விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் வேண்டாம் என்று தடுத்துமே கோமதி கேட்கவில்லை. பின் கடைக்கு பொருள் வாங்க வந்தவர்கள் அரசி திருமணத்தைப் பற்றியே மாற்றி மாற்றி கேட்டுக் கொண்டிருப்பதால் பாண்டியன், கோமதி இருவரும் ரொம்ப வருத்தப்பட்டார்கள். ஒரு கட்டத்தில் கோமதியை பாண்டியன் வீட்டுக்கு அனுப்பி விட்டார். இன்னொரு பக்கம் கிச்சனில் இருக்கும் சுகன்யாவை பார்த்து மீனா ரொம்பவே கொந்தளித்தார். பின் மீனா, அரசி வாழ்க்கையை கெடுக்க உங்களுக்கு எப்படி மனது வந்தது? குமார் சொன்னால் நீங்கள் அரசியை அனுப்பி விடுவீர்களா? என்று கேட்டார்.

இதையெல்லாம் கேட்டவுடன் சுகன்யா ஷாக் ஆகி ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே மீனா, என்னிடம் ஆதாரம் இருக்கிறது. வெளியில் சொல்லட்டுமா? என்று சொன்னவுடன் சுகன்யா உண்மையை ஒத்துக் கொண்டார். மீனா, சித்தப்பாவிற்காக தான் உங்களை நான் சும்மா விடுகிறேன். இனிமேலும் இந்த குடும்பத்திற்கு ஏதாவது துரோகம் செய்யணும் நினைத்தால் உங்களை உண்டு இல்லை என்று செய்து விடுவேன் என்று சுகன்யாவை வெளுத்து வாங்கி இருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், சரவணன் செய்ததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். வீட்டில் உள்ள எல்லோருமே ஆறுதல் சொல்லியுமே தங்கமயில் ஏற்றுக்கொள்ளவில்லை.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் அப்பத்தா, மாரி இருவருமே அரசியை சாப்பிட கூப்பிட்டார்கள். அப்போது அரசி கீழே வந்தார். அங்கு வந்த குமார், நாங்கள் இருவரும் வெளியே சாப்பிட போகிறோம். எங்களுக்கு வேண்டாம் என்று சொல்லி அரசியை அழைத்து சென்றார். காரில் வரும்போது குமார், உன் மோரைக்கு சாப்பாடெல்லாம் கேட்கிறதா? என்று சொல்லி ஆள் நடமாட்டம் இல்லாத காட்டில் அரசியை இறக்கி விட்டார். இங்கு ஓநாய், நரி எல்லாம் இருக்கும். இங்கே கிடந்து சாவு என்று சென்று விட்டார் குமார். அரசிக்கு ஒன்றுமே புரியாமல் கத்தி கதறினார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் குமார் தன்னுடைய நண்பர்களுடன் சந்தோசமாக குடித்துவிட்டு வீட்டிற்கு வந்தார். குமாரை பார்த்து மாரி, அரசி எங்கே? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். ஆனால், குமார் எதுவுமே சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்குப் பின் வீட்டுக்கு வந்த அரசியை பார்த்தவுடன் குமார் ஷாக் ஆனார். பின் அரசி, நண்பருடன் தெருவில் பேசிக் கொண்டிருந்தேன். இவர் அப்படியே வந்துவிட்டார் என்று சொன்னார். இதையெல்லாம் கேட்டு குமாருக்கு இன்னும் கோபம் அதிகமானது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் தன்னுடைய வண்டியை ஸ்டார்ட் செய்து கொண்டிருக்கிறார். அப்போது வெளியே இருந்த குமார், எப்படியாவது பாண்டியனை கஷ்டப்படுத்தனும் என்ற நினைத்து அரசியை வெளியே கூப்பிடுகிறார். பின் குமார், பர்ஸ் எடுத்துக் கொண்டு வர சொல்கிறார். அரசியும் எடுத்து வந்து தருகிறார். ஆனால், அந்த பர்ஸ் இல்லை என்று குமார் அரசி தலையில் அடிக்கிறார். இதை எல்லாம் பார்த்து பாண்டியனுக்கு கோபம் வந்து வண்டியை கீழே தள்ளிவிட்டு உள்ளே போகிறார். அதற்குப்பின் குமார், உன்னை அடித்தால் உன் அப்பா கஷ்டப்படுவார். அதற்காகத்தான் இப்படி எல்லாம் செய்கிறேன். நீ எவ்வளவு சித்திரவதை படப்போகிறாய் பார் என்று சொல்கிறார்

சீரியல் ட்ராக்:
அதற்குப்பின் குமாரை சாப்பிட்ட அவர் அம்மா அழைக்கிறார். ஆனால், அவர் அரசியுடன் சாப்பிடுகிறேன் என்று பெட்ருமில் போய் உட்கார்ந்து கொள்கிறார். பின் அரசியிடம் குமார் சாப்பாட்டை மேலே கொண்டு வா என்று சொல்கிறார். அரசியை மேலும் கீழும் ஆக வேலை வாங்கி அலைய வைக்கிறார். பின் குமார், பாண்டியனையும் அவருடைய குடும்பத்தையும் பற்றி திட்டிக் கொண்டிருக்கிறார். கோபத்தில் அரசி குழம்பை குமாரின் மூஞ்சிலேயே ஊற்றி விடுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






