விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் பாக்கியா, பாண்டியன் உங்கள் குடும்பத்திற்கு எவ்வளவு கெடுதல் செய்திருப்பார். நீங்கள் எனக்கு சாதகமாக கோர்ட்டில் பேச வேண்டும் என்றெல்லாம் ஒன்னுக்கு ரெண்டாக ஏற்றி விட்டார். இதைக் கேட்ட சக்திவேல் சரி என்றார். பின் கோர்ட்டில் வாதம் நடக்கிறது. தங்கமயில், பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே வரதட்சனை கேட்டு அடித்து கொடுமைப்படுத்தியதாக கொடுத்த புகார் எல்லாம் உண்மை என்று சொல்லி விட்டார். இதைக் கேட்டு பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோரும் சாக் ஆனார்கள்.

கோர்ட்டில் பாக்கியா, பாண்டியன் குடும்பத்தை பற்றி ரொம்ப மோசமாக புகார் சொன்னார். அதற்குப்பின் பாண்டியன் குடும்பத்து வழக்கறிஞர், அவர்கள் தரப்பு நியாயத்தை எடுத்துச் சொல்லி புரிய வைத்தார். பின் விசாரணைக்கு வந்த பாண்டியன், நாங்கள் எந்த தவறும் செய்யவில்லை. என் மகளாகத்தான் பார்த்தேன். அவர்கள் சொல்வதெல்லாம் பொய் என்றார். அதற்கு பின் விசாரணைக்கு வந்த சரவணன், ஆரம்பத்திலிருந்து இப்போது வரை அவர்கள் சொல்வது எல்லாமே பொய். அந்த பொய்யினால் தான் இப்ப பிரச்சனையில் வந்து நிற்கிறது. எனக்கு அவளுடன் சேர்ந்து வாழ விருப்பமே இல்லை என்று நடந்ததை எல்லாம் சொன்னார். இதைக்கேட்டு தங்கமயில் எமோஷனலாக கத்தி அழுதார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் முத்துவேல்- சக்திவேல் இருவரையும் பொய் சாட்சி சொல்ல சொன்னார் பாக்கியா. ஆனால், கோர்ட்டில் முத்துவேல்- சக்திவேல் இருவரும் பாண்டியன் குடும்பத்திற்கு ஆதரவாக தான் பேசி இருந்தார்கள். இதனால் பாண்டியன் குடும்பத்திற்கு ஜாமீன் கிடைத்து விட்டது. ராஜி, அரசி, மீனா மூவருமே தங்கமயில் குடும்பம் நடந்து கொண்டதை நினைத்து கோபப்பட்டார்கள். அதற்குப்பின் போலீஸ் ஸ்டேஷனில் கோமதி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே கையெழுத்து போட்டு வெளியே வந்தார்கள். அப்போது கோமதி எமோஷனலாக தன் அண்ணனை பார்த்து அழுதார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் பாண்டியன், முத்துவேல் கையை பிடித்து எமோஷனலாக அழுது நன்றி சொல்கிறார். பின் கோமதியும் தன் அண்ணன் தோளில் சாய்ந்து கதறி அழுது நன்றி சொல்கிறார். முத்துவேல், எனக்கு பிடிக்கவில்லை என்றாலும் உங்களுக்கு என்று ஒரு பிரச்சனை என்றால் நான் வந்து நிற்பேன். நீ என்னுடைய ரத்தம் என்று சொல்லிவிட்டு அங்கிருந்து கிளம்புகிறார். எல்லோருமே வீட்டிற்கு வருகிறார்கள்.
காந்திமதி, தன் மகளை பார்த்து ரொம்பவே கதறி அழுகிறார். பின் பாண்டியன் குடும்பத்திற்கு ஆர்த்தி எடுத்து அவர்களை உள்ளே போக சொல்கிறார்கள். பாண்டியன்- கோமதி இருவருமே முத்துவேல், சக்திவேல் குடும்பத்தை பார்த்து கையெடுத்து கும்பிட்டு விட்டு உள்ளே செல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
கோமதி நடந்ததை நினைத்து அழுது கொண்டிருக்கிறார். பாண்டியன், கோமதிக்கு சாப்பாடு ஊட்டி விட்டு சமாதனம் செய்கிறார். பின் சரவணன், நான் விவாகரத்து முடிவில் இப்போது ரொம்ப உறுதியாக இருக்கிறேன். என்னால் அவனுடன் சேர்ந்து வாழ முடியாது என்கிறார். கோமதி, நீ இனிமேல் அவளுடன் வாழ தேவையில்லை. நானே உனக்கு துணையாக நிற்கிறேன் என்கிறார். பாண்டியன், இதையெல்லாம் நான் பார்த்துக்கொள்கிறேன். எல்லோரும் அவர்கள் வேலையை பாருங்கள் என்று அறிவுரை சொல்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






