விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பழனிக்கு கால் வலி என்பதால் சரவணன் மருந்து தேய்த்து காலை அமுத்தி விட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த சுகன்யா, சரவணனை திட்டிவிட்டு பழனியை அழைத்துக்கொண்டு சென்றார். பின் தங்கமயில், விஉன் மாமாவிற்கு சேவகம் செய்து கொண்டு இருப்பீர்களா? நான் இந்த வீட்டில் ஒரு மனுசியாக இருப்பதே தெரியவில்லையா? எதற்காக என்னை கல்யாணம் செய்தீர்கள்? என்றெல்லாம் கேட்டார். இதனால் கோபப்பட்ட சரவணன், அதுதான் எனக்கும் தெரியவில்லை. தயவு செய்து கிளம்பி உன் அம்மா வீட்டிற்கு போ என்றெல்லாம் திட்டினார்.

கதிர்-ராஜி இருவருமே அப்பத்தாவின் பிறந்தநாளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், தாத்தா- அப்பத்தா பற்றி எல்லாம் ராஜியிடம் கேட்டு தெரிந்து கொண்டார். மறுநாள் காலையில் அப்பத்தாவின் பிறந்தநாளுக்காக பாண்டியன் எல்லோரிடமும் பேசி இருந்தார். அப்போ பாண்டியன், அப்பத்தாவின் பிறந்தநாளுக்கு அன்னதானம் போடலாம். எந்த பிரச்சனையும் வரக்கூடாது. யாருடைய மனசும் கஷ்டப்படக்கூடாது என்றார். ஆசிர்வாதம் வாங்கிட்டு வந்துவிடலாம் என்றார். இதையெல்லாம் கேட்ட சுகன்யா, உடனே ஓடி வந்து சக்திவேலிடம் வத்தி வைத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதை கேட்டு சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டு பாண்டியனிடம் சண்டை போட தயாரானார். வீட்டில் உள்ள எல்லோருமே தடுத்தும் கேட்கவில்லை. பின் முத்துவேல் தடுத்து நிறுத்தி, கோயிலுக்கு பாண்டியன் வீட்டிலுமே வரட்டும். அன்னதானம் போடட்டும். எந்த பிரச்சனையும் செய்ய வேண்டாம். இது நம் அம்மாவினுடைய ஆசை. அது நிறைவேறட்டும் என்று சொல்கிறார். சக்திவேல் கோபப்பட்டு வீட்டில் உள்ள எல்லோரிடமும் சண்டை வாங்கி இருந்தார். முத்துவேல், அம்மாவின் பிறந்த நாளில் எந்த பிரச்சினையும் நடக்கக்கூடாது. அமைதியாக இரு என்று சொல்வதால் அங்கிருந்து சக்திவேல் கிளம்பி விட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் அப்பத்தாவின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுப்பதற்காக கதிர், தாத்தாவின் புகைப்படத்தை வரைய வைக்கிறார். ராஜியும் அதற்காக உதவி செய்கிறார். இன்னொரு பக்கம் அப்பத்தாவின் பிறந்தநாளுக்கு எல்லோரும் வாழ்த்துக்கள் சொல்கிறார்கள். சக்திவேல் மட்டும் கோபமாக இருக்கிறார். அப்பத்தா, பாண்டியன் குடும்பம் கோயிலுக்கு வந்தால் பிரச்சனை எல்லாம் செய்ய வேண்டாம் என்று கெஞ்சி கேட்கிறார். அதற்குப்பின் பாண்டியன் வீட்டில் ஒவ்வொரு ஜோடிகளும் தயாராகி வருகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
கோமதி, தன் அம்மாவின் பிறந்தநாளுக்கு பரிசு கொடுக்க புடவை, வளையல் என்று வாங்கி வைத்து இருக்கிறார். அதற்கு பின் வீட்டில் எல்லோருமே தயாராகி இருக்கிறார்கள். கோமதி, கோவிலில் பிறந்த நாளில் எந்த பிரச்சினையும் வரக்கூடாது என்று பயந்து கொண்டிருக்கிறார். பாண்டியன், கோயிலுக்கு சென்று பிறந்தநாள் வாழ்த்து சொல்லிவிட்டு எந்த ஒரு பிரச்சனையும் இல்லாமல் வந்துவிடலாம் என்று சொல்கிறார். அதனால் வீட்டில் உள்ள எல்லோருமே சரி என்கிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது.






