விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் கோமதி, மரியாதை இல்லாத வீட்டில் என்னால் இனி ஒரு நிமிஷம் இருக்க முடியாது. நான் வீட்டை விட்டு போகிறேன் என்றார். உடனே பிள்ளைகள் எல்லோருமே கோமதி சொன்னதற்கு கிண்டல் தான் செய்தார்கள். மீனா திட்டுகிறார். பாண்டியன், எதற்கு இந்த நாடகம் என்று மீண்டும் கிண்டல் அடித்தார். இதனால் ஆத்திரம் அடைந்த கோமதி வீட்டை விட்டு வெளியேறினார். பாண்டியன் எதுவும் பேசாமல் அமைதியாக இருந்தார்.

மீனா, மகன்கள் எல்லோருமே தன் அம்மாவை அழைத்து வர சொல்லி பாண்டியனிடம் கேட்டார்கள். பின் ஒரு கட்டத்தில் பிள்ளைகள் வற்புறுத்தியிருந்தால் பாண்டியன், கோமதியை அழைத்து வர சென்னார். வழியில் கோபத்தில் கோமதி, பாண்டியன் சொல்வதை கூட கேட்காமல் சென்று கொண்டே இருந்தார்.
பாண்டியனும் சமாதானம் செய்ய முயற்சி செய்கிறார். ஆனால், கோமதி கேட்கவே இல்லை. பின் ஒருவழியாக பாண்டியன், கோமதியை சமாதானம் செய்து விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
ராஜியின் அப்பா முத்துவேலுக்கு கேன்சர் இருப்பதை கதிர் அறிந்து கொண்டார். பின் இதைப்பற்றி கதிர், முத்துவேலிடம் பேசி இருந்தார். முத்துவேல் ரொம்ப வேதனையில் இருந்தார். இதைப் பற்றி இரண்டு வீட்டிலும் சொல்ல வேண்டாம் என்று முத்துவேல் சொன்னார். அதற்கு பின் திருச்சியில் ட்ரீட்மென்ட் எடுத்துக் கொள்வதற்காக முத்துவேல் கிளம்ப தயாராக இருந்தார். கதிர், நானும் வருகிறேன் என்று சொன்னார். அதற்குப்பின் வீட்டிற்கு வந்த முத்துவேல் வீட்டில் யாரிடமும் சொல்லாமல் சோகமாக இருந்தார்.

சீரியல் ட்ராக்:
வீட்டில் உள்ள எல்லோருக்குமே ஒன்றும் புரியவில்லை. சக்திவேல், முத்துவேலினுடைய நடவடிக்கைகளை கண்டு சந்தேகப்பட்டார். அதற்குப்பின் திருச்சியில் ஒரு வேலை இருப்பதாக பொய் சொல்லிவிட்டு முத்துவேல் கிளம்பினார். இன்னொரு பக்கம் கதிர், தன்னுடைய வீட்டில் வாடகை சவாரிக்கு செல்வதாக சொல்லிவிட்டு கிளம்பினார். ராஜிக்கு சந்தேகமாக இருக்கிறது. அதற்குப்பின் கதிர்- முத்துவேல் இருவரும் சந்தித்துக் கொண்டார்கள். இதை சக்திவேல் பார்த்து சந்தேகப்பட்டார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் மீனா, தங்கமயில் இருவரும் சந்தித்து ரொம்ப சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அதை பார்த்து செந்தில் ஷாக் ஆகிறார். அதற்குப்பின் மீனாவிடம் இதைப்பற்றி செந்தில் விசாரிக்கிறார். மீனா ஏதேதோ சொல்லி சமாளிக்கிறார். மீனா- செந்தில் இருவருக்கும் இடையே பெரிய கலவரமே வெடிக்கிறது. ஒரு கட்டத்தில் செந்தில், இனி உன்னுடன் சேர்ந்து வாழ முடியாது. நான் வீட்டை விட்டு போகிறேன் என்று தன்னுடைய அம்மா வீட்டிற்கு வந்து விடுகிறார். அப்போது செந்தில், மீனா செய்த காரியத்தை சொல்கிறார். கோமதி ஷாக் ஆகிறார்.






