விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கதிர், எதுவாக இருந்தாலும் பார்த்துக்கொள்ளலாம். தைரியமாக இருங்கள் என்று தன்னுடைய மாமனார் முத்துவேலுக்கு ஆறுதல் சொல்லி அழைத்து வந்தார். இன்னொரு பக்கம் செந்தில், நீ அப்பாவாகிவிட்டாய். என்ன முடிவெடுக்க போகிறாய் என்றார். சரவணன், எனக்கு தெரியவில்லை என்றார். அதேபோல் பாண்டியன்- கோமதி எல்லோருமே தங்கமயிலை ஏற்றுக் கொள்வதா? இல்லையா? என்று தெரியாமல் தவித்துக் கொண்டிருந்தார்கள். கதிர்- முத்துவேல் இருவரும் ஒன்றாக செல்வதை பார்த்து சக்திவேல், கதிரிடம் கேட்டு சண்டை வாங்கினார்.

மீனா, சரவணன் மாமா வேறு ஒரு பெண்ணுடன் அடிக்கடி சுற்றிக் கொண்டிருந்தார். அதை நானே பார்த்து அவரிடம் விசாரித்தேன். ஆனால், அவர் எதுவுமே சொல்லவில்லை. என்றார். கோமதி, இன்னும் என்னென்ன மறைத்து வைத்திருக்கிறாய் என்று கேட்டார். மீனா, நான் சொல்ல வருவது யாருமே கேட்பதில்லை என்று சொன்னார். பின் செந்தில்- மீனா இருவரும் கிளம்பி வீட்டிற்கு போனார்கள். சக்திவேல் வீட்டில் உள்ள எல்லோரையும் அழைத்து முத்து வேலிடம் விசாரித்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சக்திவேல், துருவி துருவி கேள்வி கேட்டுக் கொண்டே இருந்தார். ஒரு கட்டத்தில் சக்திவேல், நான் நடந்து வந்து கொண்டிருக்கும்போது எனக்கு உடல்நிலை முடியாமல் போனது. கதிர் தான் என்னை அழைத்து வந்தால் அவ்வளவு தான் நடந்தது என்றார். வீட்டில் உள்ள எல்லாருமே பார்த்திருந்தார்கள். ஆனால், சக்திவேலுக்கு அதில் நம்பிக்கையே இல்லை. முத்துவேல் மீது இன்னும் சந்தேகப்பட்டார். பின் இதைப்பற்றி சுகன்யா, சக்திவேல் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். இன்னொரு பக்கம் செந்தில், சரவணன் இன்னொரு பெண்ணுடன் பேசுகிறாரா? என்றார். மீனா, உண்மை தான் என்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் கதிர், பழனி இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பழனி, முத்துவேல் விஷயத்தை பற்றி விசாரிக்கிறார். கதிரும் ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். பின் சரவணன் இடம் கோமதி, அஞ்சலி விஷயத்தைப் பற்றி விசாரிக்கிறார். சரவணன், அதெல்லாம் ஒன்றும் இல்லை. நட்பாக தான் பழகறோம் என்று சொல்லி சமாளிக்கிறார். இருந்தாலுமே கோமதி, பாண்டியன் இருவருமே சரவணனுக்கு திட்டி அறிவுரை சொல்கிறார்கள். அந்த சமயம் பார்த்து அஞ்சலி போன் செய்ததால் சரவணன் வெளியே வந்து விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
சரவணன், வீட்டில் நடந்த எல்லா விஷயத்தையும் சொல்கிறார். அஞ்சலிக்கு ஒன்றுமே புரியவில்லை.
சரவணன், என்ன நடந்தாலும் நான் உன்னை கைவிடமாட்டேன். நம்பிக்கையோடு இரு என்றெல்லாம் வாக்குறுதி கொடுத்துக் கொண்டிருக்கிறார். இதையெல்லாம் கவனித்த ராஜிக்கு அதிர்ச்சியாக இருக்கிறது. பின் இதைப்பற்றி ராஜி, கதிரிடம் சொல்கிறார். பின் கதிர், யாரிடம் பேசிக் கொண்டிருக்கிறாய்? என்று விசாரிக்கிறார். சரவணன், அஞ்சலிடம் தான் என்று சொல்கிறார். கதிர், நீங்கள் இன்னும் அவர்களுடன் பேசிக்கொண்டு தான் இருக்கிறீர்களா? என்று கேட்கிறார். பின் சரவணன், அஞ்சலியின் வாழ்க்கையில் நடந்ததை எல்லாம் சொல்கிறார்.






