விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் சரவணன், இதற்கே விழுந்துட்டால் என்னம்மா, இவளைப் பற்றி இன்னும் எவ்வளவோ விஷயம் இருக்கிறது. இவள் என்னை விட இரண்டு வயது பெரியவள் என்றெல்லாம் சொல்கிறார். இதைக் கேட்டு மொத்த குடும்பமும் மகிழ்ச்சியில் இருக்கிறது. பாண்டியனுக்கு கோபமும் அதிகமானது. தங்க மயிலால் எதுவுமே பேச முடியவில்லை. அழுது கொண்டே இருந்தார். சரவணன் தன் மனதில் இருந்த பாரத்தை எல்லாம் தன் அப்பா அம்மாவிடம் சொல்லி ரொம்ப எமோஷனலாக கதறி அழுதார்.

தங்கமயில், நடந்ததை நினைத்து ரூமுக்குள் அழுது கொண்டிருந்தார். அப்போது வந்த ராஜியிடம், தங்கமயில் தன் பக்கம் இருக்கும் ஞாயத்தை எடுத்து சொல்லி புரிய வைத்தார். அப்போது கோமதி, உன்னை மாதிரி ஒரு மோசக்காரியை நான் பார்த்ததே இல்லை. என் பிள்ளைகளுக்கு என்று ஒரு பிரச்சனை என்றால் நான் சும்மா விடமாட்டேன். நீ இவ்வளவு கேடுகெட்டவள்ளா? என்று தங்கமயிலை ரொம்ப மோசமாக பேசி திட்டி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
தங்கமயில் மேதனையில் இருந்தார். அதற்குப்பின் வீட்டில் எல்லோருமே தூங்கி விட்டார்கள். பாண்டியன், சரவணன் நிலைமையை நினைத்து புலம்பி கொண்டிருந்தார். கோமதியும் ஆறுதல் சொன்னார். இருந்தாலுமே பாண்டியன், சரவணன் நினைத்து ரொம்ப கஷ்டப்பட்டார். காலை பொழுது விடியட்டும். எதுவாக இருந்தாலும் பேசி முடிவெடுக்கலாம் என்று கோமதி சொன்னார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் ராஜி-கதிர் இருவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது கதிர், சரவணன்நிலைமையை நினைத்து ரொம்பவே வருத்தப்பட்டு கொண்டிருக்கிறார். அதற்கு ராஜி,
தங்கமயில் கொண்டு வந்திருக்கும் நகைகளும் போலி தான். ஆனால், வீட்டில் யாருக்குமே தெரியாது. இந்த விஷயம் எனக்கும் மீனா அக்காவிற்கும் தான் தெரியும் என்று சொல்கிறார். இதை கேட்டு கதிருக்கு இன்னும் ஷாக் ஆகிறது. அதற்குப் பிறகு வீட்டில் எல்லோரும் தூங்கிக் கொண்டிருக்கிறார்கள். அதற்குப் பின் கதிர்- ராஜி இருவருமே கிளம்பி செந்தில்- மீனா வீட்டிற்கு போகிறார்கள்.

சீரியல் ட்ராக்:
சரவணன், தங்கமயிலை பற்றி பேசிக் கொண்டிருக்கிறார்கள். வழக்கம் போல செந்தில், தன்னுடைய தந்தையை தான் குறை சொல்லிக் கொண்டிருக்கிறார். பின் அடுத்து என்ன செய்வதென்று புரியாமல் எல்லோருமே குழம்பிப் போய் இருக்கிறார்கள். கோமதி, தங்க மயிலை திட்டிக்கொண்டு இருக்கிறார். அந்த சமயம் பார்த்து வெளியே வந்த தங்கமயில், பாண்டியன் காலில் விழுந்து மன்னிப்பு கேட்க போகிறார். உடனே பாண்டியன் தன்னுடைய காலை நகர்த்திக் கொள்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






