விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் போலீஸ், பாண்டியன் வீட்டை சுற்றியுள்ள எல்லோரிடமும் பாண்டியன் குடும்பத்தை பற்றி விசாரித்தார்கள். எல்லோருமே பாண்டிய குடும்பத்தை பற்றி நல்லவிதமாக தான் சொன்னார்கள். காந்திமதி, மாரி, வடிவு எல்லோருமே தங்கமயில் பொய் புகார் கொடுத்திருந்தார்கள். பாண்டியன் குடும்பம் அப்படி கிடையாது என்றெல்லாம் சொன்னார்கள். இன்னொரு பக்கம் போலீஸ் ஸ்டேஷனில் மீனா, மீனாவின் அப்பா, முத்துவேல், சக்திவேல் எல்லோருமே எடுத்து சொல்லி புரிய வைத்தார்கள்.

இதை எல்லாம் போலீஸ் கேட்கவில்லை. பின் போலீஸ், அரசி-ராஜி மட்டும் வீட்டிற்கு அழைத்துப் போகலாம். மற்றவர்கள் இங்கு இருக்கட்டும். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள் என்று சொல்லி விடுகிறார். இதை கேட்டு சரவணன் கோபப்படுகிறார். கோமதி ரொம்ப எமோஷனலாக கதறி அழுகிறார். பாண்டியன் குடும்பமே வேதனையில் உடைந்து கிடக்கிறது.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன் வீட்டில் எல்லோரையுமே சிறையில் அடைக்கப் போவதாக போலீஸ் சொன்னார். வீட்டில் உள்ள எல்லோருமே பதறினார்கள். கோமதி ரொம்பவே அழுதார். பாண்டியன் மனம் உடைந்து விட்டார். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் இருந்து ஜெயிலுக்கு பாண்டியன் குடும்பத்தை அழைத்து போனார்கள். வேதனையில் ராஜி, அரசி, மீனா தங்களுடைய வீட்டிற்கு வந்தார்கள். முத்துவேல்- சக்திவேல் இருவரும் பகையை மறந்து பாண்டியன் வீட்டிற்குள் வந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
வேதனையில் இருக்கும் அரசி, ராஜிக்கு முத்துவேல் ஆறுதல் சொல்லிவிட்டு தங்களுடைய வீட்டிற்கு அழைத்தார்கள். ராஜி- அரசி வர மறுக்கிறார்கள். பின் அப்பத்தா அவர்களுக்கு துணையாக அங்கேயே இருப்பதாக முத்துவேல், சக்திவேல் எதுவும் பேசாமல் ஆறுதல் சொல்லிவிட்டு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் தனித்தனி செல்லில் பாண்டியன் குடும்பத்தின் ஆட்களை போட்டு இருந்தார்கள். கோமதி தன்னுடைய கணவன் மகன்களை நினைத்து அழுதழுது அவருக்கு நெஞ்சு வலி வந்து விட்டது.
https://www.youtube.com/watch?v=6K72et3aVI4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் நீதிமன்றத்தில் பாக்கியா, பாண்டியன் குடும்பத்திற்கு எதிராக பொய் புகார்களை கொடுக்கிறார். பாண்டியன், தங்கள் தரப்பில் எந்த தவறும் இல்லை என்று சொல்கிறார். பின் முத்துவேல்-சக்திவேல் இருவரும் பாண்டியன் குடும்பத்திற்காக சப்போர்ட் செய்து பேசுகிறார்கள். இதனால் நீதிமன்றம் பாண்டியன் குடும்பத்தை இந்த வழக்கிலிருந்து விடுவிக்கிறது.
பாண்டியன், முத்துவேல் கையை பிடித்து நன்றி சொல்கிறார். கோமதி, தன் அண்ணனிடம் ரொம்ப எமோஷனலாக அழுது பேசுகிறார்.






