விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி- கதிர் இருவரும் வெளியே சந்தோஷமாக ஊர் சுற்றிவிட்டு ஹோட்டலுக்கு சென்றார்கள். இருவரும் தங்களுடைய அன்பை பகிர்ந்து கொண்டார்கள். ஒரு கட்டத்தில் இருவரும் ஒன்றாக விட்டார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டிற்கு வந்த செந்தில், மீனா பற்றி குறை சொல்லிக் கொண்டிருந்தார். அப்போது கோமதி, மீனா ரொம்ப பாவம். அவளுக்கும் இந்த விஷயத்திற்கும் சம்பந்தமில்லை. அவளை புரிந்து கொள் என்றெல்லாம் அறிவுரை சொன்னார்.

இதையெல்லாம் கேட்ட செந்திலும் மனம் மாறுகிறது. பின் வீட்டிற்கு சென்ற செந்தில், கோமதி சொன்ன விஷயத்தை பற்றி பேசி இருந்தார். மீனா, காதலித்து கல்யாணம் செய்து தன் தந்தையை ஏமாற்றியதைப் பற்றி சொல்ல, செந்தில் வருத்தப்பட்டு பேசி இருந்தார். உடனே மீனா, நம்முடைய கல்யாண விஷயத்தில் என் அப்பா வருத்தப்பட்டு இருக்க மாட்டாரா? நீங்கள் இன்னும் புரிந்து கொள்ளவில்லை என்று சொன்னவுடன் செந்திலால் எதுவும் பேச முடியவில்லை, அமைதியாகி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
கோமதி, பாண்டியனை பேச வைப்பதற்காக மூச்சு விட முடியாதது போல நடித்தார். அரசி- சரவணன் எல்லோருமே பதறினார்கள். ஆனால், இது டிராமா என்று தெரிந்து கொண்டு பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார். கோமதி ரொம்பவே ஓவர் ஆக்டிங் பண்ணுகிறார். இதனால் கோபத்தில் பாண்டியன் திட்டினார். பின் வீட்டில் உள்ள எல்லோருக்குமே கோமதி செய்தது டிராமா என்று புரிந்து விட்டது. இன்னொரு பக்கம் செந்தில், மீனா இருவரும் சண்டையை மறந்து பேசிக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது செந்தில், என்னிடம் ஆவது நீ உண்மையை சொல்லி இருக்கலாம் என்றார். மீனா, உங்களுக்கு உண்மை தெரிந்தது என்றால் மாமா உங்களை சும்மா விட்டிருக்க மாட்டார் என்று சொல்வதால் செந்தில் அமைதியாகி விட்டார். அதற்குப்பின் கோமதி, பாண்டியனுக்காக சமைத்து வைத்து சாப்பிட கூப்பிட்டார். ஆனால், கோபத்தில் பாண்டியன் சாப்பிடவில்லை. கோமதி, இனிமேல் நான் இவரிடம் போய் நிற்கப் போவதில்லை. இருந்தாலும் இவர் பேச வேண்டும் என்று பூஜை ஒன்று ஏற்பாடு செய்திருக்கிறேன். அது செய்யப்போகிறேன் என்று சரவணனிடம் புலம்பினார்.
https://www.youtube.com/watch?v=IGxzIfoIcgY
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகிருக்கும் ப்ரோமோவில் பாக்கியா, மூணு பேருக்கு சோறு போடுவது கஷ்டம். ஒழுங்கு மரியாதையாக உன் மாமனார் வீட்டுக்கு சென்று விடு என்னவெல்லாம் தங்கமயிலை அவமானப்படுத்துகிறார். இன்னொரு பக்கம் சரவணன், கோயிலில் தன்னுடைய காதலி அஞ்சலியை சந்திக்கிறார். பின் கோர்ட்டில் சரவணன், தங்கமயில் விவாகரத்து வழக்கு நடக்கிறது. சரவணன், தங்கமயில் செய்த பித்தலாட்ட வேலையை எல்லாம் கோர்ட்டில் சொல்கிறார். தங்கமயில், எனக்கு விவாகரத்து வேண்டாம். நான் மாமாவுடன் சேர்ந்து வாழணும் என்கிறார்.






