விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மலர், எல்லா வேலைகளையும் ஒடி ஒடி செய்து கொண்டிருந்தார். அதை பார்த்து கோமதிக்கு கஷ்டமாக இருக்கிறது. மாமனார், மாமியார் இருவருமே சேர்ந்து மாற்றி மாற்றி மலருக்கு வேலை வைத்தார்கள். கோமதி, ஒருவரே எப்படி இவ்வளவு வேலை செய்ய முடியும். அவளும் பாவம் தானே என்று மலருக்கு துணையாக பேசி இருந்தார். இதை எல்லாம் பார்த்து மாமியாருக்கு கோபம் தான் வருகிறது. இருந்தாலும் அமைதியாகிக் கொண்டார். அதற்கு பின் கோமதி, மீனா, ராஜி எல்லோருமே மலருக்காக கிச்சனில் உதவி செய்தார்கள்.

கோமதி, வீட்டில் உள்ள எல்லா மருமகளுடன் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்த மலரின் மாமியாருக்கு கோபம் வருகிறது. இப்படி எல்லாமா சிரித்து பேசி இருப்பது என்று கேட்டார். கோமதி அதற்கு நக்கலாக பதில் சொன்னார். அதற்குப்பின் மலரின் மாமனார், தங்கராஜை பற்றி ரொம்ப பெருமையாகவும் பயமுறுத்துவது போலவே பேசி இருந்தார். கோமதியும், தங்கராஜ் ஒரு வில்லன் என்று நினைத்துக் கொண்டார். வீட்டில் உள்ள எல்லோரிடமும் கோமதி, தங்கராஜ் பற்றி விசாரித்தார். எல்லோருமே தங்கராஜ் பற்றி ரொம்பவே டெரராக சொன்னார்கள். அந்த சமயம் பார்த்து தங்கராஜ் வீட்டிற்கு வந்தார். அவரை பார்த்துடன் கோமதி சிரித்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் கோமதி, நான் உங்களை நினைத்து பயந்தேன். ஆனால், நீங்கள் அப்படி இல்லை என்று வெகுளித்தனமாக பேசி விட்டார். அதற்குப்பின் கோமதி, ரேவதியிடம் தங்கராஜ் குடும்பத்தை பற்றி எல்லாம் விசாரித்துக் கொண்டிருந்தார். அப்போது மதி- சுரேஷ் இருவரும் சரியாக பேசிக் கொள்ளாததை கோமதி கவனித்தார். மலரின் மாமியார், சுரேஷ் மதியின் திருமணத்தை பற்றி எல்லாம் சொன்னார். பின் கோமதி, மதி- சுரேஷ் இருவருக்கும் அறிவுரை சொன்னார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனுக்கு வீடியோ கால் செய்து வீட்டில் உள்ள எல்லோரையுமே அறிமுகம் செய்து வைத்தார். வெகுளித்தனமாக கோமதி நடந்து கொள்வது பார்த்து மலரின் மாமனார் மாமியாருக்கு பிடிக்கவில்லை.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் ராஜி தேர்வு எழுத செல்வதால் எல்லோரிடமும் ஆசிர்வாதம் வாங்கிவிட்டு செல்கிறார். பின் சுரேஷ் தான் ராஜியை அழைத்துக்கொண்டு செல்கிறார். போகும் வழியில் கதிர் போன் செய்ததால் ராஜி டென்ஷனாக இருக்கிறார். ராஜிக்கு போன் செய்த கதிர் வாழ்த்துக்கள் சொல்லி வைத்து போனை வைத்து விடுகிறார். ராஜிக்கு இன்னும் கோபம் வருகிறது. சுரேஷ், ராஜியை சமாதானம் செய்து தேர்வு எழுத அனுப்பி வைக்கிறார். இன்னொரு பக்கம் மீனா, மதி இருவருமே ஜாலியாக தங்களுடைய வாழ்க்கையில் நடந்த விஷயங்களை எல்லாம் பகிர்ந்து கொண்டு செல்கிறார்கள்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் முத்துவேல் அக்கவுண்டில் இருந்து கதிரின் அக்கவுண்டுக்கு 10 லட்சம் ரூபாய் பணம்
சென்றிருப்பதை அறிந்த சக்திவேல் கோபப்பட்டு குமாரிடம் புலம்பி கொண்டிருக்கிறார். குமார், பாண்டியன் பணத்தை திருப்பி கொடுக்க வேண்டும் என்று சொன்னதால் பெரியப்பா இந்த பணத்தை போட்டு இருக்கலாம் என்று சொல்கிறார். சக்திவேல், எதுவாக இருந்தாலும் அண்ணன் வரட்டும், கவனித்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். அதற்குப்பின் மலரின் வீட்டில் பாக்கியராஜ் வெளியே போகலாம் என்று சொல்கிறார். மலரின் மாமியார், மாமனார் வேண்டாம் என்று மறுக்கிறார்கள். கோமதி கேட்டுக் கொண்டதால் வெளியில் செல்ல ஒத்துக்கொள்கிறார்கள்.






