விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, கதிர் இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி, தன் அப்பாவின் மீது இருந்த கோபத்தில் பைக்கை கீழே தள்ளி விட்டு உள்ளே சென்று விட்டார். ஆனால் உண்மை தெரியாமல் முத்துவேல், கதிரை திட்டிவிட்டு அங்கு இருந்து சென்றார். அதற்குப்பின் வெளியே வந்த சரவணன் இடம் கதிர் பேசிக் கொண்டிருந்தார். அப்போது கதிர், உங்களுக்கு என்னதான் பிரச்சனை? எதுவாக இருந்தாலும் சொல்லுங்கள் என்றார். சரவணன், நான் நிம்மதியாகவே இல்லை, என்னால் எதுவும் வெளியில் சொல்ல முடியவில்லை என்றார்.

மீனா, மும்முரமாக சமைத்துக் கொண்டிருந்தார். வேறு வழியில்லாமல் செந்தில் உதவி செய்து கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் கதிர்- ராஜி இருவரும் கிரவுண்டுக்கு சென்று பிராக்டிஸ் செய்து கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், சரவணன் சோகமாக இருக்கும் விஷயத்தை பற்றி சொன்னார். உடனே ராஜி, தங்கமயில் நகை மறைத்த விஷயத்தை சொல்ல வந்தார். இருந்தாலும் அமைதியானார். இன்னொரு பக்கம் அரசி, செடிக்கு தண்ணீர் ஊற்றிக் கொண்டிருப்பதை பார்த்த குமார் வேண்டுமென்றே வம்பு இழுத்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இதையெல்லாம் பார்த்த அப்பத்தா, குமாரை திட்டி அறிவுரை சொன்னார். அதற்குப்பின் மீனாவிற்கு போன் செய்து கோமதி விசாரித்தார். அதற்குப்பின் கோமதி, அரசி இருவரும் கோயிலுக்கு வந்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாக வந்த பழனி, கோமதி இடம் பேசப்போனார். கோபத்தில் கோமதி, பழனியை மோசமாக திட்டினார். இருந்தாலுமே பழனி, தன் தரப்பு நியாயத்தை சொல்லி புரிய வைக்க பார்த்தார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜி பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், போலீஸ் எக்ஸாம் உடைய தேர்வு தேதியை சொல்லி நன்றாக படிக்க சொல்கிறார். ராஜி, நன்றாக படித்து போலீசாகுவேன் என்று கதிருக்கு வாக்குறுதி எல்லாம் கொடுக்கிறார். இன்னொரு பக்கம் கடையில் தங்கமயிலிடம் கடுகடு என்று பொரிந்து கொண்டே சரவணன் இருக்கிறார். இதையெல்லாம் பாண்டியன் பார்த்துக் கொண்டிருக்கிறார். பாண்டியன் வெளியே போன நேரம் பார்த்து மாணிக்கம் கடைக்கு வருகிறார். அப்போது வந்த சரவணன், தங்கமயில் அப்பாவை மரியாதை இல்லாமல் பேசி கடையை விட்டு வெளியே போக சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
தங்கமயிலும் பயத்தில் தன்னுடைய அப்பாவை அனுப்பி வைக்கிறார். அதற்கு பின் தங்கமயில், சரவணன் இடையே சண்டை வருகிறது. ஒரு கட்டத்தில் சரவணன், தங்கமயிலை அவருடைய அம்மா வீட்டிற்கு போக சொல்கிறார். அப்போது வந்த பாண்டியன், என்ன பிரச்சனை? என்ன நடக்கிறது? என்று விசாரிக்கிறார். சரவணன் உண்மையை சொல்ல வருகிறார். உடனே தங்கமயில், என்னுடைய அப்பாவை அவமானப்படுத்தி அனுப்பி விட்டார் என்று ஏதேதோ காரணங்களை சொல்லி பிரச்சினையை மாற்றி விடுகிறார். இதனால் கோபத்தில் பாண்டியன், சரவணனை திட்டுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






