விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், நான் சொல்வதை மட்டும் செய். ஒழுங்கு மரியாதையாக பேங்குக்கு கிளம்பு என்று சொன்னார். இதனால் கதிர் எதுவும் பேசாமல் பேங்குக்கு கிளம்பி இருந்தார். இன்னொரு பக்கம் ராஜி - மீனா இருவரும் வந்து கொண்டிருந்தார்கள். அந்த வழியாகத்தான் குமாரின் அம்மா, உன்னால் தான் இந்த பிரச்சனை. காரணம், நீ கல்யாணத்திற்கு முந்தய நாள் ஓடிப்போனதால் தான் இவ்வளவு பிரச்சனை நடந்து கொண்டிருக்கின்றது என்று உண்மை புரியாமல் ராஜியை திட்டிக் கொண்டிருந்தார். இதனால் மீனாவிடம் ராஜி, நடந்த உண்மை எல்லாம் சொன்னால் இந்த பிரச்சனை முடிந்து விடுமா? என்றெல்லாம் புலம்பி இருந்தார். அதற்கு மீனா வேண்டாம் என்று தடுத்தார்.

இன்னொரு பக்கம் வரும் வழியில் பாண்டியனை பார்த்து சக்திவேல், என் மகனை ஜெயிலுக்கு அனுப்பி விட்டாய் என்று சந்தோசப்படாதே, உன்னையும் உன் குடும்பத்தையும் சும்மா விடமாட்டேன் என்றெல்லாம் சவால் விட்டார். இதை பார்த்த கதிர், சக்திவேலை அடிக்கப் போகிறார். பாண்டியன் தடுத்து நிறுத்தி, பிள்ளைகளை எப்படி வளர்க்கணும் என்று என்னை பார்த்து கற்றுக்கொள் என்று என்று திட்டிவிட்டு அங்கிருந்து சென்றார். அதற்குப்பின் பேங்கில் கதிருக்கு லோன் சம்பந்தமாக பாண்டியன் பேசி இருந்தார். அப்போது அவர்கள், என்னென்ன தேவை என்று எல்லா விஷயத்தையும் சொன்னார்கள். இதனால் பாண்டியன் சம்மதிக்க, இதை எல்லாம் பார்த்து கதிர் உள்ளுக்குள் சந்தோஷப்பட்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் பாண்டியன், கதிர் இருவருமே காரில் வந்து கொண்டிருந்தார்கள். அப்போது பாண்டியன், இந்த டிராவல்ஸ் தொழில் உனக்கு தெரியுமா? இதில் ஏதாவது நஷ்டம் அடைந்தால் நீ சமாளிப்பாயா? இந்த லோன் விவகாரம் எல்லாம் கொஞ்சம் பயமாக இருக்கிறது. உனக்கு அந்த அளவுக்கு திறமை இருக்கிறதா? இந்த தொழில் வேண்டாம் நீ மேற்கொண்டு படித்துவிட்டு வேலைக்கு போ என்றெல்லாம் கேள்வி மேல் கேள்வி கேட்டுக் கொண்டிருந்தார். கதிர், நானே என் பிரச்சினையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்வதால் கோபப்பட்டு பாண்டியன் காரில் இருந்து இறங்கினார்.

நேற்று எபிசோட்:
இன்னொரு பக்கம் கோமதி இடமும் சுகன்யாவை பற்றி பழனி சொன்னார். இதை கேட்டவுடன் கோமதி இன்னும் கொந்தளித்து சுகன்யாவை திட்டி அனுப்பி விட்டார். அதற்குப்பின் பாண்டியன், கதிர் செய்ததைப் பற்றி கோமதியிடம் சொன்னார். இதை கேட்ட கோமதி கோபப்பட்டு கதிரை திட்டிக் கொண்டிருந்தார். ராஜி எடுத்து சொல்லியும் கோமதி கேட்கவில்லை. அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு கதிர் வந்தார். கதிரை பார்த்தவுடன் கோமதி கோபப்படாமல் அன்பாக விசாரித்தார். அதற்குப்பின் கதிர்- ராஜி இருவருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்று எபிசோட்டில் சரவணன், அரசி இருவருமே ஜாலியாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். இதை கிச்சனிலிருந்து பார்த்த தங்கமயில் பொறாமைப்படுகிறார். அந்த சமயம் பார்த்து மீனாவும், சரவணன் இடம் பேசிக் கொண்டிருக்கிறார். அதற்கு பின் பாண்டியன் வீட்டிற்கு வந்து விடுகிறார். வீட்டில் உள்ள எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது பாண்டியன், ராஜி நீ ஐபிஎஸ் ஆகிவிடு. உனக்கு என்ன தோணுதோ அதை செய் என்று சொல்கிறார். பின் மீனாவிடம், லோனை உன்னால் அடைக்க முடியுமா? இல்லை நான் ஏதாவது உதவி செய்யட்டுமா? என்று கேட்கிறார். அதற்கு செந்தில், நான் லோன் பிரச்சனையை பார்த்துக் கொள்கிறேன் என்று சொல்கிறார். இதையெல்லாம் பார்த்து கதிர்- செந்தில் இருவருக்குமே ஷாக்கிங் ஆக இருக்கிறது.
சீரியல் ட்ராக்:
அதோடு அரசியிடம் பாண்டியன், உன்னுடைய மீனா- ராஜி மாதிரி பேரும் புகழும் வாங்கணும் என்று புகழ்ந்து பேசுகிறார். இதை எல்லாம் கேட்டு தங்க மயிலுக்கு பயங்கரமாக கடுப்பாக இருக்கிறது. பின் ரூமுக்கு வந்த தங்கமயில், எப்ப பாத்தாலும் மீனா- ராஜியை தான் புகழ்ந்து பேசுகிறார்கள் என்று கோபப்பட்டு புலம்பி கொண்டிருக்கிறார். அந்த சமயம் பார்த்து சரவணன் வருகிறார். சரவணனை எப்படியாவது தன் பக்கம் ஈர்க்க வேண்டும் என்று தங்கமயில் கால் வலிப்பது போல் நடித்து டிராமா செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






