விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், ட்ரீட்மெண்டை சீக்கிரமாகவே தொடங்கிவிடலாம் என்றார். முத்துவேல், அதற்குள் நான் என் அம்மாவுடன் கொஞ்ச நாள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எப்படியாவது என்னுடைய அம்மாவை வீட்டிற்கு அனுப்பி வை என்று கேட்டார். கதிருமே அதற்கு வாக்குறுதி கொடுத்தார். பின் முத்துவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது சுகன்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பழனிவேல் சொல்லி சந்தோஷப்பட்டார். எல்லோருமே வீட்டில் சந்தோஷமாக இருந்தார்கள். பின் இதைப்பற்றி பழனி பாண்டியன் குடும்பத்திற்கு சொல்லப் போனார்.

பாண்டியன் வீட்டிற்கு பழனி- சுகன்யா இருவரும் வந்தார்கள். அப்போது பழனிவேல், சுகன்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொன்னார். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகிறது. எல்லோரும் ஸ்வீட் கொடுத்து பழனி, சுகன்யா இருவருக்கும் வாழ்த்துக்களை சொன்னார்கள். பின் இதைப் பற்றி செந்தில், மீனாவிற்கும் போன் பண்ணி தகவலை சொல்லி விட்டார்கள். பின் பழனியை தனியாக சந்தித்த கதிர், இந்த நேரத்தில் அப்பத்தா உங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பழனி, முதலில் தயங்கினாலும் பதில் சொல்வதை ஒத்துக்கொண்டார். அதற்குப்பின் பாண்டியன், வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். தன்னுடைய அம்மாவிடம் பழனி, நீ என்னுடன் வந்துவிடுமா? சுகன்யாவிற்கு ஒத்தாசையாக இருக்கும் என்றார். உடனே கோபத்தில் காந்திமதி, என்னை அவமானப்படுத்திய உன் அண்ணன்கள் வந்து கூப்பிடட்டும் நான் வருகிறேன். அதுவரைக்கும் நான் அந்த வீட்டு பக்கம் வரமாட்டேன் என்றார். பழனி, எவ்வளவு சொல்லியுமே காந்திமதி கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் பாண்டியன் - கோமதி இருவரும் பழனியை திட்டி காந்திமதியை அனுப்ப முடியாது என்று சொல்லிவிட்டார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே அமர்ந்து சாப்பிட்டு கொண்டிருக்கிறார்கள். அப்போது காந்திமதி, ரொம்ப வெட்கையாக இருக்கிறது. அங்கு ஏசியிலே இருந்து பழகிவிட்டேன் என்று சொல்கிறார். இதுதான் சந்தர்ப்பம் என்று கதிர், உங்களுக்கு இங்கு உங்களுக்கு வசதி பத்தவில்லை என்றால் உங்கள் வீட்டிற்க்கே போங்க என்று சொல்கிறார். இதைக் கேட்டு பாண்டியன்-கோமதி இருவரும் ஷாக் ஆகிறார்கள். ராஜி, கதிரை திட்டுகிறார். இருந்தாலும் விடாமல் கதிர், காந்திமதியை வீட்டை விட்டுப் போக சொல்கிறார். காந்திமதியுமே கதிர் சொன்ன வார்த்தையால் ரொம்பவே மனமுடைந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
கதிர், காந்திமதி இடம் பிரச்சனை செய்வது போலவே பேசிக் கொண்டிருக்கிறார். கதிரின் குரலை கேட்டு முத்துவேல் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வெளியே வந்துவிடுகிறார்கள். காந்திமதிக்கு ஒன்றுமே புரியவில்லை. அப்போது சக்திவேல், தான் செய்த தவறுக்கு காந்திமதி இடம் மன்னிப்பு கேட்டு வீட்டிற்கு அழைக்கிறார். பாண்டியன், கோமதி வேண்டாம் என்று தடுக்கிறார்கள். ஒரு கட்டத்தில் சக்திவேல் காந்திமதியின் காலில் விழுந்து மன்னிப்பு கேட்கிறார். ஒரு வழியாக காந்திமதி தன்னுடைய மகன்கள் வீட்டிற்கு செல்லவே முடிவெடுக்கிறார். இதை பார்த்து முத்துவேலுக்கு சந்தோசமாக இருக்கிறது. கோமதி, கதிரை பார்த்து பயங்கரமாக கோபப்படுகிறார்.






