விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி தான் செய்த தவறை உணர்ந்து பழனியிடம் மன்னிப்பு கேட்டு எமோஷனலாக பேசி இருந்தார். பின் ராஜி, தன் அப்பாவிடம் கொடுக்க சொல்லி இரண்டு கடிதத்தை பழனியிடம் கொடுத்தார். வீட்டிற்கு வந்த பழனியிடம் காந்திமதி, கோமதி குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரித்தார். அதற்குப்பின் பழனி, ராஜி கொடுத்த கடிதத்தை தன்னுடைய அண்ணன்கள் இடம் கொடுத்தார். முத்துவேல் அந்த கடிதத்தை பிரித்து படித்தார். ராஜி எமோஷனலாக தன் அப்பாவிற்கு நன்றி சொல்லி எழுதி இருந்தார். இன்னொரு பக்கம் சக்திவேலும், ராஜி எழுதிய கடிதத்தை பார்த்து ரொம்பவே அழுதார்.

போலீஸ் ஸ்டேஷனில் நகையை ஒப்படைக்க செல்வதால் செந்தில், நான் கடையை பார்த்துக் கொள்கிறேன். நீங்கள் போலீஸ் ஸ்டேஷன் போயிட்டு வாருங்கள் என்றார். அதற்குப் பின் எல்லோரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் சென்றார்கள். அங்கு நகைகளை எல்லாம் மீனா எடுத்துக் கொடுத்தார். பாக்கியா, நகைகளை பார்த்து இது கருத்து விட்டது. இதெல்லாம் எங்களுடைய நகையில்லை. கவரிங் நகை என்று அழுது ட்ராமா செய்கிறார். பாண்டியன், கோமதி இருவருக்கும் ஒன்றுமே புரியவில்லை. போலீஸ், இது எப்படி நடந்தது? என்ன ஆச்சு? என்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாக்கியா, நாங்கள் என்பது பவுன் நகை போட்டோம். ஆனால், எல்லாமே கவரிங் ஆக இருக்கிறது. இவர்கள் பையனுக்கு கவர்மெண்ட் வேலை வாங்குவதற்கும், கார் போட்டு தருவதற்கும் எங்களுடைய நகையை வைத்து தான் செய்திருக்கிறார்கள் என்பது இப்பதான் புரிகிறது என்று புது ட்ராமா போட்டார். இதையெல்லாம் பார்த்து கோபப்பட்ட மீனா, நீங்கள் உண்மையாகவே என்பது பவுன் நகை போட்டீர்களா? அவர்கள் சொல்வதெல்லாம் பொய். எட்டுப் பவன் தான் உண்மை. இந்த விஷயம் தாலி பிரித்து கோர்க்கும் விழாவின் போது தெரிந்தது என்றார். இதைக் கேட்டு கோமதி ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாக்கியா, மீனா சொல்வதெல்லாம் பொய். நான் 80 பவுன் நகை போட்டது தான் உண்மை என்று வாதம் செய்து கொண்டிருக்கிறார். சரவணன், நாங்கள் உங்களிடம் வரதட்சனை கேட்டோமா? நகை போட சொன்னோமா? எதற்காக இப்படி பொய் சொல்கிறீர்கள் என்று கேட்கிறார். இருந்தாலும் விடாமல் பாக்கியா, உண்மையாகவே நகை போட்டது போல விவாதம் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மீனா, இவர்கள் சொல்வது பொய். அதற்கு சாட்சி நானும் என் தங்கை ராஜி தான் என்று சொல்கிறார். பின் போலீஸ் ராஜி-தங்கமயில் இருவரையும் போலீஸ் ஸ்டேஷனுக்கு வர சொல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பாக்கியா, தங்கமயிலுக்கு உடம்பு முடியல என்று சொல்கிறார். ஆனால், போலீஸ் கேட்கவில்லை. பின் ராஜி-தங்கமயில் இருவரும் கிளம்பி போலீஸ் ஸ்டேஷன் வந்து விடுகிறார்கள். அப்போது தங்கமயில் இடம் பாக்கியம், நகை போட்டது உண்மைதான் என்று சொல். இல்லை என்றால் நாம் தான் மாட்டிக் கொள்வோம் என்று சொல்கிறார். பின் தங்கமயில், 80 பவுன் நகை போட்டு வந்தது உண்மைதான் என்கிறார். மீனா-ராஜி இருவரும் மாற்றி மாற்றி தங்கமயிலை கேள்வி கேட்கிறார்கள். ஆனால், தங்கமயில் பொய் சொல்லிக் கொண்டிருக்கிறார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட ராஜி, உங்களுக்கு மாமா மீது உண்மையான பாசம் இருந்தால் உண்மையை சொல்லுங்கள் என்கிறார். தங்கமயில் அமைதியாக இருக்கிறார்.






