விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி குடும்பத்தில் மீனா- செந்தில் இருவரும் மலரின் மாமனார் மாமியாரிடம் பயங்கரமாக சண்டை போட்டுக் கொண்டிருந்தார்கள். ஒரு கட்டத்தில் கோமதி, நான் அவர்கள் வீட்டு விசயத்தில் தலையிட்டு இருக்கக் கூடாது. என்னை மன்னித்து விடுங்கள் என்றார். உடனே மலர் மாமனார், மாமியாரும் நானும் கோபத்தில் பேசி விட்டேன் என்று சொல்லி சமாதானம் ஆகி விட்டார்கள். பின் எல்லோருமே சேர்ந்து ஒன்றாக பேசிக் கொண்டிருந்தார்கள். மீண்டும் மலருக்கு அவருடைய மாமியார் வேலை வைத்துக் கொண்டே இருந்தார்.

இதை கவனித்த சுரேஷ், தன்னுடைய அப்பா- அம்மாவை ஒரு அறையில் ஓய்வு எடுக்க சொல்லி அனுப்பி வைத்தார். பின் எல்லா ஜோடிகளுமே ஜாலியாக அந்த பார்க்கில் உள்ள எல்லா விளையாட்டிலும் விளையாடிக் கொண்டிருந்தார்கள். கோமதியும் அதை பார்த்து சந்தோஷப்பட்டார். ராஜி, கதிருக்கு போன் செய்து விசாரித்தார். கதிர் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். ராஜி, நீ சென்னையில் தானே இருக்கிறாய் என்று சொல்கிறார். கதிர், இல்லை என்றார். அதற்குப்பின் அங்கு பாட்டு போட்டி நடக்கிறது. அதில் கோமதி கலந்து கொண்டு சூப்பராக பாடினார். பின் மலரும் பாடுவதற்காக மேடை ஏறினார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்று எபிசோட்டில் மலர் பாடி கொண்டிருப்பதை அவருடைய மாமியார் பார்த்து விடுகிறார். என்ன நடக்குமோ என்று மலர் பயந்து கொண்டிருக்கிறார். மலர் மாமியார், கோவமாக எல்லோரையும் திட்டிக் கொண்டிருக்கிறார். சுரேஷ் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். மலரின் மாமியார் வீட்டுக்கு கிளம்பலாம் என்று சொல்கிறார். பாக்யராஜ், பீச்சுக்கு மட்டும் போகலாம் என்று சொல்கிறார். அதற்குப்பின் மலரின் மாமியார் மாமனார் இருவரும் பஸ்ஸில் உட்கார்ந்து கொண்டிருக்கிறார்கள். மற்றவர்கள் எல்லோருமே பீச்சில் சந்தோஷமாக விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இன்னொரு பக்கம் முத்துவேல் ஆபரேஷன் தியேட்டருக்கு அழைத்து செல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
கதிர், அதை நினைத்து ரொம்பவே வருத்தப்படுகிறார் . பின் மலர் குடும்பம் எல்லோருமே விளையாடி முடித்துவிட்டு வீட்டிற்கு வருகிறார்கள். வழக்கம்போல மாமியார், மலரை வேலை வாங்கிக் கொண்டிருக்கிறார். அதை பார்த்து கோமதி கடுப்பாகி எழுந்து செல்கிறார். இன்னொரு பக்கம் கதிர் மாத்திரை வாங்குவதற்காக வெளியே வந்து கொண்டிருக்கிறார். அப்போது ஒரு பைகாரன் அவர் மீது மோதி கீழே விழுகிறார். இதனால் அந்த பைக் காரனுக்கும் கதிருக்கும் இடையே சண்டை நடக்கிறது. அந்த இடத்திற்கு வந்த சுரேஷ், கதிருக்கு சப்போர்ட் செய்து பேசி அவரை அனுப்பி வைக்கிறார். ராஜியின் கணவர் தான் கதிர் என்று சுரேஷுக்கு தெரியாது.
https://www.youtube.com/watch?v=jh6QNhjhkXs
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் குலதெய்வ சாமி கோயிலுக்கு போக இருப்பதால் மதியின் வீட்டில் கூப்பிடலாம் என்று மலரின் மாமியார் சொல்கிறார். கோமதி, மலரின் அம்மா வீட்டிலும் கூப்பிடலாம் என்று சொல்லி போனை போட்டு கொடுக்கிறார். மலரின் மாமியாரும், விருப்பம் இல்லாமல் பேசுகிறார். இதையெல்லாம் பார்த்து மலர் எமோஷனலாகி கோமதியை கட்டிப்பிடித்து நன்றி என்று அழுகிறார்.






