விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜியின் தேர்வுக்காக என் மாமியாரும் உடன் வருகிறார் என்றார். மீனாவின் அம்மா சொந்தக்காரர் வீட்டில் தங்கிக் கொள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றெல்லாம் சொல்வதால் மீனாவும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொண்டார். அதற்குப்பின் கதிர், ராஜிக்கு வாழ்த்துக்கள் சொல்லி அறிவுரை எல்லாம் செய்தார். அதற்குப்பின் ராஜி, தன் அம்மா அப்பாவை பார்த்து தேர்வு விஷயத்தை சொல்லி ஆசீர்வாதம் வாங்கினார். முத்துவேல்- வடிவு இருவரும் சந்தோஷமாக தன் மகளை ஆசீர்வாதம் செய்தார்கள். இதை பார்த்து சக்திவேலுக்கு கடுப்பானது.

ராஜி, தன்னுடைய பாட்டி சித்தப்பா சித்தி எல்லோரிடமும் ஆசீர்வாதம் வாங்கி விட்டு வீட்டிற்கு வந்தார். அப்போது மீனா ,தன்னுடைய அம்மா உறவினர் வீட்டில் தங்க சொல்லும் விஷயத்தை சொன்னார். கோமதி, இதுவும் சரிதானே அங்கேயே தாங்கிக் கொள்ளலாம் என்றார். ஆனால், மீனா வேண்டாம் என்றார். அந்த சமயம் மீனாவின் அம்மா, பாண்டியன் வீட்டிற்கு வந்தார். அப்போது மீனாவின் அம்மா, நீங்கள் ஹோட்டலில் தங்குவது சரியாக இல்லை. இவர்கள் இருவரும் சென்ற பிறகு நீங்கள் தனியாகத்தான் இருப்பீர்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
அதனால் என்னுடைய அண்ணன் வீட்டில் தங்கிக் கொள்ளுங்கள். உங்களுக்கு பாதுகாப்பாக இருக்கும். எந்த பிரச்சினையும் வராது என்றார். இதனால் கோமதி- பாண்டியன் இருவரும் ஒத்துக்கொண்டார்கள். ஆனால், இதில் மீனாவிற்கு விருப்பமே இல்லை.கடைசியில் சென்னைக்கு செல்வதற்கு கோமதி, ராஜி, மீனா மூவரும் தயாராகி வந்தார்கள். அப்போது கோமதி, வீட்டில் உள்ள எல்லோரிடமும் பத்திரமாக இருக்க சொல்லி எமோஷனலாக பேசி இருந்தார். பாண்டியன், கோமதிக்கு ஆறுதல் சொல்லி அனுப்பி வைத்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா குடும்பத்தினர் எல்லோருமே கிளம்பி சென்னைக்கு போகிறார்கள். அங்கு மலரின் கணவர் மீனாவின் குடும்பத்தினரை காரில் அழைத்துக் கொண்டு வீட்டிற்கு வருகிறார். வீட்டிற்கு வந்தவுடன் எல்லோருமே மீனாவின் குடும்பத்தை விசாரிக்கிறார்கள். மலர் ஒவ்வொரு வேலையாக பார்த்து பார்த்து செய்கிறார். இன்னொரு பக்கம் செந்தில் எல்லோருக்கும் சாப்பாடு சமைத்து வைக்கிறார். அதை சாப்பிட்டு வீட்டில் எல்லோரும் பாராட்டுகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பாண்டியனுமே செந்தில் சமையலை பாராட்டுகிறார். பின் கோமதி, மலரின் வீட்டில் எல்லோரிடமும் சகஜமாக பழகிவிட்டார். ரொம்ப ஜாலியாக பேசி கொண்டு இருக்கிறார். கோமதி, மலரின் சாப்பாட்டை ரொம்பவே புகழ்ந்து பேசுகிறார். பின் மீனா- ராஜி இருவரும் கிளம்பி செல்கிறார்கள். கோமதியும் மலரின் மாமியாரிடம் பேசிக் கொண்டிருக்கிறார்.






