விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் மீனாவின் அப்பா, நாம் ஒரு இடத்திற்கு போக வேண்டும். கிளம்புங்கள் என்று சொன்னார். மீனா, கண்டிப்பாக வேலை கிடைத்துவிடும் தானே? பணம் ஏமாத்திட மாட்டார்களே? என்று பயப்பட்டார். அதற்கு அவருடைய அப்பாவும் ஆறுதல் சொல்லி அவர்களை அழைத்து வந்தார்.
இன்னொரு பக்கம் பாண்டியன், செந்திலுக்கு போன் மேல் போன் செய்து கொண்டிருந்தார். ஆனால், செந்தில் போன் எடுக்கவே இல்லை. பின் மீனாவிற்கு ஃபோன் செய்ய, அவருமே போன் எடுக்கவில்லை. இதனால் பாண்டியன் கோபப்பட்டார்.

அதற்குப்பின் அலுவலகத்திற்கு சென்ற செந்தில், மீனா, மீனாவின் அப்பா மூவருமே ஒரு அதிகாரியை சந்தித்து பேசி இருந்தார்கள். அப்போது அவர், செந்தில் வேலைக்கான ஆர்டரை கையில் கொடுத்தார். அதை பார்த்தவுடன் செந்திலுக்கு என்ன சொல்வதென்றே புரியவில்லை ஷாக்கில் உறைந்து போய் இருந்தார். அதை நம்புவதா? நம்ப வேண்டாமா? என்று கூட புரியாத அளவிற்கு செந்தில் இருந்தார். அப்போது மீனாவின் அப்பா, இது உங்களுடைய வேலை சீக்கிரத்திலேயே உங்களுக்கு பெர்மனென்ட் ஆகிவிடும் தைரியமாக இருங்கள் என்று சொன்னார். உடனே செந்தில் தன்னுடைய மாமனாருக்கும் மீனாவிற்கும் எமோஷனலாக நன்றி சொல்லி சொன்னார். சந்தோஷத்தில் தலைகால் புரியாமல் செந்தில் குதித்துக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் செந்தில், சரவணன்- கதிர்-பழனியை வீட்டிற்கு வர வைத்திருந்தார். கோமதி எதற்காக வந்தீர்கள்? எதற்காக செந்தில் வரச்சொன்னார்? என்று கேட்டார். அவர்கள் எங்களுக்கு ஒன்றுமே புரியவில்லை என்றார்கள். அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்து பாண்டியன், எல்லோரும் வீட்டில் இருப்பதை பார்த்து ஏன்? என்ன ப்ரச்சனை என்று கேட்டார். அந்த சமயம் பார்த்து ஸ்வீட்டோடு மீனா-செந்தில் இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். தனக்கு கிடைத்த ஆர்டரை பாண்டியனிடம் கொடுத்தார். அவர் சரவணனிடம் படிக்க சொன்னார். சரவணன், அதை பார்த்து ரொம்ப சந்தோஷப்பட்டார்.

நேற்று எபிசோட்:
பின் செந்திலுக்கு கவர்மெண்டில் வேலை கிடைத்திருக்கிறது என்று தெரிந்தவுடன் மொத்த விடுமே சந்தோஷப்படுகிறது. ஸ்வீட் எடுத்து கொண்டாடி இருந்தார்கள். அப்போது செந்தில், இதற்கெல்லாம் காரணம் மீனாவும் அவருடைய அப்பாவும் தான் காரணம் என்று சொன்னார். பின் செந்தில் மளிகை கடை வேலைக்கு போவதில்லை. அப்போது பாண்டியன், என்ன செய்வது என்று புரியாமல் குழம்பி இருந்தார். அங்கு வந்த சரவணன், இனி நான் கடைக்கு வருகிறேன். நான் செய்யும் வேலையை விட்டு விடுகிறேன் என்றார். அதற்குப்பின் செந்தில்- கதிர்- ராஜி- மீனா பேசிக்கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், டிராவல்ஸ் ஏஜென்சி ஆரம்பிக்க போகிறேன். அதற்கான ஏற்பாடுகள் தான் செய்து கொண்டிருக்கிறேன் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசொட்டில் தங்கமயில் தன்னுடைய அம்மாவிற்கு ஃபோன் செய்து பேசிக்கொண்டிருக்கிறார். அப்போது தங்க மயிலின் அம்மா, நீ எப்படியாவது மாப்பிளையை உன் கைக்குள் கொண்டு வா. மற்றபடி எல்லாம் தானாக நடக்கும் என்று சொல்லிக் கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சரவணன் வந்துவிடுகிறார். சரவணன் இடம் ரொம்ப பாசமாக தங்கமயில் பேசுகிறார். ஆனால், அவர் அதை பெரிதாக எடுத்து கொள்ளவில்லை. அதற்குப்பின் பாண்டியன் வீட்டிற்கு மீனாவின் அப்பா, அம்மா இருவருமே வருகிறார்கள். அப்போது மீனாவின் அப்பா, நானே மாப்பிள்ளைக்கு பணத்தை கொடுத்து வேலை வாங்கித் தரணும் என்று நினைத்தேன்.

சீரியல் ட்ராக்:
நீங்கள் உங்கள் மகனுக்காக 10 லட்சம் ரூபாய் கொடுத்து வேலை வாங்கித் தந்தது பெரிய விஷயம் என்று சொல்கிறார். இதைக் கேட்டவுடன் பாண்டியனுக்கு ஷாக் ஆகிறது. பின் மீனாவின் அப்பா சென்ற பிறகு பாண்டியன், பணம் கொடுத்து தான் இந்த வேலையை வாங்கினாயா? யாரிடம் பணம் வாங்கினாய்? என்று கேட்கிறார். செந்திலால் எதுவுமே பேச முடியவில்லை. ஒரு கட்டத்தில் கோபப்பட்ட பாண்டியன், செந்திலை அடிக்க போகிறார். உடனே மீனா, நான்தான் லோன் போட்டு பணம் வாங்கித் தந்தேன் என்று சொல்கிறார். பாண்டியன், அந்த அளவிற்கு நீங்கள் பெரிய மனுஷர்களாகி விட்டீர்களா? என்னிடம் ஒரு வார்த்தை கூட சொல்ல தோணவில்லையா? என்கிறார். அதற்கு மீனா, அரசி பிரச்சனையால் தான் சொல்ல முடியவில்லை என்கிறார். இருந்தாலுமே பாண்டியன் அவர்கள் சொல்லும் காரணத்தை ஏற்றுக் கொள்ளாமல் இருவரையும் திட்டி விட்டு செல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






