விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் ராஜி, கதிர் எனக்காகவும் குடும்பத்திற்காகவும் தான் என்னை கல்யாணம் செய்து கொண்டார். என்னை நன்றாக தான் பார்த்துக் கொள்கிறார்கள். தயவுசெய்து என்னை பழிவாங்கும் எண்ணத்தை விடுங்கள் என்று ரொம்ப எமோஷனலாக பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்டு ராஜியின் அப்பா எதுவும் பேசாமல் இருந்தார். ஆனால், ராஜி பேசுவதை பார்த்த சக்திவேல் பயங்கரமாக கோபப்பட்டார். இன்னொரு பக்கம் செந்தில் வேலைக்கு கிளம்புவதற்காக அலப்பறை செய்து கொண்டிருந்தார். பின் வீட்டில் எல்லோருமே உட்கார்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், லோன் விஷயமாக பேசி இருந்தார்.

அப்போது கதிர், நான் எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்கிறேன் என்றார். இன்னொரு பக்கம் முத்துவேல், தன்னுடைய அம்மாவிடம் பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த சக்திவேல், ராஜி உடன் பேசியதைப் பற்றி வீட்டில் சொன்னார். ஆனால், முத்துவேல் எதுவுமே பேசவில்லை. பின் சக்திவேல், உங்கள் மருமகனையும் மகளையும் வரவைத்து தலவாழை இலை போட்டு சாப்பாடு போட்டு பரிமாறுங்கள். ஆனால், என் மகன் மற்றும் ஜெயிலில் கஷ்டப்பட்டு இருக்கட்டும் என்று கத்தி இருந்தார். அதற்கு முத்துவேல் திட்டிவிட்டு சென்றார். பின் குமார் அம்மா, சக்திவேலுக்கு சப்போர்ட் செய்து வடிவையும் அப்பத்தாவையும் திட்டி விட்டு சென்றார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் அரசி சோகமாகவே வீட்டில் இருப்பதால் கோமதி அவரை அழைத்துக் கொண்டு வெளியே போனார். வெளியே போகும்போது எல்லோருமே அரசியின் திருமணத்தைப் பற்றியும், அவள் வீட்டை விட்டு ஓடிப் போனதை பற்றியும் மாற்றி மாற்றி கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார்கள். இதனால் அரசி ரொம்பவே மனமடைந்து விட்டார். பின் கோபத்தில் கோமதி, அரசியை அழைத்துக் கொண்டு வீட்டிற்க்கே வந்து விட்டார். பின் வீட்டில் வெளியில் நடந்ததை சொல்லி, சுகன்யாவிடம் உன்னால் தான் எல்லா பிரச்சினையும் என்று சொன்னார் கோமதி.

நேற்று எபிசோட்:
அதற்குப்பின் சுகன்யா வெளியில் சோகமாக இருந்தார். அப்போது சுகன்யா, தன்னுடைய வாழ்க்கையில் நடந்த கஷ்டங்களை எல்லாம் தங்கமயிலிடம் சொல்லி புலம்பி கொண்டிருந்தார். பின் வீட்டிற்கு வந்த
பாண்டியன் இடம் கோமதி நடந்ததை எல்லாம் சொல்லி வருத்தப்பட்டார். உடனே பாண்டியன், இதற்கு நான் ஒரு முடிவு கட்டுகிறேன் என்று சொன்னார். பின் சிறிது நேரம் கழித்து பாண்டியன், அரசியை அழைத்துக் கொண்டு வெளியே வந்தார். அப்போது வெளியே மைக் செட் பொருத்தப்பட்ட ஆட்டோ இருக்கிறது. அதை பார்த்து கோமதிக்கு ஒன்றுமே புரியவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் பாண்டியன் மைக்கை பிடித்து, ஊர் உலகத்தில் நடக்காத விஷயம் நடக்கவில்லை. ஊரில் உங்களுக்கு வேலை இல்லை என்றால் என் மகளைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தான் பேசுவீர்களா? இதனால் என் மகள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடக்கிறார். உங்களால் தான் என் மகள் அவமானப்படுகிறார். என் மகளின் வாழ்க்கையை பற்றி யாரும் பேச தேவையில்லை. உங்களுடைய வேலையை பாருங்கள் என்று ஆவேசமாக பேசுகிறார். இது எல்லாம் கேட்டு பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோருமே சாக் ஆகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பின் ஊர் முழுக்க அரசிக்காக பாண்டியன் பேசுகிறார். இதை டிவியிலும் டிவியிலும் ஒளிபரப்புகிறார்கள். இதையெல்லாம் பார்த்து அரசிக்கு ரொம்ப சந்தோஷமாக இருக்கிறது. ஆனால், கோமதி தான் டென்ஷன் ஆகிறார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நான் தவறு செய்து விட்டேனா என்று கேட்கிறார். கோமதி, பாண்டியனை திட்டுகிறார். உடனே அரசி, என் அப்பா எனக்காக தான் செய்தார். எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்கிறார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் செய்த செயலை பாராட்டி புகழ்ந்து பேசுகிறார்கள். இத்துடன் சீரியல் முடிகிறது






