விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி கண் விழித்து விட்டதாக சொன்னார்கள். உடனே பாண்டியன், கோமதியை பார்க்க ஹாஸ்பிடலுக்கு போனார். அங்கு கோமதியை பார்த்து தான் எமோஷனலாக வருத்தப்பட்டு பாண்டியன் பேசி இருந்தார். கோமதி எதுவும் சொல்லாமல் அமைதியாக இருந்தார். அதற்கு பின் கோமதியை டிஸ்சார்ஜ் செய்து வீட்டிற்கு அழைத்து வந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே கோமதியின் உடல்நலத்தில் அக்கரையாக நடந்து கொண்டார்கள்.பாண்டியனும் கோமதிக்காக பார்த்து பார்த்து செய்தார்.

கோமதி, நான் இல்லை என்றால் என்ன செய்வீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு கோமாதியின் பிள்ளைகள், சாப்பிட கஷ்டமாக இருக்கும். துணி துவைக்க கஷ்டமாக இருக்கும். வீட்டில் உள்ள பொருட்கள் எல்லாம் எங்கு இருக்கும் என்று தெரியாது என்றெல்லாம் சொன்னார்கள். இதைக் கேட்டு கோமதிக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கிறது. தன்னை நினைத்து கவலைப்படாமல் தங்களுக்கான தேவையை செய்ய ஆளிலேயே நினைத்து எனது வருத்தப்பட்டார்கள் என்று மீனாவிடம் சொல்லி கோமதி புலம்பி கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பாண்டியன் வேலைக்கு கிளம்பும்போது கோமதி வீட்டில் உள்ள எல்லா டாக்குமெண்ட், பீரோ சாவி, நகைகள், பணம் எல்லாவற்றையும் எடுத்து வந்து வைக்கிறார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. அப்போது கோமதி, எல்லாருடைய பொறுப்பையும் கொடுத்துவிட்டு நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்றார். எல்லோருமே, என்னாச்சு? எங்கம்மா போவ? எங்கள விட்டா உனக்கு என்ன வழி? என்று பேசி இருந்தார்கள். இதனால் கோமதி, என்னுடைய மரியாதைக்காக நான் இந்த வீட்டை விட்டு போகிறேன் என்றார். பாண்டியன், திருப்பியும் ஒரு நாடகம் போடுகிறாயா என்று கிண்டல் அடிக்கிறார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கோமதி, மரியாதை இல்லாத வீட்டில் என்னால் இனி ஒரு நிமிஷம் இருக்க முடியாது. நான் வீட்டை விட்டு போகிறேன் என்று சொல்கிறார். உடனே பிள்ளைகள் எல்லோருமே கோமதி சொன்னதற்கு கிண்டல் தான் செய்கிறார்கள். மீனா திட்டுகிறார். பாண்டியன், எதற்கு இந்த நாடகம் என்று மீண்டும் கிண்டல் அடிக்கிறார். இதனால் ஆத்திரம் அடைந்த கோமதி வீட்டை விட்டு வெளியேறுகிறார்.
பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
மீனா, மகன்கள் எல்லோருமே தன் அம்மாவை அழைத்து வர சொல்லி பாண்டியனிடம் கேட்கிறார்கள். பின் ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வற்புறுத்தியிருந்தால் பாண்டியன், கோமதியை அழைத்து வர செல்கிறார். வழியில் கோபத்தில் கோமதி, பாண்டியன் சொல்வதை கூட கேட்காமல் சென்று கொண்டே இருக்கிறார்.
பாண்டியனும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை






