விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியம், வேண்டும் என்று கோமதியையும் அவருடைய குடும்பத்தையும் தரகுறைவாக பேசி இருந்தார். மீனா, ராஜி தடுத்தும் பாக்கியம் கேட்கவில்லை. கோமதி, பேசுவதற்கெல்லாம் பதிலுக்கு பதில் பாக்கியம் கொடுத்துக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கொந்தளித்த தங்கமயில், நீ எதுவும் பேச வேண்டாம். அம்மா அமைதியாக இரு. அம்மா நீ எனக்கு செய்த வரையும் போதும் என்று சொல்லி கோமதி, மீனா, ராஜி மூவரையும் தன்னுடைய அறைக்கு அழைத்துச் சென்றார். பாக்கியம் எவ்வளவு சொல்லியுமே தங்கமயில் கேட்கவில்லை.

தங்கமயில், நான் செய்ததெல்லாம் தவறுதான். அந்த தவறுக்கான தண்டனையாக தான் இதை பார்க்கிறேன் என்று மனம் விட்டு பேசி இருந்தார். கோமதி, எல்லா நேரமும் ஒரே மாதிரி இருக்காது. நிலைமை மாறும் கவலைப்படாதே என்று ஆறுதல் சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் சரவணன், குழந்தையை நான் நன்றாக பார்த்துக் கொள்கிறேன். ஆனால், தங்கமயில் உடன் சேர்ந்து வாழு என்று சொல்ல வேண்டாம் என்றார். பாண்டியன், எதுவாக இருந்தாலும் யோசித்து தான் முடிவு எடுக்கணும். நீ எதுவும் நினைக்காதே என்றார். சரவணன், என் வாழ்க்கையில் முடிவெடுக்க எனக்கு உரிமை இல்லையா? என்று தன்னுடைய அப்பாவை எதிர்த்து பேசிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் கதிர், ட்ரீட்மெண்டை சீக்கிரமாகவே தொடங்கிவிடலாம் என்றார். முத்துவேல், அதற்குள் நான் என் அம்மாவுடன் கொஞ்ச நாள் இருக்க வேண்டும் என்று நினைக்கிறேன். எப்படியாவது என்னுடைய அம்மாவை வீட்டிற்கு அனுப்பி வை என்று கேட்டார். கதிருமே அதற்கு வாக்குறுதி கொடுத்தார். பின் முத்துவேல் வீட்டிற்கு வந்தார். அப்போது சுகன்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை பழனிவேல் சொல்லி சந்தோஷப்பட்டார். எல்லோருமே வீட்டில் சந்தோஷமாக இருந்தார்கள். பின் இதைப்பற்றி பழனி பாண்டியன் குடும்பத்திற்கு சொல்லப் போனார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன் வீட்டிற்கு பழனி- சுகன்யா இருவரும் வருகிறார்கள். அப்போது பழனிவேல், சுகன்யா கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார். இதனால் மொத்த குடும்பமும் சந்தோஷப்படுகிறது. எல்லோரும் ஸ்வீட் கொடுத்து பழனி, சுகன்யா இருவருக்கும் வாழ்த்துக்களை சொல்கிறார்கள். பின் இதைப் பற்றி செந்தில், மீனாவிற்கும் போன் பண்ணி தகவலை சொல்லி விடுகிறார்கள்.
பின் பழனியை தனியாக சந்தித்த கதிர், இந்த நேரத்தில் அப்பத்தா உங்களுடன் இருந்தால் நன்றாக இருக்கும். உங்கள் வீட்டிற்கு அழைத்துக் கொண்டு செல்லுங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பழனி, முதலில் தயங்கினாலும் பதில் சொல்வதை ஒத்துக்கொள்கிறார். அதற்குப்பின் பாண்டியன், வீட்டில் எல்லோருமே சாப்பிட்டுக் கொண்டிருக்கிறார்கள். தன்னுடைய அம்மாவிடம் பழனி, நீ என்னுடன் வந்துவிடுமா? சுகன்யாவிற்கு ஒத்தாசையாக இருக்கும் என்றெல்லாம் சொல்கிறார். உடனே கோபத்தில் காந்திமதி, என்னை அவமானப்படுத்திய உன் அண்ணன்கள் வந்து கூப்பிடட்டும் நான் வருகிறேன். அதுவரைக்கும் நான் அந்த வீட்டு பக்கம் வரமாட்டேன் என்று சொல்கிறார். பழனி, எவ்வளவு சொல்லியுமே காந்திமதி கேட்கவில்லை. ஒரு கட்டத்தில் பாண்டியன் - கோமதி இருவரும் பழனியை திட்டி காந்திமதியை அனுப்ப முடியாது என்று சொல்லிவிடுகிறார்கள்.






