விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் ராஜி, கதிரை குமார் அடித்த விஷயத்தை எல்லாம் சொன்னார். இதனால் கோபத்தில் ராஜி, கோமதி இருவருமே சண்டைக்கு போனார்கள். மாரி, வடிவு பதில் கொடுத்தார்கள். ஒரு கட்டத்தில் அங்கு வந்த கதிர்,ராஜியை சமாதானம் செய்து உள்ளே சென்று விட்டார். அதற்குப் பின் மீனா, ராஜி தன்னிடம் ஒழுங்காக பேசாததை நினைத்து வருத்தப்பட்டு கொண்டிருந்தார். அந்த சமயம் பார்த்து கதிர்- ராஜி இருவருமே வீட்டிற்கு வந்தார்கள். அப்போது மீனா, ராஜியிடம் மன்னிப்பு கேட்டார்.பதிலுக்கு ராஜியும் மன்னிப்பு கேட்டு இருவரும் சேர்ந்து விட்டார்கள்.

பழனி, பாண்டியன் குடும்பத்தில் உள்ள எல்லோருமே திட்டியதை நினைத்து ரொம்ப எமோஷனலாக அழுது புலம்பி கொண்டிருந்தார். முத்துவேல் வீட்டில் எல்லோருமே ஆறுதல் சொன்னார்கள். இருந்தாலும் பழனியால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. பின் சக்திவேல், பாண்டியன் குடும்பத்தை திட்டி விட்டு பழனிக்கு ஆதரவாகவும் சப்போர்ட்டாகவும் பேசி இருந்தார். முத்துவேல், நீ நிறைய கிளைகளை தொடங்க வேண்டும் என்றெல்லாம் அட்வைஸ் செய்தார். இன்னொரு பக்கம் தங்கமயில், பழனி பெரிய துரோகம் செய்தது போல பேசிக் கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
சரவணன், நீயும் உன் குடும்பமும் ஏமாற்றியதை விடவா அவர்கள் செய்துவிட்டார்கள் என்று வழக்கம் போல
தங்கமயில் திட்டிக் கொண்டிருந்தார். சீக்கிரத்திலேயே நீ மாட்டப் போகிறாய் தயாராக இரு என்று சொல்லிவிட்டு சென்றார். இன்னொரு பக்கம் ராஜி-கதிர் இருவரும் அவுட்டிங் சென்று இருந்தார்கள். ஒவ்வொரு கடைக்காக கதிரை அழைத்துக் கொண்டு ராஜி போனார். இன்னொரு பக்கம் செந்தில்- மீனா இருவரும் ரொம்ப நாள் கழித்து சந்தோஷமாக பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்-ராஜி இருவருமே வீட்டிற்கு வருகிறார்கள். சரவணன் தான் கதவை திறந்து அவர்களை உள்ளே அனுப்பி விடுகிறார். பின் சரவணன் தனியாக வெளியே படுத்திருப்பதை பார்த்து கதிருக்கு சந்தேகம் வருகிறது. பின் இதைப்பற்றி கதிர், ராஜியிடம் சொல்கிறார். மறுநாள் காலையில் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன் ஞாபகம் மறதியில் பழனியின் பெயரைச் சொல்லிக் கூப்பிடுகிறார். பின் சரவணன், மாமா அவருடைய கடையில் இருப்பார் என்று சொன்னவுடன் பாண்டியனுக்கு அப்பதான் நினைவுக்கு வருகிறது. உடனே தங்கமயில், கடையை நாங்கள் பார்த்துக் கொள்கிறோம். நீங்கள் எதை பற்றியும் கவலைப்படாதீர்கள் என்றெல்லாம் ஆறுதல் சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
இன்னொரு பக்கம் செந்தில் தூங்கிக் கொண்டே இருக்கிறார். சமைக்க உதவி செய்ய மீனா எவ்வளவு கேட்டுமே செந்தில் எழவில்லை, தூங்கிக் கொண்டே இருக்கிறார். அதற்குப்பின் தங்கமயில் ஏதோ நினைத்துக் கொண்டிருக்கிறார். ராஜி-அரசி இருவரும் கூப்பிட்டும் அவர் திரும்பி பார்க்கவில்லை. பின் ராஜி, என்ன பிரச்சனை என்று விசாரிக்கிறார். இப்போது தங்கமயில் எமோஷனலாக அழுது கொண்டு கர்ப்பமான விஷயத்தில் பொய் சொன்னேன் என்று மட்டும் சொல்கிறார். மற்ற எந்த விஷயத்தையும் சொல்லவில்லை. சரவணன் கஷ்டப்படுத்தி கொடுமைப்படுத்துகிறார் என்பது போலவே பேசிக் கொண்டிருக்கிறார். இதை கேட்டு கோமதிக்கு பயங்கர கடுப்பாகிறது.






