விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் குமார், பாண்டியன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் பெரியப்பா இந்த பணத்தை போட்டு இருக்கலாம் என்றார். சக்திவேல், எதுவாக இருந்தாலும் அண்ணன் வரட்டும், கவனித்துக் கொள்கிறேன் என்றார். அதற்குப்பின் மலரின் வீட்டில் பாக்கியராஜ் வெளியே போகலாம் என்றார். மலரின் மாமியார், மாமனார் வேண்டாம் என்று மறுத்தார்கள். கோமதி கேட்டுக் கொண்டதால் வெளியில் செல்ல ஒத்துக்கொண்டார்கள்.

சுரேஷ், மீனா,ராஜி எல்லோருமே ஜாலியாக பேசிக் கொண்டிருந்தார்கள். பின் எல்லோருமே கிளம்பி தங்கராஜ் வீட்டிற்கு போனார்கள். தங்கராஜ் வழக்கம் போல தன்னைப் பற்றி ரொம்பவே பந்தாவாக பெருமையாக பேசிக் கொண்டிருந்தார். கோமதிக்கு கடுப்பானாலும் வெளியில் காண்பித்துக் கொள்ளாமல் அமைதியாக இருந்தார். இன்னொரு பக்கம் முத்துவேல் வியாபாரம் விஷயமாக வெளியூர் கிளம்புவதாக சொன்னார். உடனே சக்திவேல், என்ன வியாபாரம்? எங்களிடம் என்ன மறைக்கிறீர்கள்? நிறைய பணம் பரிமாற்றம் நடக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
உண்மையை சொல்லுங்கள். அந்த கதிருடன் உங்களுக்கு என்ன பழக்கம்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. முத்துவேல், உண்மையை சொல்ல முடியாமல் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. நான் வந்து எல்லா பற்றியும் பேசுகிறேன் என்றார். இருந்தாலும் சக்திவேல் தன் அண்ணன் மீது அதிகமாக கோபப்பட்டார். முத்துவேல் கிளம்பி கதிர் சொன்ன இடத்திற்கு சென்று விட்டார். கதிர், முத்துவேல் இருவரும் காரில் ஏறி சென்றார்கள். இதை சக்திவேல் குமார் ஒளிந்து நின்று பார்த்தார்கள். இவர்கள் பார்த்ததை கதிர் பார்த்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மலரின் மாமியார், மாமனார் இருவருமே வெளியே செல்வதற்கு வரமாட்டேன் என்கிறார்கள். ஒரு வழியாக கோமதி, மீனா எல்லோருமே பேசி அவர்களை வெளியே செல்ல ஒத்துக் கொள்ள வைக்கிறார்கள். அதற்குப்பின் மீனா, மதி,மலர், ராஜி ஆகிய நான்கு பேரும் ஜாலியாக தங்களுடைய காதல் கதைகளை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது வந்த சுரேஷ், சாப்பாடு சாப்பாடு செய்து தரச் சொல்லி மலரிடம் கேட்கிறார். உடனே மீனா, மதியை சமைத்து தர சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
மதி எதுவும் பேசாமல் உள்ளே சென்று விடுகிறார். பின் சுரேஷுக்காக மதி சமைத்துக் கொடுக்கிறார். சுரேஷும் ஆச்சரியத்துடனே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார். அப்போது வந்த மலரின் மாமியார், மதி வேலை செய்வதை வியந்து போய் பாராட்டுகிறார். இருந்தாலும் மதி அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்று விடுகிறார். இன்னொரு பக்கம் ஆபரேஷன் நினைத்து முத்துவேல் ரொம்பவே பயந்து கொண்டிருக்கிறார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்கிறார். அதற்குப்பின் இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்புகிறார்கள்.






