விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர் தடுத்து நிறுத்தி வீட்டில் எல்லோரையும் எதிர்த்து போனதால் அவளால் அங்கு ஒழுங்காக நடனமாட முடியவில்லை. மீண்டும் வீட்டிற்கு போகலாம் என்று வந்துவிட்டார் என்று ஏதோ ஒரு காரணங்களை சொல்லி சமாளித்தார். இதனால் கோமதி, இனிமேலாவது பெரியவர்கள் பேச்சை கேள் என்று திட்டி அனுப்பி விட்டார். பாண்டியன் எதுவுமே சொல்லவில்லை. அதற்குப்பின் ராஜி, மீனா- அரசியிடம் போட்டி நடக்கும் இடத்தில் நடந்த எல்லா விஷயத்தையும் சொன்னார்.

குமாரின் கேஸ் வருவதால் அவருடைய அம்மா, பெரியம்மா, பாட்டி எல்லோருமே வேதனையில் இருந்தார்கள். இதனால் வடிவு, ராஜியை சந்தித்து கேஸை வாபஸ் வாங்க சொன்னார். பின் இதை பற்றி ராஜி, மீனாவிடம் சொல்லி வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் அப்பத்தா, கோமதியை சந்தித்து குமார் கேஸை வாபஸ் வாங்க சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார். பின் ராஜி- மீனா இருவருமே சேர்ந்து பாண்டியனிடம் கேஸ் வாபஸ் வாங்குவதை பற்றி பேசப்போனார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அப்போது கோமதி, குமார் மீது கொடுத்த கேசை வாபஸ் வாங்க சொல்லி தைரியமாக பாண்டியனிடம் பேசினார். இதனால் கோபப்பட்ட பாண்டியன் முடியாது என்று கோமதியை திட்டினார். இதனால் கோமதி, தன் அண்ணன் குடும்பத்தை நினைத்து ரொம்ப வருத்தப்பட்டு பேசி இருந்தார். ஆனால், பாண்டியன் மனம் மாறவே இல்லை. மறுநாள் காலையில் கோர்ட்டுக்கு குமார் கிளம்பினார். அப்போது குமார் வீட்டில் உள்ள எல்லோருமே குமாரை நினைத்து கதறி அழுதார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோர்ட்டில் குமார்- அரசி கேஸ் நடக்கிறது. அப்போது குமார், தான் செய்த தவறை உணர்ந்து மன்னிப்பு கேட்டு , தண்டனையும் கேட்கிறார். இதையெல்லாம் பார்த்து அரசிக்கு ஒன்றும் புரியவில்லை. அதற்குப்பின் அரசி, இந்த கேஸை வாபஸ் வாங்கிக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அதைக் கேட்டவுடன் சக்திவேல், குமார், பாண்டியன் குடும்பத்தில் எல்லோரும் ஷாக் ஆகிறார்கள். அதற்கு பின் பாண்டியன்- அரசி இருவரும் வீட்டில் பேசியதை காண்பிக்கிறார்கள். அப்போது அரசி, இந்த கேசை வாபஸ் வாங்கி விட்டால் ரெண்டு குடும்பமும் சேர்ந்து விடும்.

சீரியல் ட்ராக்:
அம்மா, அப்பத்தா ரொம்பவே வருத்தப்படுகிறார்கள். நான் அந்த வீட்டில் இருக்கும் வரை என்னை அப்பத்தா, அத்தைகள் எல்லோருமே நன்றாகத்தான் பார்த்துக் கொண்டார்கள். இன்னும் ரெண்டு குடும்பத்தின் பகை அதிகமாக தான் ஆகும். அதனால் நான் கேசை வாபஸ் வாங்குகிறேன் என்று சொல்கிறார். அதனால் பாண்டியனுமே சரி என்கிறார். பின் கோர்ட்டில் அரசி, இந்த விஷயத்தால் ரெண்டு குடும்பத்தில் உள்ளவர்கள் பாதிக்கப்படுகிறார்கள். செய்த தவறை உணர வேண்டும் என்று நினைத்தேன். மற்றபடி அவருக்கு தண்டனை வாங்கி தருவதில் எனக்கு விருப்பமில்லை என்று சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






