விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார், கோவிலுக்கு எல்லாம் கூட்டிட்டு போக முடியாது என்று சொன்னார். உடனே அப்பத்தா திட்டியவுடன் வேறு வழியில்லாமல் அரசியை அழைத்துக் கொண்டு குமார் சொன்னார். இன்னொரு பக்கம் ராஜி, கதிர் இருவருமே வெளியே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி நல்ல மதிப்பெண் எடுத்ததை நினைத்து பெருமையாக கதிர் பேசி இருந்தார். பின் கதிர் இருப்பதை பார்த்தவுடன் குமார், அரசியை வம்பு இழுத்து அவளை தள்ளி விட்டார்.

இதையெல்லாம் பார்த்து கதிருக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே அரசி ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் குமார், பாண்டியன் முன் அரசியை அசிங்கப்படுத்த நினைத்தார். அங்கேயும் அரசி சமாளித்து விட்டார். பின் மீண்டும் பாண்டியனிடம் வம்பிழுக்க குமார் போனார். உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்தவுடன் அரசி, குமார் என்னை அடித்துக் கொடுமை படுத்துவதாக புகார் கொடுத்தார். இதனால் குமாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, அமைதியாக இருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் செந்தில் செய்த வேலையால் மீனா கோபமாக இருந்தார். அதனால் செந்தில் இடம் சரியாக மீனா பேசுவதில்லை. மீனா தன்னுடைய தந்தைக்கு போன் செய்து பணம் என்ன செய்தீர்கள்? என்று கேட்டார். அதற்கு அவர், பணத்தை வேலை வாங்கி தருபவரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொன்னார். இதனால் தன்னுடன் வேலை செய்பவரிடம் மீனா, 10 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி தர முடியுமா? என்று கேட்க கேட்டார். அதற்கு அவருமே என்னால் முடிந்தவரை ஏற்பாடு செய்கிறேன் என்று சொன்னார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் தங்கமயில், பிரக்னன்சி கிட் வாங்கி செக் செய்து பார்த்தார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து தங்கமயில் ரொம்ப சந்தோஷப்பட்டார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமே சொன்னார். பின் தங்கமயில் இந்த சந்தோஷமான விஷயத்தை சரவணன் இடம் சொல்ல போன் செய்தார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் தங்கமயில் மெசஜ் போட்டார். அதை பார்த்த சரவணன், இது புது ட்ராமாவா? ஒருவன் எத்தனை முறை ஏமாறுவது? என்று சொல்வதால் தங்கமயில் வருத்தப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் சரவணன் சொன்னதை நினைத்து தங்கமயில் ரொம்பவே கஷ்டப்படுகிறார். உடனே தங்கமயில், நீ கிளம்பு நாம் எதுவாக இருந்தாலும் சம்மந்தியிடம் பேசிக் கொள்ளலாம் என்று பாண்டியன் வீட்டிற்கு செல்கிறார்கள். அப்போது தங்கமயில் அம்மா, இந்த வீட்டிற்கு வாரிசு வரப்போகிறது. தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார் என்று சொல்கிறார். இதை கேட்டவுடன் பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சந்தோஷப்படுகிறார்கள். பின் சரவணனுக்கு போன் செய்து வீட்டிற்கு வர வைக்கிறார்கள். ஆனால், சரவணன் அதை எதையுமே நம்பவில்லை.

சீரியல் ட்ராக்:
பின் தனியாக ரூமிற்கு சென்று தங்கமயில் இடம் சரவணன், இதுவும் டிராமாவா? என் குடும்பத்தையே பொய் சொல்லி ஏமாற்றுகிறாயா? என்று சொல்கிறார். உடனே தங்கமயில், டெஸ்ட் பண்ண கிட்டை காண்பிக்கிறார். அதை சரவணன், ஏதாவது ஸ்கெட்ச் வச்சு கோடு போட்டாரா என்று அலைத்துப் பார்க்கிறார். இதையெல்லாம் பார்த்து தங்கமயிலுக்கு ரொம்பவே கஷ்டமாகிறது. பின் சரவணன், உண்மையாலுமே தங்கமயில் கர்ப்பமாக இருப்பதை உணர்ந்து அவரை சமாதானம் செய்கிறார். இருவருமே அப்பா- அம்மா ஆன சந்தோஷத்தில் இருக்கிறார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே ஸ்வீட் எடுத்து கொண்டாடுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






