விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், எனக்கு தங்கமயில் உடன் சேர்ந்து வாழ விருப்பமில்லை. விவாகரத்து கொடுத்து விடுங்கள் என்றார். பின் தங்கமயில் இடம் நீதிபதி விசாரித்தார். அப்போது தங்கமயில், தன் வீட்டார் செய்த எல்லா தவறுகளையும் சொல்லி வருத்தப்பட்டு மன்னிப்பு கேட்டு எனக்கும் விவாகரத்து கொடுத்து விடுங்கள். இனி நாங்கள் சேர்ந்து வாழ்வதில் விருப்பமில்லை என்றார். இதைக் கேட்டு பாக்கியம் கோர்ட்டிலேயே கத்துகிறார். கோமதிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. அதற்குப்பின் நீதிபதியும் வேறொரு தேதிக்கு இந்த வழக்கை ஒத்தி வைத்து விட்டார். பின் வீட்டிற்கு வந்த சரவணன், கோர்ட்டில் நடந்ததை சொல்லி தங்கமயிலை குறை சொல்லிக் கொண்டிருந்தார்.

கோர்ட்டில் தங்கமயில் பேசிய விஷயத்தை வீட்டில் தன் கணவரிடம் சொல்லி பாக்யம் ருத்ர தாண்டவம் ஆடிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் தங்கமயில், என்னையும் என் குழந்தையும் பார்த்துக் கொள்ள தெரியும். உங்களையும் நான் கைவிட மாட்டேன். நாங்கள் சேர்ந்து வாழ்வதில் எனக்கு விருப்பமில்லை என்று சொன்னார். பாக்கியத்திற்கு ஒன்றுமே புரியவில்லை. இன்னொரு பக்கம் மீனா, வேலை காரணமாக சென்னைக்கு ட்ரெய்னிங் போவதாக செந்திலிடம் சொல்லி ரொம்பவே சந்தோஷப்பட்டார். மீனா கிளம்புவதால் செந்தில் கொஞ்சம் வருத்தப்பட்டாலும் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இன்னொரு பக்கம் ராஜி, தேர்வு சென்னையில் நடைபெற இருப்பதால் கதிரை அழைத்தார். கதிர் எனும் முக்கியமான வாடகை இருக்கிறது. என்னால் வர முடியாது. நீயே போயிட்டு வா என்றார். இருவருக்கும் இடையே வாக்குவாதம் வருகிறது. ஒரு கட்டத்தில் ராஜி, என்னை நான் பார்த்துக்கொள்கிறேன் என்றார். பின் வீட்டில் இதைப் பற்றி ராஜி சொன்னார். கோமதி, கதிரை திட்டிக் கொண்டிருந்தார். அதற்குப்பின் மீனா சென்னை கிளம்பும் விஷயத்தை அறிந்த கோமதி சொன்னார். ராஜி ரொம்பவே சந்தோஷப்பட்டார். அதற்கு பின் தான் தேர்வெழுத செல்வதால் ராஜி தன்னுடைய அப்பா அம்மா இருவரிடம் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, ராஜி இருவரும் சென்னைக்கு செல்வதை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கோமதியுமே தனக்கு இருக்கும் ஆசையை பற்றி சொல்லிக் கொண்டிருக்கிறார். உடனே மீனா, நீங்களும் சென்னைக்கு வாருங்கள் என்று கூப்பிடுகிறார். கோமதி, முடியாது என்று மறுக்கிறார். ஒரு வழியாக ராஜி- மீனா இருவரும் சேர்ந்து கோமதியையும் சென்னைக்கு அழைத்து செல்ல ஒத்து வைக்கிறார்கள். பின் இதைப் பற்றி கோமதி, பாண்டியன் இடம் சொல்கிறார். அதற்குப்பின் மீனாவின் அம்மா போன் செய்து சென்னைக்கு போகும் விஷயத்தை பற்றி விசாரிக்கிறார்.

சீரியல் ட்ராக்:
மீனா, நான் ராஜி என் மாமியார் மூவருமே செல்கிறோம் என்கிறார். எதற்காக அவர்களெல்லாம் உன்னுடன் அழைத்து செல்கிறாய் என்று மீனாவின் அம்மா கேட்கிறார். ராஜியின் தேர்வுக்காக என் மாமியாரும் உடன் வருகிறார் என்று சொல்கிறார். மீனாவின் அம்மா சொந்தக்காரர் வீட்டில் தங்கிக் கொள். அவர்கள் பார்த்துக் கொள்வார்கள் என்றெல்லாம் சொல்வதால் மீனாவும் வேறு வழியில்லாமல் ஒத்துக் கொள்கிறார். அதற்குப்பின் கதிர், ராஜிக்கு வாழ்த்துக்கள் சொல்லி அறிவுரை எல்லாம் செய்கிறார். அதற்குப்பின் ராஜி, தன் அம்மா அப்பாவை பார்த்து தேர்வு விஷயத்தை சொல்லி ஆசீர்வாதம் வாங்கினார். முத்துவேல்- வடிவு இருவரும் சந்தோஷமாக தன் மகளை ஆசீர்வாதம் செய்கிறார்கள். இதை பார்த்து சக்திவேலுக்கு கடுப்பாகிறது.






