விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் அப்பத்தா, குமாரை திட்டி அறிவுரை சொன்னார். அதற்குப்பின் மீனாவிற்கு போன் செய்து கோமதி விசாரித்தார். அதற்குப்பின் கோமதி, அரசி இருவரும் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாக வந்த பழனி, கோமதி இடம் பேசப்போனார். கோபத்தில் கோமதி, பழனியை மோசமாக திட்டினார். இருந்தாலுமே பழனி, தன் தரப்பு நியாயத்தை சொல்லி புரிய வைக்க பார்த்தார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

கதிர்-ராஜி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், போலீஸ் எக்ஸாம் உடைய தேர்வு தேதியை சொல்லி நன்றாக படிக்க சொன்னார். ராஜி, நன்றாக படித்து போலீசாகுவேன் என்று கதிருக்கு வாக்குறுதி எல்லாம் கொடுத்தார். இன்னொரு பக்கம் கடையில் தங்கமயிலிடம் கடுகடு என்று பொரிந்து கொண்டே சரவணன் இருந்தார். இதையெல்லாம் பாண்டியன் பார்த்துக் கொண்டிருந்தார். பாண்டியன் வெளியே போன நேரம் பார்த்து மாணிக்கம் கடைக்கு வந்தார். அப்போது வந்த சரவணன், தங்கமயில் அப்பாவை மரியாதை இல்லாமல் பேசி கடையை விட்டு வெளியே போக சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தங்கமயிலும் பயத்தில் தன்னுடைய அப்பாவை அனுப்பி வைத்தார். அதற்கு பின் தங்கமயில், சரவணன் இடையே சண்டை வந்தது. ஒரு கட்டத்தில் சரவணன், தங்கமயிலை அவருடைய அம்மா வீட்டிற்கு போக சொன்னார். அப்போது வந்த பாண்டியன், என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது? என்று விசாரித்தார். சரவணன் உண்மையை சொல்ல வந்தார். உடனே தங்கமயில், என்னுடைய அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி பிரச்சினையை மாற்றி விட்டார். இதனால் கோபத்தில் பாண்டியன், சரவணனை திட்டினார்.

இன்றைய எபிசோட்:
இன்றைய எபிசோட்டில் சுகன்யா, பாண்டியன் கடைக்கு பொருட்களை வாங்க போகும் நபர்களையெல்லாம் அழைத்து குறைந்த விலையில் பொருட்கள் தருவதாக சொல்லி தன் கடையில் வியாபாரம் செய்கிறார். இதையெல்லாம் பார்த்து பழனிக்கு கோபம் வருகிறது. பின் சுகன்யா, குமார் இருவரையும் திட்டுகிறார். இருந்தாலுமே அவர்கள் கேட்கவில்லை. பாண்டியன் வியாபாரத்தை கெடுக்கவே தேவையில்லாத சதி வேலைகளை செய்கிறார்கள். இன்னொரு பக்கம் சரவணன் தன் அப்பாவை எதிர்த்து பேசியதால் மன்னிப்பு கேட்கிறார். பாண்டியன், உன் விருப்பப்படி நடந்து கொள். என்னிடம் கேட்காதே என்று கோபப்பட்டு அங்கிருந்து செல்கிறார்.

சீரியல் ட்ராக்:
பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், வீட்டில் நடந்த சண்டை பத்தவில்லை என்று தெருமுனையில் நின்று இருவரும் சண்டை போட்டுக் கொள்கிறார்கள். என்னதான் நடக்கிறது என்று புரியவில்லை என்று சொல்கிறார் உடனே கோமதி, என்ன தான் உங்களுக்குள் பிரச்சனை? எதற்காக தங்கமயிலை திட்டி கஷ்டப்படுத்துகிறாய் என்றெல்லாம் கேட்கிறார். அதற்கு சரவணன், நான் பார்த்துக்கொள்கிறேன் என்று வழக்கம்போல் தன் அம்மாவை சமாதானம் செய்கிறார். பின் தங்கமயிலை சாப்பிட கோமதி அழைத்து வருகிறார். சரவணன் கோபத்தில் முறைத்துக் கொண்டிருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






