விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' பாண்டியன், உனக்கு என்ன வேண்டும் என்று கேளு. நான் செய்கிறேன் என்றார். உடனே கதிர், ராஜி போலீசாக வேண்டும். அதற்கு சம்மதம் கொடுங்கள் என்று சொன்னவுடன் வழக்கம்போல் பாண்டியன் கோபப்பட்டு திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் சுகன்யா- பழனி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது சுகன்யா, என்னால் இந்த வீட்டில் இருக்க முடியவில்லை என்று வழக்கம்போல அவரை திட்டிக் கொண்டிருந்தார். பழனிக்கு என்ன சொல்வது என்றே புரியவில்லை. சுகன்யா அடுத்து என்ன பிரச்சனை செய்வாள் என்ற பயத்திலேயே பழனி இருந்தார்.

மீனாவின் அப்பாவை வீட்டிற்கு அழைத்து வந்து விட்டார்கள். அவரை பார்ப்பதற்காக கோமதி சென்றிருந்தார். அப்போது அவர், மீனாவின் அப்பாவிடமும் உடல் நலம் குறித்து அக்கறையுடன் பேசுவதை பார்த்து மீனாவின் அப்பா, அம்மா இருவருமே அவர்கள் மீது இருந்த கோபத்தை விட்டார்கள். அவர்களுமே கோமதியிடம் நன்றாக பேசினார்கள். அதுமட்டுமில்லாமல் மீனா அப்பா, செந்திலிடம் அக்கறையாக பேசி இருந்தார். இதை பார்த்து மீனாவிற்கு சந்தோசமாக இருந்தது. ஒரு வழியாக மீனாவின் அப்பா, செந்தில்-மீனா இருவரையும் ஏற்றுக்கொண்டார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
இன்னொரு பக்கம் தன்னுடைய நண்பர்கள் வெளியே செல்வதற்கு அழைதார்கள். ஆனால், ராஜி பணம் இல்லை என்பதால் முடியாது என்றார். உடனே கதிர் தன்னுடைய அம்மாவிடம் பணத்தை வாங்கி ராஜிக்காக கொடுத்தார். இன்னொரு பக்கம் தங்கமயில் எங்கே செல்வது? என்று புரியாமல் அலைந்து கொண்டிருந்தார். அப்போது ஒரு ஹோட்டலில் வேலைக்கு ஆட்கள் தேவை என்று இருந்தது. அதை பார்த்தவுடன் தங்கமயில் உள்ளே சென்று வேலை கேட்டார். சப்ளையர் வேலை தான் இருக்கிறது என்ற உடன் தங்கமயிலும் ஒத்துக் கொண்டார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள். ஆனால், அரசி மட்டும் தனியாக நின்று போன் பேசிக் கொண்டிருந்தார். இதை பார்த்தவுடன் கோமதி திட்டினார். கடையில் பழனி வேலை செய்து கொண்டிருந்தார். அப்போது போன் செய்த சுகன்யா, சினிமாக்கு போகவில்லையா? என்று கேட்க, கடையில் வேலை இருக்கிறது என்று ஏதோ சொல்லி பழனி சமாளித்தார். ஆனால், சுகன்யா அவரை வறுத்து எடுத்தார். இது எல்லாம் பார்த்த செந்தில், தன்னுடைய அப்பாவிடம் பேசி எப்படியோ படம் பார்க்க அனுமதி வாங்கி தந்தார். பின் இதைப்பற்றி சுகன்யாவுடன் பழனி சொன்னவுடன் அவர் மீண்டும் அதுக்கும் சண்டை போட்டார்.

சீரியல் ட்ராக்:
அதற்குபின் வீட்டிற்கு வந்த பாண்டியன் எல்லோரிடமும் கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார். ஆனால், அரசி போனை தான் பார்த்துக் கொண்டிருந்தார். இதை பார்த்த பாண்டியன் கேள்வி கேட்க, அரசி ஏதேதோ சொல்லி சமாளித்தார். உடனே சுகன்யா, அரசி ரொம்ப நல்ல பொண்ணு. அவள் மீது சந்தேகப்பட வேண்டாம் என்று அவருக்கு சப்போர்ட்டாக பேசி இருந்தார். அதற்குப்பின் அரசி ரூமுக்கு போன சுகன்யா, நீ குமாரை காதலிக்கும் விஷயம் எனக்கு தெரியும். அவன் ரொம்ப நல்லவன். உன்னை அவனுக்கு பிடிக்கும் என்று அரசி மனசை மாற்றும் வகையில் பேசி இருந்தார். அந்த சமயம் பார்த்து மீனா வந்தவுடன் பேச்சை சுகன்யா மாத்தி விட்டார்.
https://www.youtube.com/watch?v=NtH2HZWeOSU
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகி இருக்கும் ப்ரோமோவில் தங்கமயில் ஹோட்டல் வேலைக்கு போகிறார். அங்க அவரை பார்த்தவுடன் எல்லோரும் சிரிக்கிறார்கள். அதற்கு ஹோட்டல் ஓனர், ஹோட்டல் வேலைக்கு ஏற்ற மாதிரி தயாராகி வேலையை பார் என்று சொல்கிறார். அதற்குப்பின் கஸ்டமர் சாப்பிட்ட தட்டை எல்லாம் எடுத்து கிளீன் பண்ண சொல்கிறார்கள். தங்கமயிலும் மனதிற்குள் கஷ்டப்பட்டு கொண்டு செய்கிறார். அந்த சமயம் பார்த்து தங்கமயில் அம்மா போன் செய்ய, ஓனர் திட்டுகிறார். பின் தங்கமயிலின் அம்மா- அப்பா இருவரும் பாண்டியனிடம், எதற்கு தங்கமயில் வேலைக்கு போகணும்? என்று கேட்க, பெண்கள் வேலைக்கு போவது தானே நல்லது. அவர்கள் சொந்தக்காலில் நிற்கணும் என்றெல்லாம் பாண்டியன் அறிவுரை சொன்னவுடன் அவர்களால் எதுவுமே பேச முடியவில்லை.






