விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் தங்கமயில் இடம் பாக்கியம், நகை போட்டது உண்மைதான் என்று சொல். இல்லை என்றால் நாம் தான் மாட்டிக் கொள்வோம் என்றார். பின் தங்கமயில், 80 பவுன் நகை போட்டு வந்தது உண்மைதான் என்றார். மீனா-ராஜி இருவரும் மாற்றி மாற்றி தங்கமயிலை கேள்வி கேட்டார்கள். ஆனால், தங்கமயில் பொய் சொல்லிக் கொண்டிருந்தார். ஒரு கட்டத்தில் கோவப்பட்ட ராஜி, உங்களுக்கு மாமா மீது உண்மையான பாசம் இருந்தால் உண்மையை சொல்லுங்கள் என்றார். தங்கமயில் அமைதியாக இருந்தார்.

தங்கமயில், எனக்கு கல்யாணம் ஆகவேண்டும் என்றுதான் என்னுடைய அம்மா அப்பா இருவரும் இப்படி செய்து விட்டார்கள். எட்டு பவுன் தான் தங்கம். மீதி எல்லாம் கவரிங் என்று உண்மையை உடைத்து விட்டார். இதைக் கேட்டு பாண்டியர் வீட்டில் உள்ள எல்லோரும் ஷாக் ஆகி இருந்தார்கள். பாக்கியம் ஏதேதோ பேசி சமாளித்தார். உடனே போலீஸ், உங்கள் மகள் எல்லா உண்மையும் செய்ய சொல்லி விட்டார். எதுவாக இருந்தாலும் கோர்ட்டில் பார்த்துக் கொள்ளுங்கள். போலீஸ் நேரத்தை வீணடிக்காதீர்கள் என்று திட்டி அனுப்பி விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
வீட்டிற்கு வந்த பாண்டியன் குடும்பம் போலீஸ் ஸ்டேஷனில் நடந்ததை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். மீனா, ராஜியின் மீது கோமதி பயங்கரமாக கோபப்பட்டார். அந்த சமயம் பார்த்து
வீட்டிற்கு வந்த குழலி, பாக்கியம் குடும்பத்தை மோசமாக திட்டிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயில் போலீஸ் ஸ்டேஷனில் உண்மையை சொன்னதால் கோபப்பட்ட பாக்கியம் அவரை பயங்கரமாக திட்டிக் கொண்டிருந்தார். அதோடு வீட்டை விட்டு வெளியே போக சொல்லி தள்ளினார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் தங்கமயிலின் பொருட்களை எல்லாம் கோமதி அனுப்பி வைக்கிறார். பாண்டியன் வீட்டில் இருந்து தன்னுடைய பொருள்கள் எல்லாம் வந்ததை பார்த்து தங்கமயில் உடைந்து போய் அழுகிறார். பாக்கியத்திற்கு கோபம் இன்னும் அதிகமாகிறது. பின் சரவணன் ஆசையாக வாங்கி தந்த புடவையை பார்த்து தங்கமயில் ரொம்பவே கதறி அழுகிறார். குடும்பத்தினர் ஆறுதல் சொல்லி தங்கமயிலை உள்ளே அழைத்து செல்கிறார்கள். இன்னொரு பக்கம் கோமதி, தங்கமயில் செய்த வேலையை நினைத்து வீட்டில் உள்ள எல்லோரிடமும் புலம்பி கொண்டிருக்கிறார்.

சீரியல் ட்ராக்:
அப்போது தங்கமயில் போன் செய்கிறார். கோபத்தில் கோமதி, தங்கமயில் நம்பரை பிளாக் லிஸ்ட் போட்டு விடுகிறார். தங்கமயில் விடாமல் எல்லோருக்குமே போன் செய்து கொண்டே இருக்கிறார். கோமதி எல்லோரையும் பிளாக் லிஸ்டில் போட சொல்கிறார். அதற்குப்பின் ராஜி, தன் தந்தைக்கு எழுதிய கடிதத்தை பற்றி கோமதியிடம் சொல்லிக் கொண்டிருக்கிறார். பழனி, அண்ணன்கள் ரொம்ப சந்தோசமாக இருக்கிறார்கள் என்கிறார். ராஜி, நான் வீட்டிற்கு போகட்டுமா? என்கிறார். கோமதி, பிரச்சனை வேண்டாம் என்று சொல்கிறார். பழனி, நீ போயிட்டு வா எதுவாக இருந்தாலும் பார்த்துக் கொள்ளலாம் என்று தைரியப்படுத்தி அனுப்புகிறார். பின் ராஜி, தன்னுடைய அம்மா வீட்டிற்கு போகிறார்.






