விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் ‘பாண்டியன் ஸ்டோர்ஸ் 2’ சீரியலில் மீனா-செந்தில் இருவருக்கும் இடையே வாக்குவாதம் நடக்கிறது. இதை பார்த்த கோமதி, செந்திலை திட்டினார். பின் மீனா வழக்கம் போல் ராஜியிடம் பேச சென்று விட்டார். அதற்குப்பின் செந்தில் தன்னுடைய அண்ணன்களுடன் சேர்ந்து ஜாலியாக இருந்தார். மறுநாள் காலையில் பயிற்சிக்காக கதிர், ராஜியை அழைத்துக் கொண்டு கிரவுண்டுக்கு வந்திருந்தார். அப்போது ராஜி செய்யும் அட்ராசிட்டியால் கதிருக்கு கோபம் வந்தது. பின் ராஜியை திட்டிவிட்டு கதிர் அங்கிருந்து சென்று விட்டார்.

மீனா, பால் காய்கறி எல்லாம் வாங்கி வரச்சொல்லி செந்தில் எழுப்பினார். ஆனால், செந்தில் எழாமல் தூங்கிக் கொண்டிருந்தார். இதனால் மீனா வேலைக்கு தயாராகினார். பின் செந்தில் சமைக்கவில்லையா? என்று கேட்டார். நீங்கள் எதுவுமே வாங்கி வரவில்லை என்று நக்கலாக பதில் அளித்து விட்டார். அங்கே இருந்து மீனா கிளம்பி பாண்டியன் வீட்டுக்கு வந்தார். அதற்குப்பின் டெலிவரி அதிகமாக இருப்பதால் சரவணன், பழனியை கடையிலேயே இருக்க சொல்லிவிட்டு சென்று விட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
மாணிக்கம் ஒவ்வொரு நிமிஷமும் ரொம்ப நக்கலாக பழனியை பேசிக் கொண்டிருந்தார். அந்த சமயம் வந்த பாண்டியன், சரவணன் மட்டும் தனியாக எப்படி கிளம்பி சென்று இருக்கான். நீ என்ன செய்தாய்? என்று எல்லோரும் முன்னாடியும் பழனியை திட்டி விட்டார். இதனால் பழனி, கஷ்டப்பட்டு கொண்டு அங்கிருந்து சென்றார். பின் பாண்டியன் வெளியே சென்றவுடன் மாணிக்கம் கல்லாவில் உட்கார்ந்து கொண்டு பணத்தை எடுப்பதற்காக திட்டம் போட்டுக் கொண்டிருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் கதிர்- ராஜி இருவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது
ராஜி, இனி நான் சீக்கிரமாக டிரைனிங்க்கு வந்து விடுகிறேன், மன்னித்துவிடு என்றெல்லாம் சொல்வதால் கதிர் அமைதி ஆகிறார். அந்த சமயம் வந்த பழனி, பாண்டியன் பேசுவது பற்றி புலம்பி கொண்டிருக்கிறார். கதிர், என்னுடன் பார்ட்னராக இருங்கள் என்று சொல்கிறார். அதற்கு பழனி, அதெல்லாம் செட் ஆகாது என்று அங்கிருந்து சோகமாக சென்று விடுகிறார். அதற்குப்பின் தீபாவளி சீர்வரிசை கொடுப்பதற்காக மீனாவின் அப்பா, அம்மா இருவருமே பாண்டியன் வீட்டிற்கு வந்திருக்கிறார்கள். தீபாவளி சீரை கொடுத்துவிட்டு மீனாவின் அப்பா, குவாட்டர்ஸில் தீபாவளி பண்டிகை கொண்டாடுங்கள் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக்:
மீனா முடியாது என்கிறார். பின் செந்திலும் குவாட்டர்ஸில் தான் தீபாவளி கொண்டாட போகிறோம். இங்கு வரப்போவதில்லை என்று சொல்கிறார். அதற்குப்பின் கடையில் தங்கமயில், மாணிக்கம் மட்டும் வியாபாரம் செய்து கொண்டிருக்கிறார்கள். அப்போது கடைக்கு வந்த ஒருவர், பாண்டியனிடம் பணத்தை கொடுக்க சொல்லி பத்தாயிரம் ரூபாய் கொடுக்கிறார். அதை வாங்கிய மாணிக்கம், உனக்கு தீபாவளி சீர் செய்ய காசு தயாராகிவிட்டது என்று சொல்கிறார். உடனே பயத்தில் தங்கமயில், வேண்டாம். அந்த பணத்தை கொடுத்து விடுங்கள். மாமாவிடம் தந்துவிடலாம் என்கிறார். ஆனால், மாணிக்கம் கேட்கவே இல்லை. அந்த பணத்தை எடுத்துக் கொண்டு சென்று விடுகிறார். இதனால் என்ன பிரச்சனை வருமோ? என்று தங்கமயில் ரொம்பவே பயந்து போய் இருக்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






