விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சக்திவேல், கதிருடன் உங்களுக்கு என்ன பழக்கம்? என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டார். யாருக்குமே ஒன்றும் புரியவில்லை. முத்துவேல், உண்மையை சொல்ல முடியாமல் நான் யாருக்கும் துரோகம் செய்யவில்லை. நான் வந்து எல்லா பற்றியும் பேசுகிறேன் என்றார். இருந்தாலும் சக்திவேல் தன் அண்ணன் மீது அதிகமாக கோபப்பட்டார். முத்துவேல் கிளம்பி கதிர் சொன்ன இடத்திற்கு சென்று விட்டார். கதிர், முத்துவேல் இருவரும் காரில் ஏறி சென்றார்கள். இதை சக்திவேல் குமார் ஒளிந்து நின்று பார்த்தார்கள். இவர்கள் பார்த்ததை கதிர் பார்த்து விட்டார்.

மலரின் மாமியார், மாமனார் இருவருமே வெளியே செல்வதற்கு வரமாட்டேன் என்றார்கள். ஒரு வழியாக கோமதி, மீனா எல்லோருமே பேசி அவர்களை வெளியே செல்ல ஒத்துக் கொள்ள வைத்தார்கள். அதற்குப்பின் மீனா, மதி,மலர், ராஜி ஆகிய நான்கு பேரும் ஜாலியாக தங்களுடைய காதல் கதைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது வந்த சுரேஷ், சாப்பாடு சாப்பாடு செய்து தரச் சொல்லி மலரிடம் கேட்டார். உடனே மீனா, மதியை சமைத்து தர சொன்னார். மதி எதுவும் பேசாமல் உள்ளே சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் சுரேஷுக்காக மதி சமைத்துக் கொடுத்தார். சுரேஷும் ஆச்சரியத்துடனே சாப்பிட்டுக் கொண்டிருந்தார். அப்போது வந்த மலரின் மாமியார், மதி வேலை செய்வதை வியந்து போய் பாராட்டினார். இருந்தாலும் மதி அதை கண்டுகொள்ளாமல் அங்கிருந்து சென்று விட்டார். இன்னொரு பக்கம் ஆபரேஷன் நினைத்து முத்துவேல் ரொம்பவே பயந்து கொண்டிருந்தார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லி சமாதானம் செய்தார். அதற்குப்பின் இருவரும் ஹோட்டலில் சாப்பிட்டு விட்டு ஹாஸ்பிடலுக்கு கிளம்பினார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ரேவதி, தங்கராஜ் இடம் அவுட்டிங் செல்வதை பற்றி கேட்கிறார். தங்கராஜ் எனக்கு அதில் விருப்பமில்லை என்று சொல்கிறார். ரேவதி, குழந்தைகளுக்காக போகலாம். நாங்கள் மட்டும் போகிறோம் என்றெல்லாம் சொல்கிறார். இதை கேட்டு தங்கராஜ் கோபப்படுகிறார். இன்னொரு பக்கம் வீட்டில் மலர் பம்பரமாக வேலை செய்து கொண்டிருக்கிறார். எல்லோருமே அவுட்டிங் செல்வதற்காக ரெடியாகிறார்கள். ஆனால், மலர் மட்டும்தான் எல்லா வேலைகளையும் செய்து கொண்டிருக்கிறார். அப்போது மலரின் மாமியார், இன்னும் ரெடியாகவில்லையா? என்று திட்டுகிறார். உடனே மலர் சீக்கிரமாக ரெடியாகி வந்து விடுகிறார். பின் எல்லோருமே கிளம்பி போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
பஸ் ஒரு இடத்தில் நின்று கொண்டிருக்கும் போது அங்கு கதிர் இளநீர் குடித்து கொண்டு இருக்கிறார். அதை ராஜி பார்த்து விடுகிறார். கதிரை பார்த்தவுடன் ராஜி, மீனாவிடம் சொல்கிறார். ஆனால், மீனா நம்பவில்லை. அதோடு கதிர், ராஜியை பார்க்கவில்லை. உடனே பஸ் எடுத்து விடுகிறார்கள். ராஜி, கதிரை பற்றி யோசித்துக் கொண்டிருக்கிறார். இன்னொரு பக்கம் முத்துவேல் ஆபரேஷன் நினைத்து ரொம்பவே பயந்து கொண்டிருக்கிறார். கதிர் அவருக்கு ஆறுதல் சொல்லுகிறார்.






