விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன், பேங்கில் பணத்தை போட்டு விட்டாயே என்று கேட்டதற்கு, செந்தில் ஆமாம் என்றார். அதற்குப்பின் பாண்டியன், தங்கமயில் எப்போது வீட்டிற்கு வருவார்? என்று கேட்க, ஏதேதோ சொல்லி சமாளித்தார் சரவணன். இன்னொரு பக்கம் தங்கமயில் வேதனையில் இருந்தார். அப்போது அக்கம் பக்கத்தினர் தங்கமயில் வாழாவெட்டியாக வந்துவிட்டாள் என்று அவருடைய பெற்றோரிடம் விசாரித்தார்கள். இதனால் கோபப்பட்ட தங்கமயில் அம்மா, அவர்களை திட்டிய அனுப்பி விட்டார். தங்கமயிலுக்கு என்ன சொல்வது என்று புரியாமல் அழுது இருந்தார்.

தங்கமயில் அம்மா, இன்னும் இரண்டு நாள்தான் உனக்கு டைம். நீ உன்னுடைய மாமியார் வீட்டுக்கு கிளம்பும் வேலையை பார் என்று தங்கமயிலை மோசமாக திட்டி விட்டார். இதனால் தங்கமயில், சரவணன் வேலை செய்யும் இடத்திற்கு போனார். ஆனால், அவர் அங்கு இல்லை. பின் சரவணனுக்கு போன் செய்து பேசி இருந்தார் தங்கமயில். அப்போது சரவணன் திட்டி போனை வைத்து விட்டார். இன்னொரு பக்கம் சக்திவேல்- முத்துவேல் எல்லோருமே பணம் பறிபோனதை நினைத்து புலம்பி கொண்டிருந்தார்கள். வீட்டில் உள்ள எல்லோருமே வரி கட்டவில்லையா? என்ன பிரச்சனை? என்றெல்லாம் கேட்க, சக்திவேல் வழக்கம்போல எல்லோரிடமும் கத்தி கொண்டிருந்தார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
பின் அவர், அரசி வந்த நேரம் தான் இப்படி எல்லாம் நடக்கிறது என்று திட்டிக் கொண்டிருந்தார். இதனால் அப்பத்தா சக்திவேலை திட்டினார். இன்னொரு பக்கம் செந்தில், பணத்தை மாமனார் இடம் கொடுத்த விஷயத்தை சொன்னவுடன் மீனா ஷாக் ஆனார். உடனே மீனா, நீங்கள் பணத்தை வாங்கி பேங்கில் போடுங்கள். இல்லையென்றால் உண்மையை மாமாவிடம் சொல்லுங்கள் என்றார். ஆனால், செந்தில் அமைதியாக இருந்தார். அதற்கு பின் ரூமில் குமார், அரசி இருவரும் பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது குமார், நீ போன் செய்தாயா? என்று கேட்க, இந்த உண்மை தெரிந்திருந்தால் கண்டிப்பாக நானே சொல்லி இருப்பேன் என்று அரசி திமிராக பேசினார். இதனால் கோபத்தில் குமார், அரசியின் கழுத்தைப் பிடித்து நெருக்குகிறார்.

நேற்று எபிசோட்:
நேற்று எபிசோட்டில் குமார், அரசியின் கழுத்தை ரொம்ப வேகமாக அழுத்தி பிடித்தார். உடனே அரசி கோபத்தில் குமாரின் கையை முறுக்கி அவனுடைய கழுத்தையே நெருக்கினார். வலி தாங்க முடியாமல் குமார் கத்தினார். பின் குமாரை பிடித்து கீழே தள்ளி விட்டார் அரசி. சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து கதவை திட்டினார்கள். உடனே அரசி கதவை திறந்து குமார் தன்னை அடித்தது போல அழுது டிராமா செய்தார். ஆனால், குமார் சொல்வதை யாருமே கேட்கவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே குமாரை தான் திட்டி விட்டு போனார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

சீரியல் ட்ராக்:
அப்போது மீனா, செந்தில் இடம் உண்மையை சொல்ல சொன்னார். அப்போது தேர்வின் ரிசல்ட் வந்ததால் எல்லோருமே அதைப்பற்றி தான் பேசி இருந்தார்கள். அப்போது ராஜி, பாஸாகி விட்டேன் என்று ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், கதிர் 4 சப்ஜெக்ட்டில் பெயில் என்று சொல்வதால் மொத்த குடும்பமே வருத்தப்பட்டது. பாண்டியன் வழக்கம்போல் கதிரை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் அரசி, எல்லா தேர்விலும் 80 சதவீதத்திற்கும் மேல் அதிக மார்க் வாங்கி பாஸாகிவிட்டார். இதை அப்பத்தாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். உடனே அப்பத்தா, அரசியை கோயிலுக்கு அழைத்து செல்ல குமாரிடம் சொன்னார்.
https://www.youtube.com/watch?v=1rpjgKXZNP4
சீரியல் ப்ரோமோ:
இந்நிலையில் தற்போது வெளியாகியிருக்கும் புரோமோவில் தங்கமயில் கர்ப்பமாக இருக்கிறார். இதை அறிந்து தங்கமயில் அம்மா, அப்பா எல்லோருமே சந்தோஷப்பட்டு அவரை பாண்டியன் வீட்டிற்கு அழைத்து வருகிறார்கள். பின் பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோரிடமும் ஸ்வீட் கொடுத்து தங்கமயில் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை சொல்கிறார்கள். பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோருமே சந்தோசமாக இருக்கிறார்கள். இனி வரும் நாட்களில் சரவணன், தங்கமயிலை ஏற்றுக் கொள்வாரா? என்பதை பொறுத்திருந்து பார்க்கலாம்






