விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் டிஆர்பியில் முன்னிலையில் இருப்பது “பாண்டியன் ஸ்டோர்ஸ்”. இந்த சீரியலின் முதல் பாகம் அண்ணன் தம்பிகளுக்கு இடையேயான பாசக் கதையை மையமாக கொண்டது. தற்போது பாண்டியன் ஸ்டோர்ஸ் 2- தந்தை சொல் மிக்க மந்திரம் இல்லை சீரியல் ஒளிபரப்பாகி வருகிறது. இரண்டாவது சீசன் அப்பா- மகன்களுக்கு இடையேயான உறவை வைத்து இருக்கிறது. மேலும், பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியலில் மீனாவின் தந்தையாக நடித்துக் கொண்டிருப்பவர் ரவிச்சந்திரன்.

இவர் இந்த சீரியலுக்கு முன் பல சீரியல்களில் நடித்து இருக்கிறார். அதோடு இவர் நிறைய படங்களில் குணச்சித்திர வேடங்களில் நடித்து இருக்கிறார். இவர் கும்பகோணத்தை சேர்ந்தவர். இவர் ஆரம்பத்தில் மசாலா கம்பெனி ஒன்றை நடத்தி வந்து இருந்தார். ஆனால், அந்த தொழிலில் பெரிய நஷ்டம் ஏற்பட்டு சொந்த ஊரை விட்டு கிளம்பி வேலை தேடி சென்னை வந்தார் ரவிச்சந்திரன். பின் நண்பர்கள் மூலம் தான் இவர் பல விளம்பர படங்களில் நடித்து இருந்தார். அப்படியே அவருக்கு டிவி, சினிமா என்று வாய்ப்புகள் வந்தது.
பாண்டியன் ஸ்டோர்ஸ்:
தற்போது இவர் விஜய் டிவியில் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2, சன் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மருமகள் என்ற தொடரில் நடத்து வருகிறார். இப்படி இருக்கும் நிலையில் பாண்டியன் ஸ்டோர்ஸ் சீரியல் நடிகர் ரவிச்சந்திரனுக்கு ரெட் கார்ட் கொடுக்கப்படுவதாக ஒரு பேச்சு வார்த்தை எழுதி இருக்கிறது. இது தொடர்பாக அளித்த பேட்டியில் ரவிச்சந்திரன், டிவி நடிகர் சங்கத்தின் நிர்வாக குழுவில் இருந்து ஒருவர் சில தினங்களுக்கு முன்பு எனக்கு போன் செய்து இருந்தார்கள்.

ரவிச்சந்திரன் ரெட் கார்ட் விவகாரம்:
அந்த நபர், சார் நீங்க ஒரு சீனியர் நடிகர். இருந்தாலும் இன்னும் நீங்கள் நடிகர் சங்கத்தில் உறுப்பினராகாமல் இருக்கிறீர்கள். அதனால் உடனே சங்கத்தில் சேர்ந்து கொள்ளுங்கள் என்று சொன்னார். அதற்கு நான், சீரியல் நடிகர்களுக்கு இன்று நிறைய பிரச்சனைகள் இருக்கிறது. தமிழ்நாட்டை சேர்ந்த சீரியல் நடிகர்கள் பல பேருக்கு இன்றும் வேலை வாய்ப்பு இல்லாமல் வருமானத்திற்கு வழி இல்லாமல் கஷ்டப்பட்டு கொண்டிருக்கிறார்கள்.

ரவிச்சந்திரன் பேட்டி:
அவர்களுடைய பிரச்சனைகளுக்கு எல்லாம் இந்த சங்கங்கள் உருப்படியாக எந்த ஒரு பதிலும் சொல்லவில்லை. அதனால எனக்கு இந்த சங்கத்தின் மீது எப்பவுமே நம்பிக்கை வந்ததில்லை. ஹீரோ ஹீரோயினி மட்டுமில்லாமல் அப்பா, அண்ணன் கதாபாத்திரத்திற்கு கூட இன்று உள்ளூர் நடிகர்களுக்கு வாய்ப்பு தராமல் பக்கத்து மாநிலங்களில் இருந்து நடிகர்களை கூப்பிட்டு வருகிறார்கள். இந்த நிலைமையை மாற்ற சங்கம் முதலில் ஏதாவது செய்ய வேண்டும். அதற்கு பிறகு நான் உறுப்பினர் ஆவதை பற்றி யோசிக்கிறேன் என்று சொன்னேன்.

டிவி சங்கத்தினர் சொன்னது:
உடனே அந்த நபர், இது ரொம்ப தப்பு சார். நீங்க இந்த மாதிரி பேசிட்டே இருந்தீங்கன்னா ரெட் கார்டு கொடுத்திடுவாங்க. தேவையில்லாமல் சிக்கலை சந்திக்க வேண்டாம் என்று சொன்னார். அதற்கு நான், ரெட் கார்டு தானே தாராளமாக கொடுங்கள். எதுவாக இருந்தாலும் நான் சட்டம் மூலமாக பார்த்துக்கொள்கிறேன். உங்களுக்கு ஒரு சட்டம் இருக்கு, அதுக்குள் என்னை கட்டுப்படுத்த முடியாது. ஒரு இந்திய குடிமகனாக எனக்கு பிடித்த எந்த ஒரு வேலையும் செய்ய எனக்கு உரிமை இருக்கு என்று சொன்னதுமே அவர் போனை வைத்து விட்டார். சங்கத்தில் சேரவில்லை என்றால் ரெட் கார்டு கொடுப்பதெல்லாம் கொஞ்சம் ஓவரா இல்லையா? என்று கூறியிருக்கிறார்.






