விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன் வேலைக்கு கிளம்பும்போது கோமதி வீட்டில் உள்ள எல்லா டாக்குமெண்ட், பீரோ சாவி, நகைகள், பணம் எல்லாவற்றையும் எடுத்து வந்து வைக்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அப்போது கோமதி, எல்லாருடைய பொறுப்பையும் கொடுத்துவிட்டு நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்றார். எல்லோருமே, என்னாச்சு? எங்கம்மா போவ? எங்கள விட்டா உனக்கு என்ன வழி? என்று பேசி இருந்தார்கள். இதனால் கோமதி, என்னுடைய மரியாதைக்காக நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்றார். பாண்டியன், திருப்பியும் ஒரு நாடகம் போடுகிறாயா என்று கிண்டல் அடிக்கிறார்.

கோமதி, மரியாதை இல்லாத வீட்டில் என்னால் இனி ஒரு நிமிஷம் இருக்க முடியாது. நான் வீட்டை விட்டு போகிறேன் என்றார். உடனே பிள்ளைகள் எல்லோருமே கோமதி சொன்னதற்கு கிண்டல் தான் செய்தார்கள். மீனா திட்டுகிறார். பாண்டியன், எதற்கு இந்த நாடகம் என்று மீண்டும் கிண்டல் அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோமதி வீட்டை விட்டு வெளியேறினார். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மீனா, மகன்கள் எல்லோருமே தன் அம்மாவை அழைத்து வர சொல்லி பாண்டியனிடம் கேட்டார்கள். பின் ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வற்புறுத்தியிருந்தால் பாண்டியன், கோமதியை அழைத்து வர சென்னார். வழியில் கோபத்தில் கோமதி, பாண்டியன் சொல்வதை கூட கேட்காமல் சென்று கொண்டே இருந்தார்.
பாண்டியனும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை. பின் ஒருவழியாக பாண்டியன், கோமதியை சமாதானம் செய்து விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜியின் அப்பா முத்துவேலுக்கு கேன்சர் இருப்பதை கதிர் அறிந்து கொள்கிறார். பின் இதைப்பற்றி கதிர், முத்துவேலிடம் பேசுகிறார். முத்துவேல் ரொம்ப வேதனையில் இருக்கிறார். இதைப் பற்றி இரண்டு வீட்டிலும் சொல்ல வேண்டாம் என்று முத்துவேல் சொல்கிறார். அதற்கு பின் திருச்சியில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வதற்காக முத்துவேல் கிளம்ப தயாராக இருக்கிறார். கதிர், நானும் வருகிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்துவேல் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சோகமாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றும் புரியவில்லை. சக்திவேல், முத்துவேலினுடைய நடவடிக்கைகளை கண்டு சந்தேகப்படுகிறார். அதற்குப்பின் திருச்சியில் ஒரு வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு முத்துவேல் கிளம்புகிறார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய வீட்டில் வாடகை சவாரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்புகிறார். ராஜிக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குப்பின் கதிர்- முத்துவேல் இருவரும் சந்தித்துக் கொள்கிறார்கள். இன்னொரு பக்கம் மீனா, தங்கமயிலிடம் போன் பேசுவதை பார்த்து செந்தில் சந்தேகப்படுகிறார்.






