விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா, ராஜி இருவரும் சென்னைக்கு செல்வதை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கோமதியுமே தனக்கு இருக்கும் ஆசையை பற்றி சொல்லிக் கொண்டிருந்தார். உடனே மீனா, நீங்களும் சென்னைக்கு வாருங்கள் என்று கூப்பிட்டார். கோமதி, முடியாது என்று மறுத்தார். ஒரு வழியாக ராஜி- மீனா இருவரும் சேர்ந்து கோமதியையும் சென்னைக்கு அழைத்து செல்ல ஒத்து வைத்தார்கள். பின் இதைப் பற்றி கோமதி, பாண்டியன் இடம் சொன்னார். அதற்குப்பின் மீனாவின் அம்மா போன் செய்து சென்னைக்கு போகும் விஷயத்தை பற்றி விசாரித்தார்.

மீனா, நான் ராஜி என் மாமியார் மூவருமே செல்கிறோம் என்றார். எதற்காக அவர்களெல்லாம் உன்னுடன் அழைத்து செல்கிறாய் என்று மீனாவின் அம்மா கேட்டார். ராஜியின் தேர்வுக்காக என் மாமியாரும் உடன் வருகிறார் என்றார். மீனாவின் அம்மா சொந்தக்காரர் வீட்டில் தங்கிக் கொள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றெல்லாம் சொல்வதால் மீனாவும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் கதிர், ராஜிக்கு வாழ்த்துக்கள் சொல்லி அறிவுரை எல்லாம் செய்தார். அதற்குப்பின் ராஜி, தன் அம்மா அப்பாவை பார்த்து தேர்வு விஷயத்தை சொல்லி ஆசீர்வாதம் வாங்கினார். முத்துவேல்- வடிவு இருவரும் சந்தோஷமாக தன் மகளை ஆசீர்வாதம் செய்தார்கள். இதை பார்த்து சக்திவேலுக்கு கடுப்பானது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜி, தன்னுடைய பாட்டி சித்தப்பா சித்தி எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா ,தன்னுடைய அம்மா உறவினர் வீட்டில் தங்க சொல்லும் விஷயத்தை சொன்னார். கோமதி, இதுவும் சரிதானே அங்கேயே தாங்கிக் கொள்ளலாம் என்றார். ஆனால், மீனா வேண்டாம் என்றார். அந்த சமயம் மீனாவின் அம்மா, பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாவின் அம்மா, நீங்கள் ஹோட்டலில் தங்குவது சரியாக இல்லை. இவர்கள் இருவரும் சென்ற பிறகு நீங்கள் தனியாகத்தான் இருப்பீர்கள்.

சீரியல் ட்ராக்:
அதனால் என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எந்த பிரச்சினையும் வராது என்றார். இதனால் கோமதி- பாண்டியன் இருவரும் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இதில் மீனாவிற்கு விருப்பமே இல்லை.கடைசியில் சென்னைக்கு செல்வதற்கு கோமதி, ராஜி, மீனா மூவரும் தயாராகி வந்தார்கள். அப்போது கோமதி, வீட்டில் உள்ள எல்லோரிடமும் பத்திரமாக இருக்க சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார். பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.
https://www.youtube.com/watch?v=LEFpBXH_7gA
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் ப்ரோமோவில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- அழகே அழகு சீரியல் உடைய மகா சங்கமம். பாண்டியன் குடும்பத்தினர் அழகே அழகு குடும்பத்திற்கு சென்றிருக்கிறார்கள். அங்கு மலர், எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். இருந்தாலுமே மலரின் மாமியார் மீண்டும் மீண்டும் வேலை வைத்துக் கொண்டிருப்பதால் கோமதி கேள்வி கேட்கிறார். அதற்குப்பின் தங்கராஜை பற்றி ரொம்ப பெருமையாக மலர் மாமனார் பேசுகிறார். உடனே கோமதி கலாய்க்கிறார்.






