விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி தடபுடலாக கறிவிருந்தை சமைத்துக் கொண்டிருந்தார். வீட்டில் எல்லோருமே கோமதிக்கு உதவி செய்தார்கள். இன்னொரு பக்கம் சக்திவேல், மீண்டும் எல்லோரும் ஒன்றாக சேரப் போகிறீர்களா? என்று நக்கல் அடித்தார். முத்துவேல், அம்மாவின் ஆசைக்காகத்தான் நான் ஒத்துக்கொண்டேன். போய் சாப்பிட்டு வந்துவிடலாம், மற்றபடி வேறு ஒன்றும் இல்லை என்றார். சக்திவேல், யாரும் சேர்ந்து விடக்கூடாது. ஏதாவது செய்து சண்டையை பெரிசாக்கணும் என்று யோசித்தார்.

அதற்குப்பின் காந்திமதி வீட்டில் எல்லோருமே பாண்டியன் வீட்டிற்கு வந்தார்கள். சந்தோஷத்தில் கோமதி துள்ளி குதிக்கிறார். பின் கோமதி தன் அண்ணன்களை அன்பாக உபசரித்து உட்கார வைத்து பேசி இருந்தார். வழக்கம்போல சக்திவேல் நக்கல் அடித்துக் கொண்டிருந்தார். பின் கோமதி, ஏன் வீட்டிற்கு வரவில்லை என்று கேட்டார். அதற்கு சுகன்யா, என் கணவரை வீட்டு பக்கமே வரக்கூடாது என்று துரத்திவிட்டால், நான் எப்படி வருவேன் என்று நாரதர் வேலையை செய்ய ஆரம்பித்தார். இதனால் கோமதியின் முகம் மாறுகிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, சுகன்யா பேசியதற்கு கோபப்படாமல் அவரை அழைத்துக் கொண்டு உள்ளே போனார். சக்திவேல் ஏதாவது பிரச்சனையை செய்ய வேண்டும் என்று நக்கலாகவே பாண்டியன் குடும்பத்திடம் பேசிக் கொண்டிருந்தார். ஆனால், முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டார்கள். ஆனால், இது சக்திவேலுக்கு சுத்தமாகவே பிடிக்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சக்திவேல், ராஜியை கல்யாணம் செய்து கொள்ளாமல் அழைத்துக் கொண்டு வந்து வீட்டில் விட்டிருக்கலாம். ஆனால், சொத்துக்காக தான் கதிர் இப்படி எல்லாம் வேலை செய்திருக்கிறான் என்று மோசமாக பேசுகிறார். இதைக் கேட்டு கொந்தளித்த கோமதி, இந்த திருமணத்திற்கும் கதிருக்கும் எந்த சம்பந்தமும் கிடையாது. நான் என் மகன் காலில் விழுந்து கெஞ்சியதால் தான் கதிர் திருமணத்திற்கு ஒத்துக்கொண்டான். என் அண்ணன் வீட்டு குடும்பம் அசிங்கப்படக்கூடாது என்பதற்காகத்தான் நான் இப்படி ஒரு முடிவெடுத்தேன் என்று எல்லா உண்மையும் செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இதைக் கேட்டு பாண்டியன் ஷாக் ஆனார். கோபத்தில் சக்திவேல்- முத்துவேல் இருவரும் கோமதியிடம் சண்டை போட்டு வெளியே போகிறார்கள். பின் கோமதி, பாண்டியனிடம் மன்னிப்பு கேட்கிறார். பாண்டியன், உடைந்த உறவை ஒட்ட வைக்க முடியாது என்று திட்டி விட்டு கோபமாக வெளியே போகிறார். பின் செந்தில், கோமதி- மீனா இருவரையும் திட்டிக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் கதிர், தன் அப்பாவிடம் தன் அம்மா தரப்பு நியாயத்தை எடுத்து சொல்லி புரிய வைக்கிறார். ஆனால், பாண்டியனால் ஏற்றுக்கொள்ளவே முடியவில்லை.






