கேட்டு முத்துவேல் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வெளியே வந்துவிட்டார்கள். காந்திமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது சக்திவேல், தான் செய்த தவறுக்கு காந்திமதி இடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு அழைத்தார். பாண்டியன், கோமதி வேண்டாம் என்று தடுத்தார்கள். ஒரு கட்டத்தில் சக்திவேல் காந்திமதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்டார். ஒரு வழியாக காந்திமதி தன்னுடைய மகன்கள் வீட்டிற்கு செல்லவே முடிவெடுத்தார். இதை பார்த்து முத்துவேலுக்கு சந்தோசமாக இருக்கிறது. கோமதி, கதிரை பார்த்து பயங்கரமாக கோபப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, எதற்காக இப்படி என் அம்மாவை பேசினாய்? என்று கேட்கிறார். பாண்டியன், ராஜி எல்லோருமே கதிரை திட்டிக் கொண்டிருக்கிறார்கள். உடனே கதிர், தெரு முனையில் முத்துவேல் மாமாவை பார்த்து உன் அம்மாவை பார்த்துக் கொள்ளக்கூட துப்பில்லையா என்று அவமானப்படுத்தினார்கள். அதற்காகத்தான் நான் அப்படி செய்தேன் என்று சொல்கிறார். கோமதி, நீ என்ன காரணம் சொன்னாலும் நீ செய்தது தவறு. எதுவாக இருந்தாலும் நீ எங்களிடம் சொல்லி இருக்கணும் என்று சொல்லி திட்டி விட்டு செல்கிறார். பின் ராஜி, நீ எதுவாக இருந்தாலும் அப்பத்தாவை அப்படி பேசி இருக்கக் கூடாது என்று சண்டை போடுகிறார். ஆனால், கதிர் அதைப்பற்றி எதுவும் கண்டு கொள்ளவில்லை.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் சக்திவேல், இதுதான் சந்தர்ப்பம் என்று கதிரை திட்டுக் கொண்டிருக்கிறார். முத்துவேல், நம்முடைய அம்மா வீட்டிற்கு வந்துவிட்டார். தேவையில்லாமல் எதையும் பேச வேண்டாம் என்று சொல்கிறார். சக்திவேல், மாப்பிள்ளை மீது ரொம்பவே அண்ணன் கரிசனம் படுகிறார். எப்படியாவது இவர்களை சேர விடக்கூடாது பிரிக்க வேண்டும் என்று தன் மகனிடம் திட்டம் போட்டுக் கொண்டிருக்கிறார். அதற்குப்பின் கோர்ட்டில் விவாகரத்து கேஸ் நடப்பதால் கோமதி- பாண்டியன் இருவரும் சரவணனிடம் பேசுகிறார்கள். பாண்டியன், எதுவாக இருந்தாலும் யோசித்து முடிவு எடு, அவசரப்படாதே என்று சொல்கிறார். சரவணன், அதை எதையுமே கண்டு கொள்ளவில்லை அமைதியாக இருக்கிறார்.






