விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் 'பாண்டியன் ஸ்டோர்ஸ் 2' சீரியலில் பாண்டியன் மைக்கை பிடித்து, ஊர் உலகத்தில் நடக்காத விஷயம் நடக்கவில்லை. ஊரில் உங்களுக்கு வேலை இல்லை என்றால் என் மகளைப் பற்றியும் என் குடும்பத்தை பற்றியும் தான் பேசுவீர்களா? இதனால் என் மகள் வீட்டுக்குள்ளே முடங்கி கிடந்தார். உங்களால் தான் என் மகள் அவமானப்பட்டார். என் மகளின் வாழ்க்கையை பற்றி யாரும் பேச தேவையில்லை. உங்களுடைய வேலையை பாருங்கள் என்று ஆவேசமாக பேசி இருந்தார். இது எல்லாம் கேட்டு பாண்டியன் வீட்டில் உள்ள எல்லோருமே ஷாக் ஆகினார்கள்.

பின் ஊர் முழுக்க அரசிக்காக பாண்டியன் பேசி இருந்தார். இதை டிவியிலும் டிவியிலும் ஒளிபரப்பி இருந்தார்கள். இதையெல்லாம் பார்த்து அரசிக்கு ரொம்ப சந்தோஷமாக இருந்தது. ஆனால், கோமதி தான் டென்ஷன் ஆனார். பின் வீட்டிற்கு வந்த பாண்டியன், நான் தவறு செய்து விட்டேனா என்று கேட்டார். கோமதி, பாண்டியனை திட்டினார். உடனே அரசி, என் அப்பா எனக்காக தான் செய்தார். எனக்கு சந்தோசமாக இருக்கிறது என்றார். அதற்கு பின் வீட்டில் உள்ள எல்லோருமே பாண்டியன் செய்த செயலை பாராட்டி புகழ்ந்து பேசி இருந்தார்கள்.
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2:
நேற்று எபிசோட்டில் பாண்டியன் வீட்டில் எல்லோருமே கலகலப்பாக பேசிக் கொண்டிருந்தார்கள். பாண்டியன் மட்டும் இல்லை. அப்போது செந்தில், நீ அப்பாவை புகழ்ந்து பேசுவதெல்லாம் ஓவர் என்று சொன்னார். அதற்கு அரசி, அப்பா செய்தது முழுக்க முழுக்க சரிதான் என்று ரொம்ப பெருமையாக தன்னுடைய தந்தையை பற்றி பேசிக் கொண்டிருந்தார். இன்னொரு பக்கம் ரூமில் தங்கமயில், தன்னுடைய கணவர் ஏதாவது சர்ப்ரைஸ் செய்வார் என்று ஆவலுடன் காத்துக் கொண்டிருந்தார். ரூமிற்கு வந்த சரவணன், ஏதோ ஒரு பொருளை தேடிக் கொண்டிருந்தார். ஆனால், தங்கமயில் தனக்கான பொருள் தான் தேடுகிறார் என்று தப்பாக புரிந்து கொண்டார்.

நேற்று எபிசோட்:
பின் தங்கமயில், எனக்காக எதுவும் வாங்கி வரவில்லையா? சர்ப்ரைஸ் என்று சொன்னீர்கள் என்றார்.
அதற்கு சரவணன், அதை பெரிதாக பொருட்படுத்தவே இல்லை. எந்த கிப்டும் கொடுக்கவில்லை. இதனால் தங்கமயில் ரொம்பவே வருத்தப்பட்டார். இன்னொரு பக்கம் ரூமில் கதிர், ராஜி இருவரும் ஜாலியாக குழந்தைகளை பற்றி பேசிக் கொண்டிருந்தார்கள். அப்போது கதிர், எதார்த்தமாக உன்னுடைய குழந்தையை என்னை எப்படி கூப்பிடும்? என்று சொல்ல, உடனே ராஜி கோபப்பட்டு திட்டி விட்டு சென்றார். அதற்கு பின் தான் கேட்ட கேள்வி தப்பு என்று கதிருக்கு புரிந்தது.

இன்றைய எபிசோட்:
இந்நிலையில் இன்றைய எபிசோட்டில் வடிவு, ராஜி-அரசி வாழ்க்கையில் நடந்தது எல்லாமே ஒன்று தான். அரசியே தாலி கட்டிக் கொண்டாள். ஆனால், ராஜிக்கு கதிர் தாலி கட்டினார். இருந்தாலும் விருப்பமில்லாமல் நடந்த கல்யாணம். ராஜியை நம்ம வீட்டிற்க்கே அழைத்து வந்துவிடலாம் என்று சொல்கிறார். இதைக்கேட்டு முத்துவேல் எதுவும் பேசாமல் அமைதியாக இருக்கிறார். மறுநாள் காலையில் ராஜி, மீனா, தங்கமயில் மூவருமே பேசிக் கொண்டிருக்கிறார்கள். அப்போது தங்கமயில், அரசி வீட்டிற்கு வந்த மாதிரியே ராஜியும் அவள் அம்மா வீட்டிற்கு சென்று விடுவாளா? என்று கேட்டவுடன் ராஜி பயங்கரமாக கோபப்பட்டு உள்ளே சென்று விடுகிறார்.

சீரியல் ட்ராக்:
பின் கோமதி, ராஜி எதற்கு அம்மா வீட்டிற்கு போகவேண்டும் என்று தங்கமயிலை திட்டி விடுகிறார்.
அதற்குப்பின் ரூமில் ராஜி, வெளியில் நடந்ததை கதிரிடம் சொல்லி ஃபீல் பண்ணி பேசுகிறார். உடனே கதிர், உனக்கு உன் அம்மா வீட்டிற்கு போக வேண்டும் என்றால் சொல் நானே கொண்டு போய் விடுகிறேன் என்று சொல்கிறார். இதனால் ராஜியிக்கு இன்னும் கோபம் அதிகமாகிறது. அதற்குப்பின் குமாரை ஜாமினில் வெளியே எடுத்து வந்து விடுகிறார்கள். இதை பார்த்த சரவணன், தன்னுடைய அப்பாவிடம் சொல்கிறார். ஆனால், அவர் அதைப் பற்றி எதுவும் பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. பின் முத்துவேல் வீட்டில் குமார் வந்ததால் எல்லோருமே சந்தோசமாக இருக்கிறார்கள். அப்போது வடிவு, நாங்கள் ராஜியை மீண்டும் வீட்டிற்கு அழைத்து வர இருக்கிறோம் என்று சொல்கிறார். இதனால் குமார் ஷாக் ஆகிறார். இத்துடன் சீரியல் முடிகிறது






