விவேக்கின் பல்வேறு படங்களில் நடித்த பாண்டியன் ஸ்டோர்ஸ் நடிகர் காலமானார்.

0
921
nellai

தமிழ் சினிமாவில் சமீப காலமாக பல்வேறு துயர் சமபாவங்கள் நடந்து கொண்டு தான் இருக்கிறது. அதிலும் குறிப்பாக பல்வேறு பிரபலமான நடிகர்களின் மரணம் தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. கடந்த சில நாட்களுக்கு முன்னர் நடிகர் விவேக் காலமாகி இருந்தது தமிழ் திரையுலகை பெரும் சோகத்தில் ஆழ்த்தியது. அவரை தொடர்ந்து கே வி ஆனந்த், பாண்டு என்று பலர் காலமான சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது. இப்படி ஒரு நிலையில் பிரபல காமெடி நடிகரான நெல்லை சிவா சமீபத்தில் காலமாகியுள்ளார்.

தமிழ் சினிமாவில் பாண்டியராஜ் ஹீரோவாக அறிமுகமான ஆண்பாவம் திரைப்படத்தின் மூலம் அறிமுகமானவர் காமெடி நடிகர் நெல்லை சிவா அதன் பின்னர் தமிழில் பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார் குறிப்பாக இவர் நடித்த வெற்றிக்கொடிகட்டு திருப்பாச்சி போன்ற திரைப்படங்கள் இவருக்கு பெரும் பிரபலத்தை ஏற்படுத்திக் கொடுத்தது. நெல்லை தமிழில் பேசிய சிவா காமெடி நடிகரான விவேக் மற்றும் வடிவேலுடன் இணைந்து பல்வேறு படங்களில் நடித்திருக்கிறார்.

இதையும் பாருங்க : இந்த கைல சாப்புடுறோம், இந்த கையிலை – அர்ச்சனாவின் பாத் ரூம் வீடியோ குறித்து சூர்யா தேவி வெளியிட்ட வீடியோ.

- Advertisement -

அதிலும் குறிப்பாக வடிவேலுவுடன் இணைந்து நடித்த ‘கிணத்தை காணோம்’ காமெடி ரசிகர்கள் மத்தியில் மிகவும் பிரபலம் தான். இதுவரை 500க்கும் மேற்பட்ட தமிழ் படங்களில் நடித்துள்ளார். நெல்லை தமிழ் தான் இவரது பிளஸ் என்பதால் இவர் வேறு எந்த மொழிப்படங்களிலும் நடித்தது கிடையாது. தொடர்ந்து படங்களில் நடித்து வந்த இவர் இவர் விஜய் தொலைக்காட்சியில் வெற்றிகரமாக ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் தொடர் மூலம் சீரியலிலும் அறிமுகமானார்.

அதேபோல தொடர்ந்து திரைப்படங்களிலும் நடித்து வந்தார். இறுதியாக இவர் திரிஷா நடிப்பில் வெளியான பரமபதம் படத்தில் நடித்திருந்தார்.ஊரடங்கு காரணமாக, திருநெல்வேலி மாவட்டம் பனங்குடியில் இருந்த அவர், மாரடைப்பு ஏற்பட்டு இயற்கை எய்தினார். இவரது இறப்பிற்கும் பல்வேறு பிரபலங்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். விவேக், பாண்டு இறப்பை தொடர்ந்து தற்போது இவரது இறப்பும் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

-விளம்பரம்-
Advertisement