விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜியின் அப்பா முத்துவேலுக்கு கேன்சர் இருப்பதை கதிர் அறிந்து கொண்டார். பின் இதைப்பற்றி கதிர், முத்துவேலிடம் பேசி இருந்தார். முத்துவேல் ரொம்ப வேதனையில் இருந்தார். இதைப் பற்றி இரண்டு வீட்டிலும் சொல்ல வேண்டாம் என்று முத்துவேல் சொன்னார். அதற்கு பின் திருச்சியில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வதற்காக முத்துவேல் கிளம்ப தயாராக இருந்தார். கதிர், நானும் வருகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்துவேல் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சோகமாக இருந்தார்.

வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றும் புரியவில்லை. சக்திவேல், முத்துவேலினுடைய நடவடிக்கைகளை கண்டு சந்தேகப்பட்டார். அதற்குப்பின் திருச்சியில் ஒரு வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு முத்துவேல் கிளம்பினார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய வீட்டில் வாடகை சவாரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினார். ராஜிக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குப்பின் கதிர்- முத்துவேல் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இதை சக்திவேல் பார்த்து சந்தேகப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மீனா, தங்கமயில் இருவரும் சந்தித்து ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள். அதை பார்த்து செந்தில் ஷாக் ஆகிறார். அதற்குப்பின் மீனாவிடம் இதைப்பற்றி செந்தில் விசாரித்தார். மீனா ஏதேதோ சொல்லி சமாளித்தார். பின் மீனா- செந்தில் இருவருக்கும் இடையே பெரிய கலவரமே வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் செந்தில், இனி உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது. நான் வீட்டை விட்டு போகிறேன் என்று தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து விட்டார். அப்போது செந்தில், மீனா செய்த காரியத்தை சொன்னார். கோமதி ஷாக் ஆனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில் சொன்ன வார்த்தையால் கடுப்பாகிய கோமதி, மீனாவிற்கு ஃபோன் செய்து வீட்டிற்கு வர வைக்கிறார். மீனா வீட்டிற்கு வந்தவுடன் பாண்டியன்- கோமதி இருவருமே மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருக்கிறார்கள். ஒரு கட்டத்தில் மீனா எல்லா உண்மையும் சொல்லி விடுகிறார். தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார். அதனால் தான் நான் தங்க மயிலுடன் பேசுகிறேன். ஹாஸ்பிடலுக்கு நான் தான் அவருடன் போனேன். ஆனால், அவர் வீட்டில் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார்.

சீரியல் ட்ராக்:
இந்த விஷயம் சரவணன் மாமாவிற்கு ஏற்கனவே தெரியும். ஆனால், அவர் அந்த குழந்தைக்கும் தனக்கும் சம்பந்தமில்லை என்று சொல்லிவிட்டார் என்று நடந்த எல்லா உண்மையும் சொல்லிவிடுகிறார். இதை கேட்டு பாண்டியன் ஷாக் ஆகிறார். கோமதி, சரவணன் அப்படி சொல்லி இருக்க மாட்டான் என்று வேதனைப்படுகிறார். பின் பாண்டியன், செந்திலை கடைக்கு போக சொல்லி சரவணனைஅழைத்து வர சொல்கிறார்.






