விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, மகன்கள் எல்லோருமே தன் அம்மாவை அழைத்து வர சொல்லி பாண்டியனிடம் கேட்டார்கள். பின் ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வற்புறுத்தியிருந்தால் பாண்டியன், கோமதியை அழைத்து வர சென்னார். வழியில் கோபத்தில் கோமதி, பாண்டியன் சொல்வதை கூட கேட்காமல் சென்று கொண்டே இருந்தார்.
பாண்டியனும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை. பின் ஒருவழியாக பாண்டியன், கோமதியை சமாதானம் செய்து விட்டார்.

ராஜியின் அப்பா முத்துவேலுக்கு கேன்சர் இருப்பதை கதிர் அறிந்து கொண்டார். பின் இதைப்பற்றி கதிர், முத்துவேலிடம் பேசி இருந்தார். முத்துவேல் ரொம்ப வேதனையில் இருந்தார். இதைப் பற்றி இரண்டு வீட்டிலும் சொல்ல வேண்டாம் என்று முத்துவேல் சொன்னார். அதற்கு பின் திருச்சியில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வதற்காக முத்துவேல் கிளம்ப தயாராக இருந்தார். கதிர், நானும் வருகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்துவேல் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சோகமாக இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றும் புரியவில்லை. சக்திவேல், முத்துவேலினுடைய நடவடிக்கைகளை கண்டு சந்தேகப்பட்டார். அதற்குப்பின் திருச்சியில் ஒரு வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு முத்துவேல் கிளம்பினார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய வீட்டில் வாடகை சவாரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினார். ராஜிக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குப்பின் கதிர்- முத்துவேல் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இதை சக்திவேல் பார்த்து சந்தேகப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் மீனா, தங்கமயில் இருவரும் சந்தித்து ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து செந்தில் ஷாக் ஆகிறார். அதற்குப்பின் மீனாவிடம் இதைப்பற்றி செந்தில் விசாரிக்கிறார். மீனா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். மீனா- செந்தில் இருவருக்கும் இடையே பெரிய கலவரமே வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் செந்தில், இனி உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது. நான் வீட்டை விட்டு போகிறேன் என்று தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது செந்தில், மீனா செய்த காரியத்தை சொல்கிறார். கோமதி ஷாக் ஆகிறார்.
https://www.youtube.com/watch?si=57lTY82ntbpQNqnJ&v=D2QViwuDQWw&feature=youtu.be
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் மீனா, தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தான் நான் அவருடன் பேசுகிறேன் என்று சொல்கிறார். இதைக் கேட்டு பாண்டியன் ஷாக் ஆகிறார். கோமதி, இந்த விஷயம் சரவணனுக்கு தெரியுமா? என்று சொல்கிறார். மீனா, அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார் என்றார். உடனே கோபத்தில் கோமதி சரவணனை அடி வெளுத்து வாங்குகிறார்






