விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாண்டியன், நீ நல்லபடியாக கடையை தொடங்கு என்றார். பின் பழனிவேல் கடையை திறக்கும் விஷயத்தைப் பற்றி செந்தில், மீனாவிடம் கோமதி சொன்னார். இன்னொரு பக்கம் சுகன்யா, பாண்டியன் வீட்டில் நடந்ததை எல்லாம் முத்துவேல் வீட்டில் சொன்னார். இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். பழனிவேல், நான் இந்த கடை வைக்க சம்மதித்து இருக்கக்கூடாது. அவர்களிடம் சொல்லாமல் செய்தது தவறுதான் என்றெல்லாம் வருத்தப்பட்டு பேசி இருந்தார். இதனால் முத்துவேல் திட்டினார். பின் காந்திமதி, பழனியை சமாதானம் செய்து கடையை திறப்பதற்கான வேலைகளை செய்ய சொன்னார்.

சரவணன், உன்னுடைய சுயரூபம் பற்றி வீட்டில் சொல்ல வரும்போதுமெல்லாம் ஏதாவது வேறு ஒரு பிரச்சனை வந்து விடுகிறது. நீயும் தப்பித்து விடுகிறாய். சித்தப்பா நல்லபடியாக மாமா நல்லபடியாக கடையை திறக்கட்டும். நீ மூட்டை முடிச்சை கட்டி ரெடியாக இரு. உன்னை பற்றி சொல்வது உறுதி தான் என்றெல்லாம் சொன்னார். தங்கமயில், என்ன நடக்குமோ என்று புலம்பி கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ராஜி, தூங்கிக் கொண்டே இருக்கும் போது கெட்ட கனவு வருவதால் கதிர் பக்கத்தில் படுத்து கொண்டார். மறுநாள் காலையில் எல்லோருமே பழனியின் புதுக்கடைக்கு செல்வதற்கு தயாராக இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் பாண்டியன் வீட்டில் கடை எங்கே? இருக்கிறது என்று விசாரித்தார்கள். பழனிக்கு கடை இருக்கும் இடம் தெரியவில்லை. பின் இதைப்பற்றி கேட்பதற்காக பழனி தன்னுடைய அண்ணன்கள் வீட்டுக்கு வந்தார். ஆனால், அவருடைய அண்ணன்கள் எதுவுமே சொல்லாமல் சர்ப்ரைஸ் என்று சொன்னார்கள். பின் பழனி மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டிருந்தார். பின் அந்த கடை இருக்கும் இடம் பற்றி சொல்ல சொல்கிறார்கள். இதற்கு பழனி, எதற்கு அங்கு வைத்தீர்கள் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்த நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், வீட்டில் யாருமே பழனி கிடைத்திருக்கும் விழாவிற்கு போகவே இல்லை. கோமதி எல்லோரிடமும் போக சொல்கிறார். ஆனால் சரவணன், செந்தில் எல்லோரும் மறுக்கிறார்கள். மீனா, நான் வேலையை முடித்துவிட்டு பார்த்து வருகிறேன், கவலை படாதீர்கள் என்று ஆறுதல் சொல்லிவிட்டு செல்கிறார். இன்னொரு பக்கம் பழனி தன்னுடைய அண்ணங்களுடன் தன்னுடைய கடைக்கு வருகிறார். அப்போது பாண்டியன் வைத்திருக்கும் கடை தெருவில் தான் பழனிக்கும் கடை வைத்திருக்கிறார்கள். இதை அறிந்து பழனி ஷாக் ஆகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் பழனி, இந்த கடை வேண்டாம். வேறு எங்காவது வைக்கலாம். மச்சானுடைய கடை பாதிக்கும் என்றெல்லாம் சொல்கிறார். ஆனால் முத்துவேல்- சக்திவேல் இருவருமே கேட்கவில்லை. சுகன்யா, நீங்கள் இங்கு பிரச்சனை செய்தால் நான் கிளம்பி போய் விடுவேன் என்றெல்லாம் வழக்கம்போல சண்டை போட்டுக் கொண்டிருக்கிறார். வீட்டில் உள்ள எல்லோருமே பேசி புரிய வைக்கிறார்கள். ஆனால், பழனிக்கு விருப்பமே இல்லை. இருந்தாலும் தன்னுடைய அண்ணன்கள் கட்டாயத்தினால் கடைக்குள் செல்கிறார்/ அந்த சமயம் பார்த்து பாண்டியன், சரவணன் வருகிறார்கள். அப்போது பழனி, தனக்கு போட்டியாக கடை திறந்து இருக்கிறார் என்று பாண்டியன் தவறாக புரிந்து கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






