விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் “பாண்டியன் ஸ்டோர்ஸ் 2” சீரியலில் கடந்த வாரம் வீட்டில் தங்கமயில், தன்னுடைய மாமனாருக்கு இரவு 12 மணிக்கு பிறந்தநாள் வாழ்த்து சொல்ல எல்லோரையும் எழுப்பி அலப்பறை செய்தார். அப்போது பாண்டியன் கோபத்தில் திட்டி அனுப்பி விட்டார். மறுநாள் காலையில் எல்லோருமே பாண்டியனுக்கு பிறந்த நாளுக்கு வாழ்த்துக்கள் சொல்லி ஆசிர்வாதம் வாங்கி இருந்தார்கள். அதற்குப்பின் பாண்டியன் கேக் வெட்டி கொடுத்தார். அப்போது பாண்டியன் ஆனந்த கண்ணீர் விட்டார்.
உடனே கோமதி, இதையெல்லாம் உங்கள் மூன்று மருமகள்களும் செய்தது தான் என்று சொன்னார்.
அதற்குப்பின் பாண்டியனுக்கு வாங்கி வைத்த கிப்ட்டை கொடுதார்கள். பின் மொத்த பாண்டியன் குடும்பமே கோயிலுக்கு போயி இருந்தார்கள். அந்த சமயம் பாத்து கோமதியின் அண்ணன், சக்தி இருவருமே வந்தார்கள். அவர்களை பார்த்து பாண்டியன், தன் குடும்பத்தை பற்றி பெருமையாகவும், சந்தோஷமாகவும் பேசி இருந்தார். இதையெல்லாம் கேட்ட கோமதியின் அண்ணன் கோபப்பட்டு, நம்ம வீட்டு பெண்ணை தூக்கி அசிங்கப்படுத்தியது போல் அவருடைய மகளை தூக்குடா என்று சொன்னார்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
இந்த வாரம் பாண்டியன், சரவணன் திருமணத்தை ரெஜிஸ்டர் செய்ய வேண்டும். ஆதார் கார்டை கொண்டு வர சொல்லி தங்கமயில் இடம் கேட்க, அவர் ரொம்ப பயந்தார். காரணம், அந்த ஆதார் கார்டை பார்த்தால் தன்னைவிட சரவணன் வயதில் சின்னவர் என்பர் தெரிந்து விடும் என்று புலம்பி இருந்தார். பின் இந்த விஷயத்தை தன்னுடைய அம்மாவிடம் தங்கமயில் சொல்ல அவர், நீயே சமாளி என்று போனை வைத்து விட்டார். மறுநாள் காலையில் மீண்டும் ஆதார் கார்டை பற்றி தங்கமயிலிடம் பாண்டியன் கேட்க, அவர் பயத்தில் அமைதியாகவே இருந்தார்.
நேற்று எபிசோட்:
ஃபோனில் ஆதார் கார்டு இல்லையா என்று சரவணன், மீனாவும் கேட்க, இல்லை என்று ஏதேதோ சொல்லி சமாளித்து கொண்டே இருந்தார் தங்கமயில். இதையெல்லாம் பார்த்த மீனாவுக்கு சந்தேகம் வந்தது. நேற்று எபிசோட்டில் மீனா, ஆதார் கார்டை பற்றி பேசினாலே நீங்க ஏன் ரொம்ப பதட்டமாகிறீர்கள்? இது ஒரு சாதாரண விஷயம் தானே என்று கேட்க, நான் நல்லா தான் இருக்கிறேன் என்று தங்கமயில் சொன்னார். அதற்குப்பின் அம்மா வீட்டிற்கு போன தங்கமயில், தன்னுடைய அம்மாவிடம் நடந்ததை சொல்ல, அவர் ஏதாவது சொல்லி சமாளி.
இன்றைய எபிசோட்:
ஆதார் கார்டை யாரிடமும் காமிக்காதே என்று சொல்லிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் தங்கமயிலின் அப்பாவை பார்த்து பாண்டியன் ஆதார் கார்டை வாங்கி விட்டார். இதை தங்கமயிலின் அப்பா வீட்டில் சொன்னவுடன் தங்கமயில் பதறுகிறார். இந்நிலையில் இன்றைய எபிசோடில் தன் வாழ்க்கையே போய்விட்டதாக நினைத்து தங்கமயில் புலம்புகிறார். இன்னொரு பக்கம் ஆதார் கார்டை செந்தில் வீட்டில் கொடுக்க, எல்லோருமே மாறி மாறி தங்கமயிலின் போட்டோ மட்டும் தான் பார்க்கிறார்கள்.
சீரியல் ட்ராக்:
அந்த சமயம் பார்த்து வீட்டிற்கு வந்த தங்கமயில் ஆதார் கார்டை பற்றி கேட்க, பத்திரமாக இருக்கிறது என்று கோமதி சொல்கிறார். ஆனால், யாருக்குமே எந்த விஷயம் தெரியவில்லை என்று அவருடைய அம்மா சொல்ல, தங்கமயில் கொஞ்சம் நிம்மதி அடைகிறார். இருந்தாலும் ரிஜிஸ்டர் பண்ணி முடித்து ஆதார் கார்டு கையில் வரும் வரை பயமாக இருக்கிறது என்று தங்கமயில் புலம்ப, எதற்கும் கவலைப்படாதே, நான் இருக்கிறேன். இந்த வாழ்க்கையை உன்னை விட்டு போக விடமாட்டேன் என்று அவர் அம்மா சமாதானம் செய்கிறார். இத்துடன் சீரியல் முடிகிறது.