விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் குமார், அரசியின் கழுத்தை ரொம்ப வேகமாக அழுத்தி பிடித்தார். உடனே அரசி கோபத்தில் குமாரின் கையை முறுக்கி அவனுடைய கழுத்தையே நெருக்கினார். வலி தாங்க முடியாமல் குமார் கத்தினார். பின் குமாரை பிடித்து கீழே தள்ளி விட்டார் அரசி. சத்தத்தை கேட்டு வீட்டில் உள்ள எல்லோருமே வந்து கதவை திட்டினார்கள். உடனே அரசி கதவை திறந்து குமார் தன்னை அடித்தது போல அழுது டிராமா செய்தார். ஆனால், குமார் சொல்வதை யாருமே கேட்கவில்லை. வீட்டில் உள்ள எல்லோருமே குமாரை தான் திட்டி விட்டு போனார்கள். இன்னொரு பக்கம் பாண்டியன் வீட்டில் எல்லோருமே பேசிக் கொண்டிருந்தார்கள்.

அப்போது மீனா, செந்தில் இடம் உண்மையை சொல்ல சொன்னார். அப்போது தேர்வின் ரிசல்ட் வந்ததால் எல்லோருமே அதைப்பற்றி தான் பேசி இருந்தார்கள். அப்போது ராஜி, பாஸாகி விட்டேன் என்று ரொம்ப சந்தோஷப்பட்டார். ஆனால், கதிர் 4 சப்ஜெக்ட்டில் பெயில் என்று சொல்வதால் மொத்த குடும்பமே வருத்தப்பட்டது. பாண்டியன் வழக்கம்போல் கதிரை திட்டி விட்டு சென்றார். இன்னொரு பக்கம் அரசி, எல்லா தேர்விலும் 80 சதவீதத்திற்கும் மேல் அதிக மார்க் வாங்கி பாஸாகிவிட்டார். இதை அப்பத்தாவிடம் சொல்லி ரொம்ப சந்தோஷப்பட்டார். உடனே அப்பத்தா, அரசியை கோயிலுக்கு அழைத்து செல்ல குமாரிடம் சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் குமார், கோவிலுக்கு எல்லாம் கூட்டிட்டு போக முடியாது என்று சொன்னார். உடனே அப்பத்தா திட்டியவுடன் வேறு வழியில்லாமல் அரசியை அழைத்துக் கொண்டு குமார் சொன்னார். இன்னொரு பக்கம் ராஜி, கதிர் இருவருமே வெளியே சென்று கொண்டிருந்தார்கள். அப்போது ராஜி நல்ல மதிப்பெண் எடுத்ததை நினைத்து பெருமையாக கதிர் பேசி இருந்தார். பின் கதிர் இருப்பதை பார்த்தவுடன் குமார், அரசியை வம்பு இழுத்து அவளை தள்ளி விட்டார்.

நேற்று எபிசோட்:
இதையெல்லாம் பார்த்து கதிருக்கு பயங்கர கோபம் வந்தது. உடனே அரசி ஏதோ சொல்லி சமாளித்து விட்டார். அதற்குப்பின் குமார், பாண்டியன் முன் அரசியை அசிங்கப்படுத்த நினைத்தார். அங்கேயும் அரசி சமாளித்து விட்டார். பின் மீண்டும் பாண்டியனிடம் வம்பிழுக்க குமார் போனார். உடனே போலீஸ் அந்த இடத்திற்கு வந்தவுடன் அரசி, குமார் என்னை அடித்துக் கொடுமை படுத்துவதாக புகார் கொடுத்தார். இதனால் குமாருக்கு என்ன செய்வது என்று புரியவில்லை, அமைதியாக இருந்தார்.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் செந்தில் செய்த வேலையால் மீனா கோபமாக இருக்கிறார். அதனால் செந்தில் இடம் சரியாக மீனா பேசுவதில்லை. மீனா தன்னுடைய தந்தைக்கு போன் செய்து பணம் என்ன செய்தீர்கள்? என்று கேட்கிறார். அதற்கு அவர், பணத்தை வேலை வாங்கி தருபவரிடம் கொடுத்துவிட்டேன் என்று சொல்கிறார். இதனால் தன்னுடன் வேலை செய்பவரிடம் மீனா, 10 லட்சம் ரூபாய் பணம் கடனாக வாங்கி தர முடியுமா? என்று கேட்க கேட்கிறார். அதற்கு அவருமே என்னால் முடிந்தவரை ஏற்பாடு செய்கிறேன் என்று சொல்கிறார்.

சீரியல் ட்ராக் :
இன்னொரு பக்கம் தங்கமயில், நாள் தள்ளி போயிருக்கு என்று சொல்ல, அவர் அம்மா உடனே மெடிக்கல் ஷாப்பிற்கு சென்று பிரக்னன்சி கிட் வாங்கிக் கொண்டு வந்து தருகிறார். தங்கமயிலும் செக் செய்து பார்க்கிறார். தான் கர்ப்பமாக இருக்கும் விஷயத்தை அறிந்து தங்கமயில் ரொம்ப சந்தோஷப்படுகிறார். பின் வீட்டில் உள்ள எல்லோரிடமே சொல்கிறார். பின் தங்கமயில் இந்த சந்தோஷமான விஷயத்தை சரவணன் இடம் சொல்ல போன் செய்கிறார். ஆனால், அவர் எடுக்கவில்லை. பின் தங்கமயில் மெசஜ் போடுகிறார். அதை பார்த்த சரவணன், இது புது ட்ராமாவா? ஒருவன் எத்தனை முறை ஏமாறுவது? என்று சொல்வதால் தங்கமயில் வருத்தப்படுகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.






